Saturday, January 21, 2012

மனுவாத ஆட்சியைக் கொண்டு வருவதே அன்னா ஹசாரேயின் நோக்கம் 2


கெயில் ஆம்வெத்
உண்மையான புரட்சி எதுவென்றால்,  தகுதி அடிப்படையிலான மனுவின் சமூக அமைப்பு முறைக்குத் திரும்புவதுதான் என்று கூறுகிறார். இடஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவர் பிறப்பின் அடிப் படையில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று கோருவதை நம்ப முடியவில்லை. ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் தான். பொதுப் பிரிவில் வந்தவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு துன்பமடை பவர்கள் என்று பரத்வாஜ் வாதாடு கிறார்.

இது ஒரு அதிர்ச்சி தரும் அறி விப்பாகும். பிறப்பால் சலுகை அளிக்கும் பழைய மனுவின் நடைமுறைக்கு எதிராக செயல்படத் தயாராக இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றைய மக்களாட்சி இயக் கத்தின் ஒரு பெரும் பங்காக விளங்கு வதை பழைய நடைமுறையால் பயன டைந்து வந்தவர்கள் வெறுக்கின்றனர்.

பிறப்பால் சலுகை அடைந்து வந்த பழைய மனுநடைமுறையில் வந்தவர்கள்,  ஊழல் என்ற ஒரே பிரச்சினையின் மீது மக் களின் கவனத்தைத் திசை திருப்ப, அன்னா ஹசாரே இயக்கத்தின் செயல் பாடுகளை,  ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர்; இந்த ஊழலுக் கெல்லாம் காரணம் இடஒதுக்கீட்டு நடைமுறையே என்று கூறுவதுதான் இந்த இயக்கத்தின் பின்புலத்தில் உள்ள அவர்களது மறைமுகத் திட்டம்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாதது பற்றி டாக்டர் அம்பேத்கர் 

ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பது என்பதை நாடாளு மன்றம் பரிசீலனை செய்து வருகிறது என்ற உண்மையும், இந்திய மனுவாதி களை கவலைப்படச் செய்யும் ஒன்றாக விளங்குகிறது. ஜாதிப் பிரிவினைகள் உண்மையிலேயே இல்லை என்றும், ஜாதிப் பாகுபாடுகள் தானாகவே அழிந்து போய்க்கொண்டிருக்கிறது என்றும் கூறி பாசாங்கு செய்ய முயல்வது என்று பல பத்தாண்டு காலமாகக் கடைப் பிடிக்கப் பட்டு வரும் பழைய கொள்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு மாற்றமாகும் இது.

ஜாதிவாரி மக்கள் தொகையைக் கணக்கெடுக்காமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை  சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மேற் கொண்ட போது, அப்போதிருந்த உள் துறை அமைச்சர் பற்றி குறிப்பிட்ட டாக்டர் அம்பேத்கர், அகராதியில் ஒரு சொல் இடம் பெறாமல் போனால், அந்தச் சொல் குறிப்பிடும் உண்மையும் இல்லாமல் போய்விடும் என்று நமது உள்துறை அமைச்சர் கருதித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுக்கும்போது ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வில்லை போலும்;

இத்தகைய சில்லறைத் தனத்தைப் பேரறிவு என்று எண்ணிக் கொள்வதைக் கண்டு பரிதாபப்படத்தான் வேண்டும் என்று மிகச் சரியாகக் கூறினார்.  ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வதன் மூலம் மட்டுமே, அதனைத் தீர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க முடியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மேல்ஜாதியினரை, தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு மேலாக வைக்க வேண்டுமாம்!

சிவில் சமூகம் பற்றி ஹசாரே பேசுகிறார். ஆனால் மார்க்சிஸ்ட் கண் ணோட்டத்தில் சிவில் சமூகம் என்பது எண்ணற்ற ஜாதிகள், பிரிவுகள், பாலினங் கள் உள்ளடங்கியதாகும். மேல்தட்டு மக்களின் சிவில் சமூகம் என்பது உழைக்கும் மக்களின் சிவில் சமூகத்தி லிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

இந்தியாவில் மக்களாட்சி முறை குறைந்த அளவிலேனும் வளர்ந்து வருவதைக் கண்டு சோர்வடைந்து போன இந்த மேல்தட்டு மக்கள், அதிலிருந்து தப்பி, நாடாளு மன்றத்தைக் கடந்த, பழைய, கேள்வி முறையற்ற ஆட்சி முறைக்கு இந்த லோக்பால் கருத்தின் மூலம்  திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

உண்மையைக் கூறுவதானால், உயர்ஜாதி பின்னணி கொண்ட, மக்களால் தேர்ந்து எடுக்கப்படாதவர்களை, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், அரசு, அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் மேலாக வைக்க வேண்டும் என்று கூறும் இந்த லோக்பால் மசோதா என்பது பெரும் சர்வாதிகார  எண்ணம் கொண்ட கருத் தாகும். (ஆனால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மேலாக லோக்பால் இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை என்பதை மக்கள் கவனித் துள்ளனர்.) பால் என்றால் பாதுகாவலன் என்று பொருள். பாதுகாவலர்கள் - தத்துவஞானிகள்-அரசர்கள் நாட்டை ஆளவேண்டும் என்ற பிளாட்டோவின் கருத்தை இத் திட்டம் நினைவுபடுத்து கிறது.

வருண நடைமுறை போன்ற ஒன்றில் பிளாட்டோ நம்பிக்கை கொண் டிருந்தார். அரசருக்கு தங்கம், போர்வீரர் களுக்கு வெள்ளி, விவசாயிகளுக்கு வெண்கலம் மற்றும் இரும்பு என்றவாறு மக்கள் சில சிறப்பு சாரங்களைப் பெற்றி ருக்கக் கூடும் என்பது பிளாட்டோவின் கருத்து.

ஒரு ராணுவ சர்வாதிகாரி போலவே ஹசாரே ராலேகான் சித்தி கிராம நிர்வாகத்தை நடத்துகிறார்
அன்னா ஹசாரே பற்றிய உண்மை களை நாம் ஆழ்ந்து கவனித்தால் இதனைக் காண இயலும்.  ஹசாரேயின் கிராமமான ராலேகான் சித்தி பற்றி முகில் சர்மா என்பவர் மேற்கொண்ட ஆய்வு இதனைக் காட்டுகிறது.  ஒரு ராணுவ சர்வாதிகாரி போலவே ஹசாரே தனது கிராம நிர்வாகத்தை நடத்துகிறார். (உண்மையில் அவரது பின்னணி இராணு வப் பின்னணிதான்). குடிகாரர்கள் சவுக்கால் அடிக்கப்பட வேண்டும். ( தேசிய அளவிலும் இது பின்பற்றப்படுவதைத் தான் காண விரும்புவதாக ஒரு நேர்காணலில் ஹசாரே கூறியுள்ளார்). 

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமர், ஒரு சுனர், ஒரு குமர் இருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் விருப்பம். அவர்கள் அனை வரும் அவர்களின் தொழிலைச் செய்து, அவர்களின் பங்கினை ஆற்ற வேண்டும். இந்த வழியில் ஒரு கிராமம் தன்னிறைவு பெற்றதாக இருக்கும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் கடைப் பிடித்து வருகிறோம் என்று ஹசாரே தன்னைப் பற்றி பெருமையாகக் கூறிக் கொள்கிறார்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...