ஒட்டகச்சிவிங்கி அல்லது எலி - இவற்றில்
எதற்கு அதிக கழுத்து எலும்புகள் உள்ளன ?
எதற்கு அதிக கழுத்து எலும்புகள் உள்ளன ?
பின்னங்கால்கள் இன்றி முன்னங்கால்களும் வாலும் கொண்ட, அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வாழும் பெரிய நீர்விலங் கான மனாடீஸ் (manatees) மற்றும் கரடிகள் (sloths) நீங்கலாக மற்ற எல்லா பாலூட்டி விலங்குகளுக்கும் இருப்பது போலவே ஒட்டைச்சிவிங்கி, எலி ஆகிய இரண்டு விலங்குளின் கழுத்திலும் ஏழு முதுகெலும்புகள் உள்ளன.
இரண்டு விரல் கொண்ட கால்களை உடைய கரடிக்கு கழுத்தில் ஆறு முதுகெலும்புகள் மட்டுமே இருப்பதால், அதனால் தலையை எளிதாகத் திருப்ப முடிவதில்லை.
தங்கள் இறகுகளைத் தங்கள் அலகால் கோதிக் கொள்வதற்காக பறவைகள் அதிக அளவில் கழுத்தைத் திருப்ப வேண்டியிருப்பதால், அவற்றின் கழுத்தில் விலங்குகளை விட அதிக முதுகெலும்புகள் உள்ளன. ஆந்தைகளுக்கு பதினான்கு உள்ளன; வாத்துகளுக்கு பதினாறு உள்ளன; ஆனால் அமைதி நிறைந்த அன்னப் பறவை மட்டும் அதிக எண்ணிக்கையாக இருபத்துஅய்ந்து எலும்புகளைக் கொண்டுள்ளது.
சிலர் கூறுவது போல, ஆந்தைகளால் 360டி அளவுக்கு தனது தலையைத் திருப்ப முடியாது. ஆனால் அவற்றால் 270டி வரை தலையைத் திருப்ப முடியும். ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி தனித் தனியாக இயங்கும்படி எலும்புகளை அனுமதிக்கும் சிறப்பு மிகுந்த சதைகளையும், ஒரு கூடுதலான கழுத்து முதுகெலும்பையும் ஆந்தைகள் பெற்றிருப்பதால் இது சாத்தியமாகிறது.
ஆந்தைகளால் கண்களை நகர்த்த முடியாத குறைபாட்டை கழுத்தைத் திரும்பும் இந்த ஆற்றல் ஈடு செய்கிறது. தங்கள் பார்வையை மாற்ற வேண்டுமானல், அவை தங்களின் கழுத்தைத் திருப்பித்தான் பார்க்க வேண்டும்.
ஆந்தைகளின் கண்களால் முன்னோக்கிக் காணும் திறன் இருகண் தொலைநோக்கி (பைனாகுலர்-binocular) போன்று பொருள்களை முப்பரிமாணங்களில் பார்க்கும் ஆற்றல் பெற்றது. இரவில் வேட்டையாட இது மிகவும் இன்றியாமைததாகும். முடிந்த அளவு வெளிச்சத்தைப் பிடித்துக் கொள்ள இயன்றபடி ஆந்தையின் கண்களும் மிகப் பெரிய அளவினவையாக இருக்கும். அதே அளவில் நமது கண்கள் இருந்தால், திராட்சைப் பழ அளவினதாக அவை இருக்கும்.
ஆந்தையின் விழித்திரையைப் பெரியதாக உருவாக்க இயன்றதாக உள்ள கண்கள் ஈட்டியைப் போன்று கூர்மையாக இல்லாமல் (spherical) உருளையாக (tubular) இருப்பவையாகும். ஒரு சிறு ஆந்தையின் கண்கள் நம் கண்களை விட நூறுமடங்கு வெளிச்சத்தை உணரும் ஆற்றல் கொண்டவை. அப்படி இருந்தாலும், தரையில் இருக்கும் ஒரு சின்ன எலியை, ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் 500 மீட்டர் (547 கெஜம்) தூரத்தில் இருந்து அதனால் இபார்க்க முடியும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment