தமிழர்களே, திரள்வீர்!
சென்னை, ஜன.10- சென்னை பெரியார் திடலில் தை 1,2,3 ஆகிய நாள்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
தை முதல் நாளைத் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில் மூன்றுநாட்கள் (ஜனவரி 15 முதல் 17 வரை) சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் விழாக் கொண்டாடப் படுகிறது. இந்நிகழ்வில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைஞகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெறு கின்றன.
முதல் நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, கலை வாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார் கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி, ஒளி, நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.
இரண்டாம் நாள் பன்னீர் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண் டுக்கல் சரவணனின் கவனக நிகழ்ச்சி, ரோபோ சங்கரின் நகைச் சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.
இறுதி நாள் கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும் தஞ்சை செல்வி கலை குழுவின் கிராமியத் திரை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது வழங்கப் படுகிறது. நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பெருமக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப் படுகின்றன. இவ்விழாவினை திராவிடர் கழகத்தின் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பான தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்துகிறது. மூன்று நாட்களிலும் அறிஞர் பெரு மக்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
ஆரியப் புரட்டை முறியடிக்க, தமிழர் பண்பாட்டை மீட்க, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை உணர்வை ஊட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா.
தமிழர்களே, குடும்பம் குடும்பமாகத் திரள்வீர்! திரள்வீர்!!
No comments:
Post a Comment