Monday, December 5, 2011

விடுதலையால் வெற்றி மணி


தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவாக தமிழ்நாடு முழுவதும் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது (டிசம்பர் 2).
மூத்த எழுத்தாளர் சோலை அவர் களால் எழுதப்பட்ட வீரமணி - ஒரு விமர் சனம் எனும் நூல் சென்னையில் தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் எல்லாம் வெளியிடப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது.
முதல் பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்து விட்டன என்பது மகிழ்ச்சிக்கும், சாதனைக் கும் உரியதாகும். உடற்கொடை, உறுதி மொழிகள், குருதிக் கொடை, செடிகள் நடு தல் உள்ளிட்ட மனிதநேய செயல்பாடுகள், மனிதநேய இயக்கத்தின் தலைவர் பிறந்த நாளில் இடம் பெற்றது பொருத்தம்தானே!
வெற்று ஆரவார விழாவாக, மத்தாப்புப் பூக்களாக மின்னி மறைவதில் பொருள் இல்லை. அதுவும் தந்தை பெரியார் உரு வாக்கிய பகுத்தறிவு இயக்கத்தில் எது செய்யப்பட்டாலும் அதில் மக்கள் நலன் என்ற கதிர் வெடித்துத் தன் வெள்ளாமையை காட்டத்தான் செய்யும்.
வழக்கம் போல தம் பிறந்த நாளை மற்ற வர்களுக்கு விட்டு விட்டு தன் தலையைக் காட்டவில்லை நம் தலைவர். அதே நேரத் தில் டிசம்பர் இரண்டில் கொள்கைப் பாய்ச் சலுக்குப் பஞ்சம் இல்லாமலே இருந்தது.
அதுவும் சென்னையில் இனமான பேராசிரியர் மானமிகு. க.அன்பழகன் அவர்கள் ஆற்றிய ஆற்று ஓட்டமான உரையில் துள்ளிக் குதித்த சுயமரியாதைச் சூறாவளி இனமான வெப்பமும் பகுத்தறி வுப் பாய்ச்சலும் அசாதாரணமானவை.
சுயமரியாதை உணர்வும், திராவிட இனப் பற்றும், பகுத்தறிவுச் சிந்தனையும் தேவைப்படும் ஒரு கால கட்டத்தில் பேரா சிரியர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தோழர்கள் உள்ளத்திலும் அவற்றைப் பதியம் செய்தார்.
நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு திராவிட இயக்கத்தையும், அதன் தன்னிக ரற்ற தலைவர்களையும் கொச்சைப்படுத்தி, இழிவு படுத்தி எழுதும் ஒரு வேலையில் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்ட வகை யில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
தங்களுக்கான ஆட்சி அமைந்துவிட்ட தாக அவை ஆர்ப்பாட்ட உணர்வில் திளைத்துள்ளன. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஊடகத் துப்பாக்கி களைத் தூக்கிக் கொண்டு கிளம்பியிருக் கின்றன. பொய்யான தகவல்களை, புரட் டான வகையில் அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கின்றன.
திராவிடர் இளைஞர்கள் கலாச்சார சீரழிவில் சிக்கிக் கிடக்கின்றனர். அவர் களிடத்தில் இன உணர்வு இல்லை; மொழி உணர்வு இல்லை; சமூகநீதி பற்றிக் கிஞ் சிற்றும் அறியாதவர்களாக இருக்கின்றனர். இதுதான் ஒரு சந்தர்ப்பம் ஏறி மிதித்து விடலாம் என்ற மிதப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
செம்மொழி என்றால் கேலி செய்து எழுதுகிறார்கள். பெங்களூருவில் திருவள் ளுவர் சிலை என்றால் நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழர் தம் பண்பாட்டு நிலைப் பாட்டை சட்டம் போட்டுத் தடுத்து விட்ட ஆட்சியைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.
இனி புதிய பெரியார் நினைவு சமத்துவ புரம் கிடையாது. ஏற்கெனவே நிறுவப்பட்ட வைகளும் கவனிப்பாரற்றுப் போகும். அண்ணா பெயரால் உருவான நூலகத் துக்கே அவமானம் இழைக்கப்படுகிறது என்றால், வேறு எதைத் தான் செய்யத் தயங்குவார்கள்?
இன்று நமது இளைஞர்களுக்குத் தேவை இனவுணர்வு!  இனவுணர்வு!!   பகுத்தறிவுச் சிந்தனை! பகுத்தறிவுச் சிந்தனை!! போராட்ட உணர்வு! போராட்ட உணர்வு!!
சுழன்றடிக்கவேண்டும் சுயமரியாதைப் பிரச்சாரம். பகுத்தறிவுப் பாசறைகள் நடத்தப்பட வேண்டும். திண்ணைக்குத் திண்ணை பெரியார் படிப்பகங்களும், பகுத்தறிவு வாசக சாலைகளும், தொடக் கத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்ததே - அந்தப் பாணியில் பணிகள் முடுக்கி விடப்படவேண்டும்.
ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் பெயரில் எத்தனை எத்தனை ஏடுகள் - இதழ்கள்! கடைகளில் தோரணங்களாகத் தொங்குமே. இளைஞர் உள்ளங்களில் எல்லாம் தவழுமே! மாநாடுகள் என்றால் குடும்பம் குடும்பங்களாக, குழந்தைகளோடு மாநாட்டுப் பந்தலையே தற்காலிக வீடாக நினைத்து கட்டுச் சோற்றைக் கொண்டு வந்து  கழகத் தோழர்களோடு ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொண்டு, பகுத் துண்டு, போருக்குப் புறப்படும் சிங்கக் குட்டிகளாகக் கிளர்ந்து காணப்பட்ட அந்தக் காட்சிகள் எங்கே?  எங்கே?
