சிறுத்தை என்று எது வுமே இல்லை. வெள்ளை கலந்த மஞ்சள் நிறம் என்னும் பொருள் கொண்ட, புலியைக் குறிக்கும் pan darah என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து இந்த சொல் வந்திருக்கலாம்.
கிரேக்கர்கள் இச் சொல்லைக் கடன் வாங்கி அனைத்து விலங்குகளும் என்ற பொருள்படும் pan thera என்ற சொல்லை உருவாக்கிக் கொண்டனர். உண்மையான மற்றும் கற்பனையிலான விலங்குகளைக் குறிப்பிட அவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்திக்கொண்டனர்.
இடைக்காலத்தில் இருந்த குலமரபுகளைப் பற்றி ஆய்வு செய்யும் இயலில், ஒரு பெருந்தன்மையான, பல நிறங்களையும், நறுமணம் மிகுந்த வாசத்தையும் கொண்ட ஒரு விலங்கு என்று panther காட்டப்பட்டிருக்கிறது.
அறிவியல்படி பேசினால், பூனை இனத்தில் மிகப் பெரிய நான்கு விலங்குகளும் சிறுத்தைகளே (panthers) ஆகும்.
சிங்கம் panthera leo எனப்படும், புலி panthera tigris எனப்படும், சிறுத்தை panthera pardus எனப்படும் (பூனையைப் போன்ற இறைச்சி உண்ணும் பெரிய விலங்கான) ஜாகுவார் panthera onca எனப்படும். கர்ஜிக்க அல்லது உறும இயன்ற பூனை இனங்கள் இவை மட்டுமே.
சிறுத்தைகள் என்று பெரும்பாலான மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் விலங்குகள் உண்மையில் ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் உள்ள கறுப்பு புலிகள் அல்லது தென் அமெரிக்காவில் வாழும் ஜாகுவார் ஆகியவைதான்.
இந்த விலங்குகளில் எது ஒன்றும் முற்றிலும் கறுப்பு நிறம் கொண்டவை அல்ல. நெருக்கமாக கவனித்துப் பார்த்தால், அவற்றின் தோலின் மீதுள்ள புள்ளிகள் இப்போதும் மெல்லியதாகக் காணப்படும். அவை ஒரு மரபணு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. அவற்றின் தோல் மீது உள்ள கறுப்பு வண்ணம் ஆரஞ்சு வண்ணத்தை ஒளிராமல் செய்துவிடுகிறது.
அரிதாக காணப்படும் வெள்ளை சிறுத்தைகள் உண்மையில் அல்பினோ புலிகள் அல்லது ஜாகுவார்களே ஆகும்.
அமெரிக்காவில் மக்கள் சிறுத்தை panther என்று கூறும்போது, புமா என்னும் கோகர் (puma - cougar) என்ற பொருளிலேயே குறிப்பிடுகின்றனர். அவை காணப்பட்டன என்று மெய்ப்பிக்கப்படாத பல அறிக்கைகள் வெளிவந்திருப்பினும், அதனைக் கண்டவர் எவருமிலர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment