Sunday, November 27, 2011

நடராசர் கோயில் சிதம்பரத்தில் காணாமல் போன நந்தனார்


- முனைவர் பேரா.ந.க.மங்களமுருகேசன்


தில்லை நடராசர் திருக்கோவில் முன்குடுமி தீட்சதர்களுக்கு உரியது இல்லை என்பது குறித்துச் சில ஆண்டுகளுக்கு முன் விடுதலையில் தொடர் கட்டுரை தீட்டிய காலத்தே தில்லைக் கோவில் குறித்த தகவல் களை, நூல்கள் கிடைத்தால் விடாது படிப்பது வழக்கம்.

எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதல்வராக மேற்கொண்ட நடவடிக் கைகளில் தலையாயது என்று கருதுவது தில்லைக் கோவிலை அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர மேற் கொண்ட நடவடிக்கையைச் சொல்ல லாம். இதை இங்கே கூறுவதற்கும் காரணம் உண்டு. கலைஞர் அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்று தவறாக எண்ணித் தமிழக அரசு இதிலும் தவறிழைத்துவிடக்கூடாது.

என் நண்பரும், மாநிலக் கல்லூரி யில் பணியாற்றி காலத்து உடன் பணியாற்றிய தமிழ்த்துறையைச் சேர்ந்த திரு தி.வ.மெய்கண்டாரின் இளந்தமிழன் ஏட்டில் நந்தனார் குறித்த தகவல்கள் கிட்டின.  மணி வாசகர் திருவாசகம் பாடத் தில்லை நடராசர் எழுத்தாணி கொண்டு எழுதிப் படியெடுத்துப் படியில் வைத் துத் தாம் அதைக் கொண்டு மறைந் தார் எனும் செய்தி கேள்விப்பட்டி ருக்கிறோம்.

தேவாரம் கிடைக்கத் தில்லையில் இராஜராஜன், தேவாரம் பாடிய மூவரையும் முன்வரச் செய்து பூட்டிக் கிடந்த கதவம் திறக்கச் செய்து - செல் அரித்தது போகத் திருமுறை கண்டான் - திருமுறை கண்ட சோழன் என்று பெயர் பெற்றான் எனும் வரலாறு, வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

இவையெல்லாம் சிதம்பரம் ரகசி யங்கள். ஆனால், வாசல் மறைக்குதே அய்யே! என்று திருப்புன்கூரில் நந்தி மறைக்குது என்று முறையிட்ட நந்தன் எனும் பார்ப்பான் போல் நானிலத்தில் இல்லையே என்று பாரதி பாடிய நந்தன் - திருநாளைப்போவார் என்று நாயன்மார்கள் 63 பேரில் ஒருவராக விளங்கிய நந்தன், தில்லைக் காலைத் தூக்கி நின்றாடும் கனகசபாபதி முன் திருமுன்றிலில் நெடுங்காலம் நின்ற திருஉருவம், தாழ்த்தப்பட்ட அடியவர் திலகம் கொண்ட திருஉருவம் நம் கண்ணில் காணமுடியாது மறைந்து விட்டது - இல்லை -அவாள் தீட்சதர் மறைத்துவிட்டனர்.

1935 இல் தாம் பள்ளி மாணவராக இருந்தபோது நந்தனார் சிலையைப் பார்த்ததாக எண்பது வயது கடந்த தமிழ்ப் பேராசிரியர் பகுத்தறிவுச் சிந்தனையாளர், தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர், சேலம் அரசுக் கல்லூரியில் பணியாற்றியபோது உடன் பணி புரிந்து, பக்கத்து அறையில் விடுதி யில் ஒன்றாகத் தங்கியிருந்த கொண்டல் சு. மகாதேவன் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டியிருந்தார் மெய்கண்டார்.

கொண்டல் சு. மகாதேவன் எழுது கிறார்:

1935இல் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது உறவினருடன் தில்லைப் பெருங்கோவிலினுள் நடமிடும் நடன சபை நடராசனைக் காணும் நல்வாய்ப் பினை முதன் முதலாகப் பெற்றார். அது பொழுது அருகில் நின்ற பெரியவர் ஒருவர்,
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த
மாநிலத்தே!

