Friday, December 23, 2011

மூவர் உலா


காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி கடந்த புதனன்று பிறந்த நாள் விழா கொண்டாடியுள்ளார். அவர் பிறந்த நாள் விழா கொண்டாடுவது என்பது அவரின் தனிப்பட்ட விவகாரம், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அவர் மடத்துக்குள் எப்படியோ கொண்டாடி விட்டுப் போகட்டும்!

வெளிப்படையாக வெளியில் வந்து கொண்டாடும் அளவுக்கான தகுதி படைத்தவர் அல்லர் அவர். காஞ்சிபுரத்தில் பல உணவு விடுதிகளில் - குறிப்பாகப் பார்ப்பனர்களுக்குச் சொந்தமான உணவு விடுதிகளில் இலவசமாக உணவு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்கும் இவர் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றங்கள் சாதாரணமானவையல்ல! கொலை தொடர்பான குற்றவியல் பிரிவுகளின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டவர். இ.பி.கோ 302, 120-பி, 34, 201 பிரிவுகளில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் 61 நாள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார். இவருடன் ஜூனியர் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு 31 நாட்கள் சிறை கொட்டடியில் கிடந்தார். அமைச்சர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் இருந்தால், அவர்கள் பதவி விலக வேண்டும் என்கிறார்கள். சங்கர மடத்தின் அதிபதிகள் குற்றஞ் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த நிலையில், சங்கராச்சாரியார் பதவியி லிருந்து விலக வேண்டும் என்று சவுண்டிப் பார்ப்பானிலிருந்து  சோ வரை யாராவது சொன்னதுண்டா? பக்த கோடிகள் தான் கூக்குரல் போட்டதுண்டா?

கொஞ்ச காலம் அவரைக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கக் கூடாது, பூர்ண கும்பம் வரவேற்பு அளிக்கப்படக் கூடாது என்று வைத்திருந்தனர். இப்பொழுது வெளிப்படை யாகப் பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலைக்கு வெட்கத்தை உதிர்த்து விட்டு, நட மாடிக் கொண்டு இருக்கிறார். பார்ப்பனர்களும் அவர்மீதுள்ள கறைகளை, குற்றங்களைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல் பெரிய வாள் என்று அந்தப் பழைய உணர்வோடேயே தரிசிக்கின்றனர். இந்தப் பாழாய்ப் போன பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் தான் - இது போன்ற இனவுணர்வு எள் மூக்கு முனை அளவுக்குக் கூடக் கிடை யாது.

ஜாமீனில் வெளியே வந்தவர் பாதிக்கு மேற்பட்ட சாட்சிகளைக் கலைத்துவிட்டார்; இந்தநிலையில் ஜாமீனை ரத்து செய்யவில்லை. மற்ற மற்ற வழக்குகளில் இதே நீதிமன்றங்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றன என்பதும் வெளிப்படை.
இதேபோல காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர்ப் பார்ப்பனன் தேவநாதன் கோவில் கருவறையையே பள்ளி அறையாக்கி, காம லீலைகள் நர்த்தனமாடினான். அவற்றைப் படம் பிடித்து வைத்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழு தெல்லாம் போட்டுப் பார்த்து ரசித்திருக்கிறான்; அவனும் சிறைக்குச் சென்று இப்பொழுது காஞ்சிபுரம் வீதிகளில் சிண்டைக் கத்தரித்துக் கொண்டு, நவீன கிராப் வெட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்டுடன் திரிகிறான்.

இதைப்பற்றி எல்லாம் எந்தப் பார்ப்பானும் பார்ப்பன ஊடகங்களும் பார்ப்பனர்களின் தொங்கு சதைகளாகத் தொண்டூழியம் செய்யும் விபீஷண ஆழ்வார்களின் ஏடுகளும் கண்டு கொள்வதில்லை.

ிருவண்ணாமலை நகரில் பார்க்கும் பக்க மெல்லாம் நித்யானந்தாவின் வண்ண வண்ண சுவரொட்டிகள் பல்வேறு முகத்தோற்றங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன.
அவரது சரசலீலைகள் ஊர் சிரித்த கதை!

மதம், பக்தியின் பெயரால் நடக்கும் ஒழுக்கக் கேட்டைப் பற்றி யாரும் கவலைப்படாதது ஏன்?

பக்தியும், மதமும் மனிதன் அறிவை மயக்க நிலைக்கு ஆளாக்குவது தானே 
காரணம்?

இத்தகைய பக்தியும், மதமும் தேவையா? மனிதகுலத்துக்கு நன்மையா? சிந்திப்பீர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...