Sunday, December 11, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்...(6)


திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்
தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர்
அருணாஅரசுகோ பாவேந்தன்
(6) சென்னை லாண்டு என்க்ரோச் மெண்ட் ஆக்ட் ஏற்படுவதற்கு 12 வருஷத்துக்கு முன்னால் உள்ள என்க்ரோச்மெண்டுகளை ஒன்றும் தொந்தரவு செய்யக் கூடாது.
(7) ரெமிஷ்ஷன் கேட்க பெட்டிஷன் வேண்டுமென்று நிர்பந்திக்க வேண்டு வதில்லை.
(8) ஏப்ரல் மாதம் முப்பதாந் தேதிக்குள் எந்த க்ராமத்து ஜனங் களாவது பாசனவாய்க்காலை வெட் டுதல் முதலியன செய்யாவிட்டால் ரெவின்யூ உத்யோகஸ்தர்கள் குடி மராமத்து ஆக்டை அமலுக்குக் கொண்டு வரவேண்டும். மேற்சொன்ன யோசனையை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வர அந்தக் குடி மராமத்து ஆக்ட்டை தகுந்தபடி மாற்ற வேண்டும்.
(9) க்ராம பஞ்சாயத்துகள் - க்ராம பஞ்சாயத்து விஷயமாய் டீஸென்ட் ரலைஸேஷன் கமிஷனுடைய ஆலோ சனைகளை கவர்ன்மெண்டார் சீக்ரம் அனுஷ்டானத்துக்குக் கொண்டுவர வேண்டும். தங்கள் க்ராமத்திலுள்ள பாசன வாய்க்கால்களை ரிபேர் செய் தும், ஸரிபார்த்தும் வர பஞ்சாயத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
(10) ஸ்தல சுய ஆட்சி
(அ) லோகல் போர்டு ஸம்பந்தமான நிருவாக ரிபோர்ட்டுகள், வரவு செலவு கணக்குகளுடன், தமிழில் கெஜட் டுகளில் ப்ரசுரம் செய்யப்பட வேண்டும்.
(ஆ) தாலுகா போர்டுகளுக்கு வரவு செலவுகளில் அதிகாரம் அதிகமாகக் கொடுக்கப்படவேண்டும்.
(இ) ஜில்லா போர்டு, தாலுகா போர்டு வைஸ் ப்ரெஸிடெண்டுகள் உத்யோகஸ்தர் அல்லாதவர்களாய் எலக்டு செய்யப்பட வேண்டும்.
(ஈ) டிஸ்ட்ரிக்ட் போர்டுக்கு, தாலுகா போர்டுகளால் எலெக்ட் செய்யப்படும் மெம்பர்களின் தொகை எவ்வளவு அதிகப்படுத்தலாமோ அவ்வளவு அதிகப்படுத்த வேண்டும்.
(உ) ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒவ்வொரு போர்டு வேண்டும்.
(ஊ) க்ராமாந்தர ரோட்டுகளில் அதிகச் செலவு செய்யப்படவேண்டும்.
(எ) ஒவ்வொரு ஆற்றின் கரை களிலும் ரஸ்தாக்கள் போடவேண்டும்.
(ஏ) சூலமங்கலம், பாபனாசம் ரோட்டை கொள்ளிடம் வரையில் போடவேண்டும்.
(அய்) நாகப்பட்டினத்தில் ஒரு ஸத்ரம் கட்டவேண்டும்.
11. முனிஸிபல் சுய ஆட்சி: -
(அ) தஞ்சாவூர், கும்பகோணம் இரண்டிற்கும் சேர்மன் எலெக்ட் செய்து கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும்.
(ஆ) கும்பகோணம் மன்னார்குடியில் எலெக்டெட் மெம்பர்களின் தொகையை மொத்தத்தில் முக்கால்பங்கு வரையில் உயர்த்தவேண்டும்.
(இ) எந்த முனிஸிபாலிடியிலும், கவுன்ஸிலர்கள் மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை வார்டுகளால் ஏக காலத் தில் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். பழைய கவுன்ஸிலர்கள் விலகும் முன்னேயே புது கவுன்சிலர்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
(ஈ) ஒவ்வொரு கவுன்ஸிலிலும் ஒரு வைஸ்சேர்மன் இருக்க வேண்டும். அவருக்குப் ப்ரத்யேகமான சில வேலைகள் கொடுக்கப்படவேண்டும்.
