Sunday, December 11, 2011

மேதாவிகளின் கேள்வியும் - அய்யாமுத்துவின் பதிலும்


பார்ப்பனனைக் குறை சொல்வானேன்? கொடைக்கானல் பார்ப்பனன் பஞ்சு மெத்தை போட்டு, காலாள், கையாள்களோடு மோட்டார் வாகனத்தில் குடும்ப சகிதமாய் சுகபோகமனுபவிப்பதைக் கண்டு பொறாமை கொள்வதும், வக்கீல் பார்ப்பனன் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொள்ளையடிப்பதைக் கண்டு துவேஷப்படுவதும், சிம்லாப் பார்ப்பனன் துரைபோல சட்டை மாட்டி, மேஜை மீது உட்கார்ந்து விஸ்கி, பிராந்தி, ஒயினோடு சாப்பிடுவதையும் கண்டு ஆத்திரப்படுவதும் கூடாது, பார்ப்பனரல்லாத நீங்களும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்.
பார்ப்பனனை நிந்திக்கும் நேரத்தையும், திறத்தையும் நீங்கள் முன்னேற்றமடைவதில் செலவிடுங்கள் என்று யாரேனுமொரு மேதாவி கூறலாம்.
கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், சாதி ஆகிய சகலமும் பார்ப்பனர்களாலே பார்ப்பனர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டன. இதில் பார்ப்பனர்கள் முன்னேறுவதற்கு  சகல உரிமைகளுமுண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைவதற்கு இப் பார்ப்பனக் கடவுள்களும், மதமும், சாஸ்திரங்களும், சாதிகளும் இடங் கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றன.
மனிதன் பிறப்பினால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கொள்கையும், ஒரு மனிதனைப் பிற மனிதன் கண்ணால் பார்க்கக்கூடாது என்ற கொள்கையும் இருக்கும் வரையில் மக்கள் எப்படி முன்னேற முடியும்?
இவ்விருபதாம் நூற்றாண்டிலும் நாகரிகம் வாய்ந்த ஆங்கில துரைத்தனத்தின் ஆதினத்தின் கீழுள்ள பக்தி சிரத்தையுள்ள மைசூர் மன்னரின் நாட்டிலுள்ள பண்டிதப் பார்ப்பனன் சமஸ்கிருத வியாகரணத்தைப் பார்ப்பனர் அல்லாத ஏனைய மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க; மறுத்தனன் என்றால் என்னே பார்ப்பனக் கொடுமை! மக்களின் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கையைக் காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானித்தவுடன்  ஒப்போம்! ஒப்போம்!! என வெளியேறிய ராஜகோபாலாச்சாரிகளை வைத்துள்ள பிராமணியத்தின் கொடுமையை அளவிட்டுக் கூறமுடியுமா? (அய்யாமுத்து கட்டுரைகள் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 5,6,-7)
அய்யாமுத்துவை பெரியாருக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தும் பார்ப்பனர்களே, அய்யாமுத்துவின் இந்தக் கட்டுரை கசக்கிறதா - இனிக்கிறதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...