Sunday, November 27, 2011

கரும்பலகையில் எழுதுவதற்கு நாம் எதனைப் பயன்படுத்துகிறோம்?


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:

கரும்பலகையில் எழுதுவதற்கு நாம் எதனைப் பயன்படுத்துகிறோம்?


கரும்பலகையில் எழுதுவதற்கு சுண்ணாம்புக் குச்சி எனும் எழுதுகோலை நாம் பயன்படுத்து கிறோம். பள்ளிகளில் கரும்பலகையில் எழுதப் பயன்படுத்துபவை உண்மையில் ஜிப்சம் எழுது கோலல்ல. அவை சுண்ணாம்பு,  பவளம், சலவைக் கல், மனிதர்கள் மீன்களின் எலும்புகள், கண்களின் ஆடி, போன்றவைகளைப் போன்று கால்சியம் கார்பனேட்டினால் ஆனது.

ஆனால் ஜிப்சம் கால்சியம் சல்பேட்டால் செய்யப்படுவது. இது ஒரு சாதாரண வேறுபாடு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்று போலவே தோன்றினாலும், உண்மையில் அவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவையாகும். ஒரே வேதியியல் தனிமங்களால் செய்யப்பட்டவையும் அல்ல.

மிகவும் மாறுபட்டவைகளாகத் தோன்றும் பல பொருள்கள் உண்மையில் ஒரே மாதிரியான வேதியியல் தனிமங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன. கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.  டெஸ்டோஸ் டெரோன், வனில்லா, ஆஸ்பிரின், கொலஸ்டிரால், க்ளூகோஸ், வெனிகர் மற்றும் ஆல்கஹால் ஆகியவை பல்வேறுபட்ட அளவுகளில் கலந்து செய்யப்பட்டவை இவை.

நீர்கலக்கப்பட்ட கால்சியம் சல்பேட் என்ற தொழில் நுட்பப் பெயர் கொண்ட ஜிப்சம் உலகில் மிக அதிகமாகக் கிடைக்கும் ஒரு தனிமமாகும். 4000 ஆண்டுகளாக அது தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. பிரமிடுகளின் உட்புறத்தின் பூச்சுவேலைகள் ஜிப்சத்தால் செய்யப்பட்டவை.  தொழில்சாலைகளில் இப்போது ஜிப்சம் ஒரு பெரும் அளவில் பயன்படுத்தப்படுகின்றது. கட்டட பூச்சு வேலைகளில் இது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

75 விழுக்காடு ஜிப்சம் பூச்சு வேலைகளுக்காகவும், அட்டைகள், ஓடுகள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் ஒரு முக்கியமான மூலப் பொருளாக இருப்பதாகும். உரம், காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும் இது பயன்படுத்தப் படுகிறது. நவீன அமெரிக்க வீடுகள் ஒவ்வொன்றும் 7 டன் ஜிப்சத்தைக் கொண்டு கட்டப்பட்டவையாக உள்ளன.

பாரிஸ் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குறிப்பாக மோன்ட்மார்டியில் உள்ள களிமண்ணில் அதிக அளவில் ஜிப்சம் இருப்பதால் அதனை பிளாஸ்டர் ஆஃப் பேரிஸ் என்று அழைக்கின்றனர்.

முழு உருவச்சிலைகள், மார்பளவு உருவச் சிலைகள், குடுவைகள், ஜாடிகள், தொட்டிகள் ஆகியவற்றைச் செய்யப் பயன்படுத்தும் வெள்ளை வெளேர் என்ற நிறம் கொண்ட, ஒளி ஊடுருவிச் செல்லும் பளிங்குக் கல் வடிவிலும் ஜிப்சம்  கிடைக்கிறது.

இந்தப் பளிங்குக் கல்லை செயற்கை முறையில் வண்ணச் சாயம் ஏற்றி வெப்பப்படுத்தினால் அது சலவைக் கல் போலவே தோற்றமளிக்கும்.  பளிங்குக் கல்லைப் பொடியாக்கி எண்ணெயுடன் கலந்து பூசினால் கால் வீக்கம் போகும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கலவையைத் தயாரிப்பதற்காக தேவாலயங்களில் உள்ள சிலைகளை மக்கள் பெயர்த்து எடுப்பது சர்வசாதாரணமானது.

ஜிப்சம் என்ற பெயர் ஜிப்சோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு சுண்ணாம்பு என்று பொருள்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...