- மின்சாரம்
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலே தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன் பழகன் அவர்கள் ஆற்றிய உரை - இன மான எழுச்சியுரையாகும்- சுயமரியாதைச் சூறாவளியாகும் - பகுத்தறிவுச் சங்கநாத மாகும்.
சுயமரியாதை இயக்கம் என்றால், திராவிடர் இயக்கம் என்றால் கிள்ளுக் கீரை என்று நினைக்கும் மனிதர்களின் தலையைக் கிள்ளி எறியும் சூலாயுத மாகும்- கொச்சைப்படுத்தும் சக்திகள்மீது பாய்ந்த எரியீட்டியாகும்.
பார்ப்பானைப் பார்க்காதே! பூணூலை மதிக்காதே! உச்சிக் குடுமியை வணங்காதே!
-இவை நாங்கள் படித்த அரிச்சுவடி என்று மிக அழகாகச் சொன்னார்.
-இவை நாங்கள் படித்த அரிச்சுவடி என்று மிக அழகாகச் சொன்னார்.
ஏன் அப்படி சொன்னார்? ஆத்திரமாகப் பேசக்கூடியவரல்லர் அவர் - எந்த ஒரு சொல்லிலும் அறிவுக் கூர்மையிருக்கும்.
பார்ப்பானைப் பார்க்காதே என்றால் அவனைப் பிராமணன் என்ற கண்ணோட் டத்தில் காணாதே - அவனை வேண்டு மானால் மனிதனாகப் பார் என்று பொருள் - அதுவும் அவனிடத்தில் மனிதத்தன்மை கிஞ்சிற்றும் இருக்குமேயானால்!.
பூணூலை மதிக்காதே என்றால் அதன் பொருள் - அவன் தோளில் தொங்கும் அந்தத் திரி நூலை எடை போட்டுப் பார்த்து என்ன விலை என்ற கண் ணோட்டத்தில் அல்ல; அந்தப் பூணூலுக் குள் ஒளிந்திருக்கும் தத்துவம் நான் ஒரு பிராமணன் பிர்மாவின் நெற்றியில் உதித் தவன் -பூணூலை அணியாத நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் - எங்களது வைப் பாட்டி மக்கள் - எங்களுக்கு அடிமைச் சேவகம் செய்யப் பிறந்தவர்கள் என்று கூறும் ஒரு சின்னமாகும். அதனை மதிக் காதே என்பதுதான் அதன் உட்பொருள்.
உச்சிக்குடுமியை வணங்காதே- என்றால் உன்னைப் போல் அவனும் ஒரு மனிதன். அவனும் சாமி, கருவறைக்குள் இருக்கும் அந்தக் கடவுளும் சாமியா என்ற வினா வேலாகத் தொக்கி நிற்கிறது அந்தச் சொற்களில்.
அது இன்றைக்கும் பொருந்துமா என்று கேட்காதீர்கள். தாராளமாகப் பொருந்தும். இன்னும் அவன் நம்மை சக மனிதன் என்று நினைப்பதில்லை. பிராமணன் என்ற எண்ணத்தோடுதான் திரிகிறான். சிறீரங்கம் கோயில் கைசிக ஏகாதசி என்று கூறிக் கொண்டு தன்னைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கொக்கரிக்கின்றான்.
கோவில் கருவறைக்குள் பிர்மாவின் நெற்றியில் பிள்ளையாய்ப் பிறந்த (யார் பிரசவம் பார்த்தார்களோ!) நாங்கள்தான் செல்ல முடியும் - அர்ச்சனை செய்ய முடியும் - சூத்திரர்களாகிய நீங்கள் உள்ளே நழைந்தால் சாமி தீட்டாகிவிடும் என்று, திரிநூலை முறுக்கிவிட்டு, திமிராகப் பேசுகிறான். வைகனாச ஆகமத்தைத் தூக்கிக் கொண்டு போய் உச்சநீதிமன்றத் தில் (உச்சிக்குடுமி மன்றத்தில்) ஆதாரம் காட்டுகிறான். அவாளும் அதனை ஏற்றுக் கொண்டு தீர்ப்பு எழுதுகிறார்கள்.
தமிழ் நீசப்பாஷை என்கிறான் -சமஸ் கிருதம்தான் தேவபா(ட)ஷ என்கிறான்.
தமிழகத்தின் முதல் அமைச்சர் மானமிகு கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்கிறார் (இந்த வார்த்தையை தந்தை பெரியாரைப் பார்த்து ஆச்சாரியார் (ராஜாஜி) சொன்னதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்).
அப்படி என்கிறபோது பேராசிரியர் அவர்கள் நினைவூட்டிய அந்தச் சுயமரி யாதை அரிச்சுவடி இன்றைக்கும் தேவைப் படவில்லையா?
திராவிடர் கழகத் தலைவரைப் பற்றி ஏதோ இந்த டிசம்பர் இரண்டில்தான் இப் படிப் பேசினார் என்று கருத வேண்டாம்.