என்னும் அப்பர் அடிகளாரின் பதிகத்தை அருங் கண்ணீர் மல்க அகங்குழைந்து பாடிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால், சற்றுத் தென்புறம் உள்ள தூணை அடுத்து, மண்ணின் மைந்தராய் மனிதப் பிறவி எடுத்தும், மைவண்ணத் திருமிடந்தூர் மன்றில் நடம் கும்பிடுவது எவ் வண்ணம் எனத் தெரியாது நாள்பல நகர்த்திய நாளைப் போவாரும் (நந்தனார்) குளந்தொட்டு வளம் பெருக்கும் கோலத்தில் கற்சிலையாக நின்று கொண்டிருந்தார்.

இவ்வாறு நின்ற நந்தனார் வாழ்ந்த காலத்தில் அழலுருவில் நடமிடும் அய்யனைத் தழலுருவில் சென்று தழுவினார் என்று தீயிட்டுக் கொளுத்தி விட்டனர். இதன் பயன் - அனைத்துச் சிவன் கோவில்களில் எங்கெல்லாம் அறுபத்து மூன்று தலைச் சிவனடி யார்களுக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் நந்தனார் திருநாளைப் போவார் நாயனார் எனும் பெயரில் இடம் பெற்றார்.

திருவைணவத் திருக்கோவில்களில் தேசிகருக்கும், மணவாள மாமுனிக்கும் சிறப்பிடம் இருப்பது போல் தாழ்த்தப் பட்ட குல நந்தனாருக்குத் தில்லையில் சிறப்பிடம் இருந்திருக்கிறது, திரு முன்றில் தில்லை நடராசர் முன்.

கொண்டல் சு.மகாதேவனாவது சூத்திரர் - அவாள் கருத்துப்படி இட்டுக் கட்டிச் சொல்லியிருப்பார் என்று கூடக் கதைக்கலாம். ஆனால், தமிழ்த் தாத்தா என்று கொண்டாடப்படும் - இன்று மாநிலக் கல்லூரி வளாகத்தினுள்ளே, கடலை நோக்கி இருக்கும் உ.வே. சாமிநாத அய்யர் கோபால கிருஷ்ண பாரதியார் எனும் நூலில் எழுதியுள்ளார். நந்தனாரைப் பற்றிக் கீர்த்தனம் பாடிய பெருமைக்குரியவர் கோபாலகிருஷ்ண பாரதியார். இந்தக் கோபாலகிருஷ்ண  பாரதி பாடிய மெட்டில் மகாகவி பாரதி சில பாடல்களைப் பாடி நந்த னார் பாடல் மெட்டு என்றே குறிப் பிட்டிருப்பார்.

உ.வே.சா. எழுதுபவை இவை:

சிதம்பரத்தில் இருக்குங் காலங்களில் கோபால கிருஷ்ண பாரதியார் நடராசர் ஆலயம் சென்று, பொன்னம்பலத் துக்குத் தெற்கே யுள்ளதும் கிழக்கு நோக்கி ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியெழுந்தருளி யிருப்பதுமாகிய சபையின் வெளி மண்டபத்தில் ஜபம் செய்வார். சில சமயங்களில் அதன் தெற்குச் சுவரோரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக் கொண்டிருப்பார். நடராஜமூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியைத் தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக் கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோளில் மண் வெட்டியும் உள்ளன. பாரதியார் நந்தனாருடைய சிறந்த பக்தியை நினைந்து, நினைந்து உருகுவதற்கு அந்த உருவம் ஒரு தூண்டு கோலாக இருந்தது. இவர் அடிக்கடி நந்தனாரைப் பற்றி வியந்து பாராட்டி உரைப்பார்.

ஒரு சமயம் இவர் அங்கிருந்து பாடிக் கொண்டிருந்த போது உடனிருந்த அன் பர்கள் சிலர், இந்தச் சந்நிதியிலேயே இருந்து தாம் தரிசனம் செய்யவேண்டு மென்று நந்தனார் பிரார்த்தித்திருப் பதாக ஒரு கீர்த்தனம் இயற்றித் தரவேண்டும் என்று வேண்டினார்கள். அவர்கள் விரும்பியபடியே இவர், எந்நேரமும் உன்றன் சந்நிதியிலே நான் இருக்க வேண்டுமையா எனும் பல்லவியையுடைய கீர்த்தனமொன்றை இயற்றினார். (இக்கீர்த்தனம் தனியாகவே வழங்கப்பட்டு வந்தது.) அக்கீர்த்தனம் ஆரபிராகத்தில் அமைந்துள்ளது என்று பக்கம் 23 இல் அந்நூலில் குறிப்பிட்டது,தமிழ்த் தாத்தாவும் நந்தனார் சிலை நடராசர் திருமுன்றில் கையில் கடப்பாரையும், தோளில் மண்வெட்டியும் உழைக்கும் வர்க்கத்தின் அடையாளங்களோடு சிலையாக நின்று எந்நேரமும் உன்றன் சந்நிதியில் நான் இருக்க வேண்டுமய்யா என வேண்டிக் கொண்டு இருந்திருக்கிறார்.