இந்தப் பாழாய்ப் போன சினிமாவும், தொலைக் காட்சிப் பெட்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் குலத்தை அழித்தது போதாதா?
அறிவுப் புரத்தை அழிக்க வந்த கறை யான்கள் இவை! இளமையை இற்றுப் போகச் செய்து கிழப் பருவத்தில் தள்ளும் கீழ்மையான மோசக் கருவிகள் இவை! ஆம், விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானக் குட்டையில் குப்புறத் தள்ளும்  குடி கெடுக்கும் கேடயங்கள்!
குடை சாய்ந்த இரயிலால் கொல்லப் பட்ட பயணிகளின் நிலைக்கு ஆளான தமிழ்நாட்டை ஆளாக்க வேண்டாமா? தமிழர் தலைவர் பிறந்த நாள் இந்தச் சிந் தனைகளுக்கான கிளாச்சியைக் கொடுக் கும் தாய்ப் பால்!
விடுதலைக்கு ஆசிரியராக அய்ம்ப தாண்டு (1962-2012) சாதாரணமானது தானா? விடுதலையின் வீச்சால் சரிந்த சாம்ராஜ்யங்கள் எத்தனை எத்தனை! வீழ்ந்த வேதிய ஆதிக்கக் கோட்டைகள் ஒன்றா? இரண்டா? மூச்சற்று வீழ்ந்தனவே மூடநம்பிக்கைப் பிரச்சாரத்தால்! உபந்நியாசிகள் ஓடி ஒளிந்தனரே! கிருபானந்தவாரியார்கள் கலைஞர் போன்ற  இளைஞர்களிடம் என்ன பாடுபட்டார்கள்?
மீண்டும் போர்ப்பாசறை கட்டப்பட வேண்டும்! இலட்சியப் பாட்டைகள் தயாரிக் கப்பட வேண்டும்! தார்மீக கோபக்கனல் வெடித்துக் கிளம்பவேண்டும்!
ஏமாற்றமடையவேண்டிய அவசியம் இல்லை. முடியுமா என்று முடங்கிப் போய் விடவேண்டாம். நமது ஏடுகளை நமது இளைஞர்களின் கரங்களில் கொண்டு சேர்ப்போம். 50 ஆண்டு விடுதலை ஆசிரியரானவரின் கையில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைக் கொடுத்துப் பாருங்கள் - அதன் பிறகு தெரியும் சேதி.
ஒரு பெரியார் தோன்றித்தானே ஊழிக் காற்றை ஊதிவிட்டார். மாற்றம் வர வில்லையா? மறுமலர்ச்சி கூத்தாட வில்லையா?
விடுதலை என்றால் வெண்தாடி வேந்தரின் போர் ஆயுதம்தானே! அதனை 50 ஆயிரம் திராவிடர் தமிழரிடம் கூர் தீட்டிக் கொடுப்போம்! அதற்குப் பிறகு குடுமிகள் ஆடுமா என்பதைப் பாருங்கள். சோ கூட்டம் நடமாடுமா என்று கேளுங்கள். ஒரு நெருக்கடி காலத்தை மனுதர்ம வாளாகப் பயன்படுத்தினார்களே பட்டுப் போய் விட்டோமா?
விடுதலையை,  முரசொலியை வீழ்த்திவிடலாம் என்று மனப்பால் குடித்தார்களே. முடிந்ததா?
அவ்வளவு பலவீனமானதா சுய மரியாதை இயக்கமான திராவிடர் இயக் கம்! இப்பொழுது நம் முன் உள்ள முதல் பணி -முக்கிய பணி 50 ஆயிரம் விடு தலை சந்தாக்களைச் சேர்ப்பதே.
திராவிட இனத்துக்கு எந்தத் திசையி லிருந்து பகையோ தீங்கோ எந்த வடிவில் வந்தாலும் அவைகளை எதிர்கொண்டு  தூள்தூளாக்கும் ஓய்வறியாத உழைப்பாளி வீரமணி என்று மானமிகு கலைஞர் அவர் கள் தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த் தில் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளாரே!
பெரியார் கொள்கையை உயர்த்திப் பிடித்து பரப்பி வரும் வீரமணி என்று திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக நம்மிடையே வாழ்ந்து வரும் இனமானப் பேராசிரியர் அடையாளம் காட்டினாரே, பெரியார் திடலில் (2-12-2011).
ஆற்றல்மிகு அரிய தலைவர் நமக்குக் கிடைத்திருக்கிறார். அய்யா தந்த அறிவுப் பொக்கிஷம் நம்மிடமிருக்கிறது.
அறிவும், உணர்ச்சியும், துணிவும் கொண்டு ஒருவன்  எனக்குப் பின்னால் தலைமை ஏற்க வருவான் என்று தொலை நோக்கோடு சொன்னாரே அந்தத் தலை வர்தான் நம்முடைய தலைவர் மானமிகு. வீரமணி!
இந்தப் பிறந்த நாள் இலட்சியப் பாட் டையில் எரிமலைகளை அணி வகுக்கக் செய்வோம்! எல்லா வகையான இருளி லிருந்தும் விடுபட வேண்டுமா? தேவை, தேவை விடுதலை,விடுதலை
வீட்டுக்கு வீடு விளங்கும்படிச் செய்வோம்; வீட்டுக்குக் காவலனாக நிற்கும்படிச் செய்வோம். அடிகளார் சொன்னது அரிய வாக்கு - அறிவு வாக்கு!
வீரமணியின் குரல் வெற்றிமணியாக ஒலிக்கச் செய்வோம்!
(வளரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...