Monday, December 19, 2011

முடி திருத்தகங்களில் விடுதலை


நம்முடைய கழகம் வளர்ந்த இடங்களில் முடி திருத்தகங்கள் முக்கியமான இடம் வகிக்கின்றன.
அங்குதான் சுயமரியாதை இயக்கத் தின் பால பாடங்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும், விடுதலை ஏடு தவறா மல் அலங்கரிக்கும் அந்த முடி அலங்காரக் கடைகளில்.
முடிதிருத்தகங்கள்தான் நாங்கள் தங்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்று சொல்லுவார் கழகத் தலைவர் கி.வீரமணி.
கீழ்வேளூரில் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் திருவேங்கடம் என்பவர் முடிதிருத் தகம் நடத்தி வந்தார். அகரக்கடம்பனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரும் கூட!
காலை 8 மணிக்குக் கடை திறப்பது முதல் பிரச்சார ஒலி பெருக்கியாகக் கதையை ஆரம்பித்தால், கடை மூடும் வரை அந்த வாய் மூடாது. வயது முதிர்ந்த நிலை யிலும் இதுவரை அதே பணிதான்.
புதுச்சேரியிலே முத்துவீரன் முடிதிருத் தும் நிலையம் குறிப்பிடத்தகுந்தது. அந்தக் கடை இருந்த பகுதிக்குப் பெயர் துய்ப்ளே (இன்றைய நேரு வீதி).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ன செய்வார்? விடுதலைக்கு அவரே மாத சந்தா செலுத்தி விடுதலையை அந்தக் கடைக்குப் போடச் செய்தார். விடு தலைக்கு ஓய்வே கிடையாது. எப்பொழு தும் எவர்ஒருவர் கையிலாவது விடுதலை தவழ்ந்து கொண்டே இருக்கும். கடையின் உரிமையாளர் முத்துவீரன் அவர்களும் தம் பங்குக்குப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டே இருப்பார்.
ஒவ்வொரு நாளும் தன் பணி முடிந்து, மாலை நேரத்தில் அந்த முடி திருத்தகத் துக்குச் சென்று, கட்சிப் பிரச்சாரங்களை, பெரியார் கொள்கைகளைப் பற்றி பேசி விட்டு, இரவுதான் வீடு திரும்புவார் புரட்சிக் கவிஞர்.
மீண்டும் அத்தகைய நிலை உருவாக் கப்பட வேண்டாமா? திருப்பூர் மேயராக இருந்த செல்வராஜ் அவர்கள் திருப்பூரில் உள்ள அனைத்து முடிதிருத்தகங்களுக் கும் விடுதலை போடுவதற்கு சந்தா கட்டினார். அதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர்  மாண்புமிகு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்களின் உதவி யினால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள முடி திருத்தகங்களுக்கும் விடுதலை விநி யோகிக்கப்பட்டது.
இப்பொழுதுகூட புதுச்சேரியில் 25 முடி திருத்தகங்களுக்குத் தம் சொந்தப் பொறுப்பில் விடுதலை கிடைக்குமாறு ஏற்பாடு செய்துள்ளார் கடலூர் மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வ.சு.சம்பந்தம்.
மயிலாடுதுறையிலும் இப்பொழுது அதேபோல ஏற்பாடு செய்துள்ளார் மாவட்ட செயலாளர் மானமிகு கி.தளபதி ராஜ். குன்னூர் மருத்துவர் இரா. கவுத மனும் முடிதிருத்தகங்கள், தேநீர்க் கடை களில் விடுதலை கிடைக்க தம் சொந்தப் பொறுப்பில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி செய்துள்ளார்.
கழகப் பொறுப்பாளர்களே, இயக்கத் துக்கு ஆதரவு காட்டும் வெள்ளைச் சட்டை வேந்தர்களே, கண்ணுக்குத் தெரியாத (ஐஎளைடெந ஆநஅநெசள) புரவலர்களே உங்கள் முயற்சியால், நிதி உதவியால் இந்த ஏற் பாட்டை இன்னும் விரிவாக்கம் செய் யலாமே! சமுதாய மாற்றம் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், திசை மாறித் திரியும் இளைஞர்களை - திராவிடர் இயக்கக் கொள்கைபால் கொண்டுவர வேண்டும் என்று வார்த்தையளவில் மட்டும் பேசும் கனவான்களே! உங்கள் கடமை என்ன? விடுதலை யை வீடுதோறும் பரப்புவதற்கு உதவிக் கரம் நீட்ட வேண்டாமா?
தேநீர்க்கடைகளிலும், சலவை நிலையங்களிலும், முடிதிருத்தகங்களிலும் உள்ளூரில் விடுதலை கிடைத்திட உங்கள் பங்களிப்பைப் பற்றி யோசிக்கலாமே!
விடுதலை பரவுவது விடுதலை க்காக அல்ல - தமிழின மக்களின் விடுதலைக் காகவே!
இன்றைக்கு ஒரு தம்பளர் தேநீரின் விலையைவிட பாதி விலைதான் ஒரு நாள் விடுதலை .
தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்கிற கடுகு உள்ளத்தை விரிவாக்கி, விடுதலை யைப் பரவச் செய்திட உங்கள் சட்டைப் பைக்குள் கையைவிட்டு, பணத்தை வெளியில் எடுத்துச் செலவு செய்யுங்கள். அந்தச் செலவு சமூகத்திற்கான நல்வரவா கும். கழகத் தோழர்களும், பொறுப்பாளர் களும் இந்தக் கண்ணோட்டத்தில் நமது கழகத் தலைவர் சொன்ன புரவலர்களைத் தேடுவார்களாக!
- கலி.பூங்குன்றன் -

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...