இவ்வாறு வேண்டிக்கொண்டதை நடராசர் ஏற்றுக் கொண்டாலும், நடராசருக்குப் பூசை செய்யும் அர்ச்சகர்களான தில்லை வாழ் அந்தணர் ஏற்கவில்லை.

நந்தனார் சிலை 1935 இல் இருந்தது. பள்ளி மாணவராய் இருந்தபோது இருந்த சிலை, கொண்டல் சு.மகா தேவன் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பு மாணவனாக நுழைந்தபோது, திரும்பவும் திருக் கோவிலுக்குள் நுழைந்தபோது 1935_க்கும் 1943_க்கும் இடைப்பட்ட எட்டாண்டுக் காலத்தில் காணாமல் போய்விட்டது. அதையும் அவர் கூறக்கேட்போம்.

திருக்கோவிலுள் திரும்பவும் நுழைந்தபோது, அடியார் இல்லாத நிலையில் ஆடாது, அசையாது நின்று கொண்டிருந்த அருள்மிகு அம்பல வாணனைக் கண்டு அதிர்ச்சியுற நேர்ந்தது. ஆம். நந்தனார் இருந்த புனித இடம் போவாரும் வருவாரும் அடி வைத்து நடக்கும் பொது இடமாக, வெட்ட வெளியாக இருந்தது. தில்லை என்பதற்கு இல்லை என்பதுதான் பொருளோ?

நந்தனார் சிலை அகற்றப்பட்டதற் குத் தக்கதொரு காரணமும் கூறப் படவில்லை. தொல்பொருள் துறை, இந்து அறநிலையத் துறை ஆகிய ஏதே னும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் நந்தன் அவ்வளவு எளிதாகக் காணாமல் போயிருக்க மாட்டார். தீட்சதர்கள் அடாவடியாகக் கோவிலைக் கைப்பற்றிப் போலியாக உரிமை கொண்டாடி வந்ததனால் ஏற் பட்ட சீர்குலைவுகளில் இதுவும் ஒன்று.

இப்போது அரசு அண்ணா நூலகத்தை, இடம் மாற்றம் செய்ய, நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி அவர்கள் குடும்பத்தினரின் வயிற்றில் அடிக்கச் சொல்லும் பொருந்தாக் காரணம் போல், நந்தனார் சிலை அகற்றப் பட்டதற்கும் ஒரு பொய்க் காரணம் கூறினர் எனக் கொண்டல் சு.மகாதேவன் எழுத்தி லிருந்தே அறிகிறோம்.

கோவில் அன்றாடப் பணிகளைக் கண்காணிப் பாளராய்ச் சுழன்று கொண்டிருந்த ஒருவரை அணுகி இங்கிருந்த நந்தனார் சிலை என்ன ஆயிற்று? என  கட்டுரை ஆசிரியர் வினவ, ஓ!அதுவா? நந்தனார் சிலை அல்ல. நந்தனார் என்று நினைத்துக் கொண்டு கோவிலுக்கு வருபவர்கள் மாலை மரியாதை செய்யத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அதை அப்புறப்படுத்திவிட்டோம் எனக் குறுநகை தவழ அவர் கூறிமுடித்தார். என்ன செய்வது? நல்லாறு தெரிந்து உணர அவருக்கு நம்பர் அருளியது அவ்வளவே! அர்ச்சகர்களுங்கூட சுழலில் மூழ்கி ஆன்ம உறுதி காட்டி வென்ற நந்தனாரின் நல்லுருவம் என்பதால் தானே முதல் நாள் நடராசருக்கு அணிவித்து மறுநாள் களைந்த மலர் மாலைகளையும் நந் தனார் சிலை கழுத்தில் அணிவிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர். அது நந்தனார் சிலை அல்ல என்றால் வேறு யார் சிலை? என்று வருந்திக் கேட்கும் கொண்டல் சு.ஒன்றும் திருக்குலத்தவர் என்று இராமானுஜர் அழைத்த நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த் தப்பட்ட குலத்தவர் இல்லை.
நந்தனார் சிலை அகற்றப்பட்ட தற்கும் நாட்டு விடுதலைப் போராட்டமும், காந்தியின் கோவில் நுழைவுப் போராட்டமோ அல்லது திராவிடர் இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டமோ காரணமாக இருந்திருக்க வேண்டும். நந்தனார் சிலையை ஆங்கிலேயர் ஆட்சியில் கமுக்கமாக அகற்றிவிட்டடனர் ஆரியக் கூட்டத்தார்.
காந்தி அடிகளார் நந்தனார் வழியினருக்கு அறிவித்த கோவில் நுழைவுப் போராட்டம், ஒரு காலக் கட்டத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே தில்லையிலும் மேற்கொள்ளப்பட்டது. கோவிலுக்குள் நாங்கள் சென்று அங்கி ருக்கும் எம் குல முனிவர் நந்தனாருக்கு மாலை அணிவித்து வழிபடுவதைத் தடுப்பது அறத்துக்கு அடுக்குமா? எனத் தடுக்கப்பட்ட தமிழ்க் குடி மக்கள் அந்த ஒரு நெருக்கடி நிலையினைச் சமாளிப் பதற்கே நந்தனார் புறத் தொண்டராகப் போக நேர்ந்தது என்கிறார்.

