Wednesday, December 28, 2011

மதத்தடையை உடைத்தெறிந்த மாதரசி


குருசேத்ரா, டிச.27- குருசேத்ராவைச் சேர்ந்த மோகன்நகர் பகுதி இடுகாட்டில், 76 வயதான தனது தாயின் உடலுக்கு எரியூட்டினார் ஒரு  நீதித்துறை பெண் அலுவலர். இதன் மூலம் காலம் காலமாக ஆண்கள்தான் செய்யவேண்டும் என்ற ஒரு பாரம்பரிய வழக்கத்தை அவர் உடைத்தெறிந்தது பெண்ணிய உரிமைக் கண்ணோட்டத்தில் ஒரு மாபெரும் செயலாகத் தோன்றுகிறது.

ஒரு விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நீலிமா சங்லா என்பவர் நியமிக்கப்பட்டார். நோய்வாய்ப் பட்டு மூன்று நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரது தாய் ராணி சங்லா என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று உயிர்நீத்தார். அவரது மூன்று குழந்தை களில் சங்லாதான் மூத்த பெண் ஆவார். 

வழக்கமாக இறந்தவரின் மகனோ அல்லது வேறு ஆண் உறவின ரோதான் அவரது உடலுக்கு எரியூட்ட வேண்டும் என்பது இந்து மத சம்பிரதாய மாகும். இதனை மீறி தனது தாயின் உடலுக்கு எரியூட்டிய சங்லாவை இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறுபட்ட மத அமைப்புகள் பாராட்டியுள்ளன.

பெற்றோர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடங்குகளில் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப் படவேண்டும் என்ற செய்தியை சமூகத்துக்கு இது தெரிவிக்கிறது. நீலிமாவின் இச்செயல் சமூகத்தின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கீதா கஞ்ச் ஆசிரம சுவாமி முக்தா கூறியுள்ளார்.

இது மகள்களின் யுகம். பெண்களுக்கான பல உரிமைகளை நாம் கேட்கும்போது, பெற்றோருக்கு செய்யும் இறுதிச் சடங்குகளுக்கும் இது பொருந்த வேண்டும் என்று  ஜோதிஷ ஆச்சார்யா கூறினார்.

இதற்கு முன் 2011 ஏப்ரலில் இதே குருசேத்ராவில்  சமுதா கட்டாரியா என்ற மற்றொரு பெண் அதிகாரி இது போல் தனது தாயின் உடலுக்கு எரியூட்டியுள்ளார்.

1 comment:

சசிகலா said...

பெற்றோர்களுக்குச் செய்யப்படும் இறுதிச் சடங்குகளில் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப் படவேண்டும் என்ற செய்தியை சமூகத்துக்கு இது தெரிவிக்கிறது

உண்மை தான் நன்றி

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...