(உ) முனிஸிபல் கவுன்ஸில்களுக்கு இன்னும் அதிக செலவு செய்வதற்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
(ஊ)முனிஸிபல் கவுன்லில்கள் வருஷாந்திர நிர்வாக ரிபோர்ட்டு களையும் வரவு -_ செலவு கணக்குகளை யும் தமிழிலும் வெளியிட்டு வரி செலுத்துவோருக்குக் கொடுக்க வேண்டும்.
(எ) சேர்மன் எலெக்ட் செய்ததை, விசாரிக்காமல் ஆக்ஷேபிக்கும் அதி காரத்தை கவர்ன்மெண்டார் விட்டு விடவேண்டும்.
12. கவுன்ஸிலில் டிவிஷனல் ஆபீஸர்:- முனிஸிபல் கவுன்சிலில் மெம்பராயிருப்பது அனாவச்யம்; உசிதமானதுமல்ல. ஏனென்றால் உத் யோகஸ்தர்கள் அல்லாத மெம்பர்கள் தங்களிஷ்டப்படி தங்கள் அபிப் ராயத்தைச் சொல்வது கவுகரியமா யிருக்கிறது என்று இப்படிப் பல தீர்மானங்கள் செய்யப்பட்டன.
டாக்டர் நாயரின் ப்ரஸங்கம்
போன மாஸத்தில் பட்டுக் கோட்டையில் நடந்த தஞ்சாவூர் ஜில்லா கான்பரென்ஸில் அக்ராஸ னாதிபதியாயிருந்த டாக்டர் நாயர் செய்த ப்ரஸங்கத்தில் அவர் தஞ்சாவூர் ஜில்லாவின் நீர்ப்பாசனத்தைப்பற்றிச் சொன்னதை போன மாஸத்து ஸஞ்சிகையில் ப்ரசுரித்தோம். இன்னும், வேலையாட்கள் அக்கரைச் சீமைக்குப் போதல், கல்வி, ஸ்தல சுய ஆட்சி, இவைகளைப்பற்றி டாக்டர் நாயர் பேசியதைச் சுருக்கி கீழே எழுதுகிறாம்.
வேலையாட்கள் அக்கரைச் சீமைகளுக்குப் போதல்
தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து வேலையாட்கள் அக்கரைச் சீமை களுக்கு போவது பொருளாதார நிலைமையை உத்தேசித்து மிகவும் கெடுதலானது. தேசம் முழுவதும் ஜனங்கள் வெளிதேசங்களுக்குக் குடி யேறிப் போகிறார்கள்.
அவர்களோடு தஞ்சாவூரார்களும் போகிறார்கள் என்பதல்ல. தஞ்சாவூர் ஜில்லா ஜனங்கள் வேறு நாடுகளுக்குக் குடி யேறிப் போவது ஸாதாரணமானதல்ல. ஸென்ஸெஸ் ரிபோர்ட்டுகளிலிருந்து சில கணக்குகள் எடுத்துக்காட்டினால் நான்றாய்த் தெரியவரும். தஞ்சாவூர், தென்னாற்காடு இந்த ஜில்லாக்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளு வோம். இந்த இரண்டு ஜில்லாக்களும் ரொம்பப் பக்கமாயிருப்பவைகள். அவைகளின் ஜனத்தொகை அநேகமாய் ஸமமாகவே இருக்கிறது. தஞ்சாவூர் ஜில்லாவில் 23,62,689 ஜனங்கள் இருக்கிறார்கள். தென்னாற்காட்டிலும் 23,62,566 பேர் இருக்கிறார்கள்.
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் 123 பேர்தான். சில வருஷங்களுக்கு முன்னால் இவைகளின் ஜனத்தொகை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
1911ஆம் வருஷம் 1901 1891.
தஞ்சாவூர் 23,62,689, 22,45,029, 22,28,114
தென்னாற்காடு 23,62,566, 21,05,809, 19,57,448
இதனால் என்ன தெரிகிறது? தஞ்சாவூர் ஜில்லா ஜனத்தொகை, 1891ம் வருஷ ஸென்ஸெஸில், 1,17,660 பேர் அதிகமாயும், அடுத்த ஸென்ஸஸில், 16,914 பேர் அதிகமாயும், 1911ஆம் வருஷ ஸென்ஸஸில் 1,34,575 பேர் அதிகமாயும் வ்ருத்தியாயிருக்கிறது.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...