திராவிட இயக்க வரலாற்று ஆய்வு மேற்கொண்ட போது சுயமரியாதை இயக்கம் தீவிரமாக இருந்த வேளையில் வேதாரணியம் எனும் திருமறைக் காட்டில், திருவரங்கத்தில், திருவானைக் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் தீவிரமாக இருந்துள்ளது. எனவே அக்காலச் சூழலிலும் அர்ச்சக அந்தணர்கள் - சிவனடியாரான நந்தனா ருக்குத் திருமுன்றில் இடம் வேண்டாம் என்று அகற்றியிருக்கவும் கூடும்.

எது எப்படியோ நந்தனாரை மீண்டும் தீண்டத் தகாதவர் ஆக்கி விட்டனர்.

மீண்டும் உ.வே.சா.விற்கு வருவோம். பக்கம் 33 இல் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் கீர்த்தனை பாடிய காரணத்தைச் சொல்கையில், நந்தன் சிலை இருந்ததை உறுதி செய்கிறது. அவருடைய கூற்று.

வேறு பல சங்கீத வித்வான்களும் பிரபுக்களும் இங்ஙனமே பல முறை தம்மை வேண்டிக் கொண்டது உண்டாதலால் பாரதியார் அவ்வாறே, ஒரு நாயனார் சரித்திரத்தைக் கதை வடிவமாக விரைவில் இயற்றத் தொடங்கவேண்டுமென்று நிச்சயித்தார். இறைவன் அருளைத் துணையாகக் கொண்டு ஒருவாறு தொடங்கி விட் டால் பிறகு எளிதில் நிறைவேறு மென்ற நம்பிக்கை இவருக்கு உண்டாயிற்று. எந்தச் சரித்திரம் இயற்றலாம் என்ற யோசனை பிறகு தோன்றிற்று. சிதம்பரம் சென்ற காலங்களில் ஆலயத்தில் நந்தனார் பிம்பத்துக்கருகில் இருந்து சிவத் தியா னாதிகள் செய்து வந்த பழக்கத்தால் இவருக்கு நந்தனருடைய நினைவு வந்தது.(பக்கம்.33)

மீண்டும் 74 ஆம் பக்கத்தில் உ.வே.சா. இவருக்கு நந்தனார் சரித் திரத்தில் மனம் சென்றதற்கு முக்கியக் காரணம் ஆலயத்திலுள்ள நந்தனா ருடைய பிம்பமென்று முன்பு தெரி வித்தேன் என்று வலியுறுத்துகிறார்.

நந்தனார் சிலையை அகற்றியதோடு விட்டார்களா? ஆயிரம் ஆண்டுகள் புகழ் வாய்ந்த சிதம்பரம் கோவிலில் நந்தனார் சென்ற பாதையை மறித்துச் சுவர் ஒன்றையும் எழுப்பினர்.

நந்தனார் சிலை தமிழ்த் தாத்தா, கொண்டல் சு. ஆகியோர் குறிப்பிடும் இடத்தில் இல்லை. வேறு பகுதிகளிலும் தேடிப்பார்த்தும் கண்ணில் படவில்லை. கடப்பாரையும், தோளில் மண்வெட் டியும் கொண்டு விளங்கும் அந்த உழைப்பாளிப் பக்தர் சிலை எங்கிருக் கிறது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...