நமது ஆசிரியர் அவர்கள் பவள விழாவில் (75 ஆம் ஆண்டு) தலைமை வகித்துப் பேசிய கருத்தரங்கிலும் (1-12-2007) பேசியவை அனைத்தும் முத்திரைக் கற்கள்!
ஒரு வேளை எனக்கே கூட நான் திராவிட முன்னேற்றக் கழ கத்திலே இருக்கிற சூழ்நிலை இல்லாமல் இருந்திருக்குமே யானால், நான் ஒரு வேளை அண்ணா அவர்களிடத்தில் பழ காமல் இருந்திருந்தால், ஒரு வேளை கலைஞருக்கு உண்மை யான நண்பனாக இருக்க வேண்டுமே என்ற அந்த எண்ணம் ஏற்படாமல் இருந்திருக்குமே யானால், அப்படி எனக்கு ஏதோ சலிப்பு ஏற்பட்டு இருக்குமே யானால், நான் ஒரு வேளை வீரமணிக்குத்தான் போட்டியாக வந்திருப்பேன்.
நான் சொல்லுவது வார்த்தை யினால் தான் போட்டி; நடை முறையில் வீரமணியோடு என் னால் போட்டி போட முடியாது. காரணம் அவர் மற்றொரு கலைஞர். கலைஞர் எப்படி எதையும் திட்டமிட்டு செய்வாரோ, அதே போல எல்லாவற்றையும் திட்ட மிட்டுச் செய்கிறவர் வீரமணி என்று இன்றைக்கு நான்கு ஆண்டு களுக்கு முன் சொன்னவையெல் லாம் அக்மார்க் சொற்களே!
அந்த விழாவில் மேலும் ஒன்றை ஆழமாகப் பேராசிரியர் சொன்னது கவனிக்கத் தக்கதாகும்.
இந்த இயக்கத்தைத் தொடர்ந்து காப்பாற்றுவது அவ்வளவு எளிய காரிய மல்ல. இங்கே தா.பாண்டியன் அவர்கள் நகைச் சுவையாகச் சொன்னாரா அல்லது அரசியல் பேசினாரா? அது தெரியாது. அவர் சொன்னார். சட்டமன்ற உறுப்பின ராக இருக்க
ஆசைப் படாதவர்கள்
இங்கே வாருங்கள் என்று பெரியார் அழைத்தார் என்று சொன்னார். நாங்களே அதற்காகத்தான் திராவிடர் கழகம் வேண்டும் என்று நினைக்கிறோம். கொஞ்ச பேருக்காவது இந்த உணர்வு இருந்தால்தான் நாங்கள் மிச்சம் இருக்கலாம்.
வீரமணி தலைமை தாங்கும் இயக் கத்தை - திராவிடர் கழகத்தை நாங்கள் ஆதரிப்பதற்குக் காரணமே எங்களுக் கென்று இருக்கிற தொல்லைதான் - உணர்வு பூர்வமாக இந்தக் கொள்கையை மக்களிடத்திலே கொண்டு செல்வதற்கு ஒரு வழி என்று அன்று பேராசிரியர் பேசிய பேச்சு - காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கும். தந்தை பெரியார் கண்ட இயக்கத்தின் ஆழத்தை அருமை யாகச் சொன்னார் இனமானப் பேராசிரியர்.
திராவிட இனத்தவர்கள் இழிந்த நிலையில் இருந்தார்கள். தமிழர்கள் அறியாமையில் சிக்கி ஏமாளிகளாக இருந்தார்கள். உலகில் மூத்த மொழியாம் தமிழ் மொழியை நீச பாஷை என்று சொன்னார்கள். வடமொழி ஆதிக்கம் ஒரு பக்கம்; பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒரு பக்கம்; மூடநம்பிக்கைகள் ஒரு பக்கம்; அதை விட இதை ஏற்று வாழ்கின்ற தமிழர்களின் முட்டாள்தனம் இன்னொரு பக்கம் இருந்தது.
இப்படிப்பட்ட ஒரு சமுதா யத்தை மாற்றி, தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதற் காகத்தான் தந்தை பெரியார் 1925 ஆம் ஆண்டே சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். தந்தை பெரியார் கொள்கைகளை இன்றைக்கு வீரமணி அவர்கள் உயர்த்திப் பிடித்துப் பரப்பி வருகிறார் என்று வாழும் திராவிடர் இயக்கத்தின் மூத்தத் தவைர் இனமானப் பேராசிரியர் அருளியவை (2.12.2011) ஒட்டுமொத்த தமிழர்களுக்கு அடையாளப் படுத்திக் காட்டப்பட்டவை யாகும்.
திராவிடர் கழகத் தோழர்களை உற்சாகப்படுத்திய ஊட்டச் சத்தாகும். தமிழர் தலைவர் மேலும் உழைக்கக் கொடுக்கப்பட்ட உத்வேக மூலிகையாகும்.
இனமானப் பேராசிரியருக்கு நன்றி! நன்றி!!
No comments:
Post a Comment