கெயில் ஆம்வெத்
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் ஹசாரே இயக்கத்தின் தொடர்பு
பின்னோக்கிக் காணும் ஒரு தீர்க்கதரிசி என்று காந்தியை மீரா நந்தா அழைக்கிறார். ஹசாரேயின் காந்தியத்தைப் பற்றிப் பலரும் கேள்வி கேட்கக்கூடும். பல நேரங்களில் அவருள் ஆர்.எஸ்.எஸ். பற்றே அதிகமாக இருக் கிறது என்றே தோன்றுகிறது. இதை சிலர் மறுக்கக் கூடும் என்றாலும், அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இருக்கும் தொடர்பு தெளிவாகத் தெரிகிறது. ஆனால், தன்னிறைவு பெற்ற, உறுதியான நிலை கொண்ட கிராமத்தைத் தனது லட்சியமாக எடுத்துக்கொள்வதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹசாரே ஒன்று போலவே சிந்திப்பது தெளிவா கிறது.
பெருந் தீங்கிழைக்கும் கிராம சமூகங்கள் பற்றி காரல் மார்க்ஸ்
நாடகத்தனமான சில பரிசீலனை களை மேற்கொள்ள வேண்டிய நேரமிது. தன்னிறைவு பெற்ற கிராமம் என்பது இந்திய சமுதாயத்தில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது? இக்கருத்து குறித்து காரல் மார்க்ஸ் தனது அழகான சொற்களில் வெளிப் படுத்தியிருப்பதை நாம் நினைவு கூரலாம்.
லட்சியங்களைக் கொண்ட இந்த கிராம சமூகங்கள், பார்ப்பதற்கு தீங்கி ழைக்காதவை போல் தோன்றினாலும், உள்ளூர் சர்வாதிகாரத்துக்கான பலம் வாய்ந்த அடித்தளமாகவே எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன. எவ்வளவு குறுகிய வட்டத்துக்குள் மனித மனங் களை ஒடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு அவை ஒடுக்கிவைத்தன. மூடநம்பிக்கை களை எதிர்க்க முடியாதவைகளாக மனித மனங்கள் ஆக்கப்பட்டன; பாரம்பரிய விதிகளின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு, அனைத்து வரலாற்றுச் சாதனைகளும், பெருமைகளும் மறுக்கப்படுபவையாக ஆக்கப்பட்டன.
இவற்றையும், பரிதாபப் படக் கூடியபடி கையளவு நிலத்தின் மீது கவனம் செலுத்தும், விலங்காண்டித் தனமான தன்னுணர்வையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவை, பெரிய பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் சத்த மின்றி அழிந்ததற்கும், சொற்களால் கூறமுடியாத அளவு கொடுமைகள் விளைவிக்கப்பட்டமைக்கும், இயற்கை நிகழ்வுகள் தவிர வேறு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படாத - எவரிட மிருந்தும், எந்தவித உதவியும் கிடைக் காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இரை யாகிப் போன பெரிய நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக் கும் சாட்சியங்களாக இருந்துள்ளன.
எந்தவிதப் பெருமையும் அற்ற, முன்னேற் றமேயின்றி தேங்கி நிற்கும், குப்பையைப் போன்ற இந்த வாழ்க்கையில் எதையும் சகித்துக் கொண்டு உயிர் பிழைத்திருக் கும் தன்மை, மற்றவர்களிடம், அதாவது பழமை விரும்பிகளிடம் கட்டுப்பாடின்மை, நோக்கமின்மை, அளவில்லாத அழிவு ஆற்றல், கொலையே இந்துஸ்தானத்தின் மதச் சடங்கு என்னும் கோட்பாடு போன்ற எதிர்மறையான வேறுபாடுகள் உருவாகத் தூண்டுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
இச்சிறு சமூகங்கள் ஜாதி வேறுபாட்டு உணர்வினாலும், அடிமைத் தனத்தாலும் தாக்கப்பட்டு, மனிதனை சூழ்நிலைக்கு அதிகாரியாக உயர்த்து வதற்கு மாறாக, புற சூழ்நிலைகளுக்கு அவனை அடிமைப்படுத்தி, தானாக வளர்ச்சி அடைய இயன்ற ஒரு சமூகத் தினை, எப்போதுமே எந்த வித மாற்றமும் அற்றவாறு இயற்கை அழிவை நோக்கி செலுத்தும், அதன் மூலம் இயற்கையை வணங்கும் ஒரு விலங்காண்டித் தன் மையைக் கொண்டு வந்து, இயற்கையின் எஜமானனாக இருக்க வேண்டிய மனி தனை, அனுமான் என்ற குரங்கின் முன்னும், சபலா என்னும் பசுவின் முன்னும் மண்டியிடச் செய்து மனிதனின் இழிநிலையை வெளிப்படுத்தியதையும் நாம் மறந்துவிடக்கூடாது. உள்ளூர் சர்வாதிகாரம் மற்றும் அதன் ஆசிய வழித் தயாரிப்பு என்னும் மார்க்சின் கோட்பாட்டை ஆதரித்து முர்சாபான்ஜான் வாதாடியதன் அடிப் படை இதுதான். தன்னிறைவு பெற்ற கிராமம் கட்டுப்பாடற்ற விதிக்கு ஓர் அடித்தளத்தை அளித்துள்ளது.
இந்த தன்னிறைவு பெற்ற கிராமத் தைத்தான் மறுபடியும் உருவாக்க வேண்டும் என்று ஹசாரே விரும்புகிறார். அது போன்ற ஒரு சமூகத்தை அவர் ராலேகான் சித்தி கிராமத்தில் உருவாக்கி யுள்ளார். அவரே அதன் சர்வாதிகாரி. தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகங்கள் அந்த கிராமத்தை சுதந்திர மாக அணுகி, தாங்கள் அறிந்தவைகளை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி வெளிப் படுத்த முடியாது. அக்கிராமத்தின் கடவுளைப் போன்றவர் அவர்.
அங்கு எழும் வழக்குகளை எல்லாம் தீர்த்து வைப்பவர் அவர். பட்டினிப் போராட்டத் தின் மூலம் மக்களின் பெயரால் பேசக் கூடியவர் அவர் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. (வேறு எவராவது ஹசாரேவுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் மேற்கொள்ள முயன்றால் காவல்துறை உடனே அழைக்கப்படுகிறது என்று முகுந்த் சர்மா குறிப்பிடுகிறார். இதன்படிதான் ஹசாரே கைதுக்கு காங்கிரஸ்தான் ஏற்பாடு செய்தது என்ற கண்டனமும் எழுந்தது.)
ஜாதி ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்துவதே ஹசாரே இயக்கத்தின் நோக்கம்
ஜாதி பாகுபாட்டு உணர்வால் தாக் கப்பட்டு என்னும் இக்கண்ணோட் டத்தை, பாரம்பரியவரிசைப் படியான ஜாதிக் கடமைகள் கொண்ட தன்னிறைவு கொண்ட கிராமம் என்ற கோட்பாட்டுடன் ஹசாரே மிகவும் வெளிப்படையாக இணைத்துள்ளார். கிராமத்தில் ஒவ் வொரு ஜாதியினரும் ஆற்றவேண்டிய கடமைகளை அவர்களின் ஜாதிப் பெயர் களைப் பயன்படுத்தி அவர் குறிப்பிட் டுள்ளார்.
நவீன ஊடகங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வரையறைகளிலிருந்து ஹசாரேயின் பிரச்சாரம் எந்த அளவு பயனடைந்திருந்தாலும் சரி, தேக்கம் மற்றும் பாரம்பரியம் என்னும் அழுக்குக் குட்டைகளில் அமிழ்ந்து போக ராலேகான் சித்தி கிராம மக்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். எல்லா காரியங்களையும் நடத்திச் செல்ல இந்தப் பெரிய மனிதர் மீதான ஒரு நம்பிக்கையை அது அளித் துள்ளது. பாரம்பரியமான நிலைத்தன்மை அல்லது தேக்கம் என்பதை வெளியில் இருந்து திணிக்கப்பட்டஒரு சர்வாதி காரியின் ஆட்சி என்பதுடன் மார்க்ஸ் இணைத்தது சரியானதே.
பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டு வரும் ஒரு கிராமத்தை தனது அடித் தளமாகக் கொண்டு இந்தியஅரசியல் களத்தில் செயல்பட்ட ஒரு முக்கியமான புள்ளியாக ஹசாரே இருக்கக்கூடும். அந்த அரசியலின் உள்ரகசியமே ஜாதி ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்துவதன் மீது சார்ந்து உள்ளது. எனவே தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களும் லோக்பாலை உறுதியாக எதிர்ப்பது என்பது ஏதோ தற்செயலாக நடந்தது அல்ல. அவரது கிராமத்தின் பாதுகாவலர் அல்லது சர்வாதிகாரியாக ஹசாரே எப்படி விளங்குகிறாரோ, அப் படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி களின் ஊழல்களில் இருந்து இந்திய பாமர மக்களைக் காப்பாற்றும் பாது காவலனாக லோக்பால் இருக்க வேண் டுமாம்!
