வயலின் இசைக் கருவியின் தந்திகள் நிச்சயமாக பூனைகளின் குடல் நாளங்களினால் செய்யப்பட்டவை அல்ல.
கால்நடைகளின் குடல் நாளங்களைக் கொண்டு தரமான வயலின் தந்திகளைச் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடித்த இத்தாலி யைச் சேர்ந்த மத்திய கால வயலின் இசைக் கருவி தயாரிப்பாளர்களால் அவிழ்த்துவிடப்பட்ட ஒரு கட்டுக் கதைதான் இது. ஒரு பூனையைக் கொல்வது பெரும் கேட்டைக் கொண்டு வரும் என்று கருதிய அவர்கள் தங்களின் கண்டுபிடிப்பைப் பாதுகாப்பதற்காக, வயலின் கருவியின் தந்திகள் பூனையின் குடல் நாளங்களால் செய்யப்படுகின்றன என்ற பொய்யை பரப்பிவிட்டனர்.
பெஸ்காரா அருகே உள்ள சால்லே என்ற அப்ருஸி மலைக் கிராமத்தைச் சேர்ந்த குதிரை சேணம் தயாரிக்கும் எராஸ்மோ என்பவர் ஒரு நாள் காய வைக்கப்பட்டிருந்த ஆட்டின் குடல் கற்றையின் வழியாக வீசிய மலைக் காற்றின் ஒலியைக் கேட்டார். மறுமலர்ச்சி காலத்தில் பிடில் என்று அழைக்கப்பட்ட தொடக்க கால வயலினுக்கு ஆட்டின் குடல் நாளங்கள் நல்ல தந்திகளாக அமையக்கூடும் என்று அவர் சிந்தித்தார்.
கடந்த 600 ஆண்டு காலமாக வயலின் தந்தி தயாரிப்பின் மய்யமாக இந்த சால்லேதான் விளங்கினார். தந்தி தயாரிப்பாளர்களின் புரவலராகவே இந்த எராஸ்மோ புகழ் பெற்றிருந்தார்.
சால்லேயின் இந்த வியாபாரத்தை 1905 மற்றும் 1933 இல் நிகழ்ந்த நில நடுக்கங்கள் முடிவுக்குக் கொண்டு வந்தன. என்றாலும் இன்று உலகின் முன்னணி வயலின் தந்தி தயாரிப்பாளர்களாக டி.அட்ரியோ மற்றும் மாரி என்னும் நிறுவனங்கள் இன்றும் சால்லே குடும்பத்தினரால் நடத்தப்படுகின்றன.
1750 வரை அனைத்து வயலின்களிலும் ஆட்டின் குடல் நாளங்கள்தான் தந்திகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. சூடாக இருக்கும்போதே அந்த குடல் நாளங்கள் ஆட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதில் இருக்கும் கழிவுகள் அகற்றப் பட்டு, குளிர்ந்த நீரில் அமிழ்த்து வைக்கப்பட வேண்டும். அவற்றில் உள்ள மிகச் சிறந்த பகுதிகள் நீளமான ரிப்பன்களாக வெட்டப்பட்டு, முறுக்கப்பட்டு,தேவையான கனம் வரும் வரை தேய்க்கப்படுகின்றன.
இன்று அத்தகைய குடல் நாளங்களும், நைலான் மற்றும் தேனிரும்பு ஆகியவற்றின் கலவை இத்தகைய வயலின் தந்திகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெரும்பாலான வயலின் இசை வல்லுநர்கள் குடல் நாளங்களே மிக இனிமையான ஒலியை உருவாக்குவதாக இன்றும் நம்புகின்றனர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment