Saturday, November 26, 2011

இரட்டை நாக்குப் பார்ப்பனர்!


கேள்வி: குஜராத் கலவர வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பற்றி. . .
பதில்: இதில் மதச்சார்பின்மை வாதிகளுக்குத் திருப்தி இருக்காது. நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. நரேந்திர மோடிதான் கொலைகாரர் என்ற தீர்ப்பு, என்று வருகிறதோ, அன்றுதான் மதச்சார்பின்மை மலரும். -துக்ளக் 30-11-2011
கேள்வி என்ன? அதற்கு திருவாளர் சோ அளிக்கும் பதில் என்ன?  ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்கிறதா? இப்படிப்பட்ட கிணத்து வாளிதான் அவாள் மொழியில் அறிவாளியாம்!
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து அம் மாநிலத்தில் சிறுபான்மை இன முசுலிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு முக்கிய பங்கு உண்டு என்று அம்மாநில காவல்துறை அதிகாரிகள் - பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்களே (டெகல்கா பதிவு செய்த சாட்சியம்) ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சோவின் உள்மனதில் குமைந்து கொண்டிருக்கும் அந்தக் காரியம் நடைபெற்றால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இப்பொழுது 31 பேர் ஆயுள் தண்டனை அளிக்கப் பட்டுள்ளார்களே - மோடி ஆட்சியின் நேர்மையான செயல்பாட்டால் தண்டிக்கப்பட்டவர்களா? இல்லையே! உச்சநீதிமன்றம் மறுவிசாரணை நடத்தச் சொல்லி, புதிய புலனாய்வுக்கான அதிகாரிகளையும் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்து ஆணை பிறப்பித்த பின்னர் தானே இந்தத் தண்டனை கிடைத்திருக்கிறது. குற்றம் நிகழ்வதற்கு முதல் அமைச்சர் மோடிக்குப் பொறுப்பு இல்லையா?
உச்சநீதிமன்றம்தானே நீரோ மன்னன் என்று மோடிக்கு மகுடம் சூட்டியது!
ஜெயேந்திர சரஸ்வதிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்று எழுதும் பேர்வழியாயிற்றே  திருவாளர் சோ; எப்படிதான் எழுதமாட்டார்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...