மக்களாட்சி முதிர்ச்சி அடைய அடைய ஊழல்கள் ஒழிந்து போகும்
பின் ஊழல் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது? அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நவீன சமூகங்களும் பெரும் அளவிலான ஊழல்கள் நிறைந்த காலங்களைக் கடந்துள்ளன என்பதுதான் உண்மை. மக்களாட்சி நடைமுறைகள் மக்களிடையே இரண்டறக் கலந்து, தங்களின் இயல்பான நிலையை அவர்கள் கண்டு கொள்ள சிறிது காலம் ஆகத்தான் செய்யும். 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக் காவில் லஞ்ச ஊழல் பெரும் அளவில் நிலவியது.
தற்போது அது பெரும் அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் ஊழலில் ஈடுபட்ட இல்லினாயிஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநருக்குக் கடுமையான சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இங்கி லாந்திலோ அல்லது மற்ற அய்ரோப்பிய நாடுகளிலோ அது தேர்தல்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
மக் களாட்சியைப் புதியதாகக் கடைப்பிடிக்கும் ருசிய நாடு, தேர்தலில் வெற்றி பெற தவறான வழிகளைக் கடைப்பிடிக்கும் ஒரு காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பிரச்சினைகள் எல்லாம் சட்டம் இயற்றப்பட்டு லோக் பால் போன்ற பாதுகாவலர்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை; பொது மக்களின் விழிப்புணர்வாலும், பொது மக்களின் செயல்பாடுகளினாலும்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடும் லோக் பால்கள் சமூகத்தின் கீழ்மட்ட நிலைகளில் தோன்ற வேண்டும். நாடாளுமன்றத்தை விட உயர்ந்த, நாடாளு மன்றத்துக்கு வெளியே இருக்கக் கூடிய ஒரு லோக்பால் அல்ல.
லட்சக்கணக்கான லோக்பால்கள் தேவைப் படுகின்றன. தேவைப்பட்டால் மக்களும் தெருவில் இறங்கிப் போராடவேண்டும். ஏற்கெனவே இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் வீட்டில் பாம்புகளை விட்ட மக்களைப் பற்றி நாம் செய்தித் தாள்களில் படித்திருக்கிறோம். அத்தகைய நேரடியான செயல்களால் மட்டுமே லஞ்ச ஊழல்கள் குறையுமேயன்றி, பாதுகாவலரால் அல்ல, தன்னிறைவு பெற்ற கிராமத்தால் அல்ல.
ஜாதியின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு சமூகத்தை ஆங்கிலேய ஆட்சி உடைத்தது
ஆங்கிலேய ஆட்சியின் குற்றங்களும், கொடுமைகளும் என்னவாக இருந்தாலும், மக்களிடையே ஜாதியின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு சமூகத்தை உடைத்ததன் மூலம் தங்கள் செயல்களை அவர்கள் நியாயப் படுத்தியுள்ளனர் என்று தனது கட்டு ரையை மார்க்ஸ் முடித்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்துஸ்தானத்தில் இங்கிலாந்து புரட்சி செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் மிகவும் வெறுக்கத்தக்க சுயநல நோக்கங்களினால் அது மேற்கொள்ளப் பட்டது. அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிகளிலும் அது முட்டாள்தனமாக நடந்து கொண்டது.
ஆனால் இப்போது இருப்பது அந்தக் கேள்வியல்ல. தற்போது நம் முன் உள்ள கேள்வி இதுதான்: ஆசிய நாடுகளின் சமூகங்களில் அடிப்படையான ஒரு புரட்சி ஏற்படாமல், மனிதகுலம் தனது எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்ள முடியுமா என்பதுதான். அப்படி இல்லாத நிலையில், இங்கிலாந்து நாட்டின் குற்றங் கள் என்னவாக இருந்தாலும் சரி, அந்தப் புரட்சியைக் கொண்டு வருவதற்கு தாங் கள் அறியாமலேயே அவர்கள் வரலாற்றின் கருவியாக இருந்துள்ளனர்.
ஒரு லோக்பால் அல்ல; ஒரு ஆசிய சர்வாதிகாரி அல்ல. ஆனால் ஜாதி மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு புரட்சிதான் தேவைப்படுகிறது.
ஹசாரேயால் ஊழல்வாதி எனக் கருதப்படும் சரத்பவார், ஊழல்வாதியாக இருந்தாலும், ஜாதி மற்றும் பெண்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளில் முன் னேற்றமான கருத்துகளைக் கொண்டிருப் பவர்தான்.

(நன்றி: கவுன்டர் கரன்ட்ஸ் 31.12.2011
தமிழில்: த.க.பாலகிருட்டினன்)
(நிறைவு)
No comments:
Post a Comment