Wednesday, November 23, 2011

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த இயக்கமும் அதன் தாக்கமும் சிறப்பு கருத்தரங்கம்


தமிழர் தலைவரின் அறிவார்ந்த கருத்துக்களை உள்ளத்தில்
வாங்கி உணர்வு பெற்றனர்


சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த இயக்கமும் அதன் தாக்கமும் என்ற சிறப்பு கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார். (17.11.2011)
சிங்கப்பூர் நவ.22: சிங்கப்பூரில் தென்னிந்தி யாவின், தமிழ்நாட்டின்  பிரபல சமூக சீர்திருத்த  இயக்கமும் அதன் சமூகத் தாக்கமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கேள்வி பதில்கள் பெரியாரின் கொள்கைகள் கருத்துக்கள் பங்கேற்ற அனைவரின் உள்ளத்திலும் தூவப்பட்டு சிந்திக்க வைத்த ஒரு மகிழ்ச்சியான குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதுபற்றிய ஒரு தொகுப்பு விவரிப்பு வருமாறு:

சமூகசீர்திருத்த இயக்கமும் அதன் சமூகத் தாக்கமும்!
சிங்கப்பூரின் முதன்மைப் பல்கலைக் கழகமான தேசிய பல்கலைக் கழகத்தின், கலை மற்றும் சமூக அறிவியல் துறையின் சார்பில் திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டாக்டர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு தென்னிந்தியா வின் தமிழ்நாட்டின் பிரபல சமூக சீர்திருத்த இயக்கமும் அதன் சமூகத் தாக்கமும் என்கிற தலைப்பில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் (National Univeristy of Singapore)  4ஆவது மாடியில் 13ஆவது அறையில் 17.11.2011 வியாழன் பிற்பகல் 3 மணிக்குத் துவங்கிய ஓர் கருத்தரங்கம். (Seminar) ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பட்டம் படிக்கும் மாணவர்கள், துறைப் பேராசிரியர்கள் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட சிறப்பாளர்கள்


பல்கலைக் கழகத்தின் அசோசியேட் புரபசர் (Associate Professor) இணைப் பேராசிரியர்  தென் ஆசிய சமூகவியல் துறையின் தலைவருமான யாங் முன் ச்யோங்க் அவர்களும், இந்த பாடத் திட்டத்தின் தென் ஆசியா ஆய்வுகள் கல்வி நிகழ்வுக்கான பேராசிரியர் (இணைப் பேராசிரியர்) டாக்டர் ஞானேஷ் கொடிஷியா, (இவர் ஏற்கெனவே டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்) இதே திட்டத்தின்கீழ் உள்ள பேராசிரியர் டாக்டர் ராகுல் முக்கர்ஜி (இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்) பேராசிரியர் டாக்டர் ஏ.ஆர். வெங்கடாச்சலபதி (இவர் சென்னை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெவலப்மெண்ட் ஸ்பீஸ் என்ற அமைப்பினர்) பேசினர்.  வருகை புரிந்தவர் அத்துறையின் பொறுப்பாளர் பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன் அவர்கள், பல்வேறு பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள் சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள், சீனர்கள், கொரிய நாட்டு மாணவர்கள் போன்ற ஆய்வாளர்களும், பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பார்வையாளர்களும் வருகையாளர்களும் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் கலைச்செல்வம், செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் இரத்தினகுமார், செயலாளர் பூபாலன், உறுப்பினர்கள் - ராஜராஜன், மோகன்ராஜ்  திருமதி பர்வீன் பானு, சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் - வானதி, வளவன் பிரபல தொழிலதிபரும், பொது நல ஆர்வலருமான ஏ.ஆர். (இவர் எட்ஜ்கேப்டல் பிரைவேட் லிமிடெட் தலைவர்) பட்டய மாணவர்கள் இர்ஷாத் முகம்மது, (அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு. மூர்த்தி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தென் ஆசிய சமூகவியல் துறையின் இணைப் பேராசிரியர் யாங் முன் ச்யோங்க் அவர்களிடம் பெரியாரின் நூல்களை (ஆங்கிலத்தில்) தமிழர் தலைவர் வழங்கினார். (17.11.2011)

கலந்துரையாடல்! கேள்வி பதில்!

(இதுபோன்ற பிரபல பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகள் - ஒரு பொதுக் கூட்டம் போல் நடப்பதில்லை - மாறாக, குறிப்பிட்டவர்களைக் கொண்டு மட்டுமே கலந்துரை யாடலாக - கேள்வி -பதிலாகத்தான் மாணவர்களுக்கு வகுப்புக்கள் போல நடைபெறுவது வழக்கம். அதன் படியேதான் இதுவும் நடந்தது.)

சிறப்புக்கு ஒரு தனி எடுத்துக்காட்டு

முதலில் துறைத் தலைவரும் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரி யருமான பேராசிரியர் யாங்முன் ச்யோங்க் பிரதம பேச்சாளரை வரவேற்றார். வரவேற்புரையில் இவரைப் பற்றிய சில குறிப்புகளையும், பேசப் போகும் தலைப்பு பற்றிய சில  குறிப்புகளையும் கூறிவரவேற்ற தோடு, அண்மைக் கால நிகழ்வுகளில் இந்த கருத்தரங்கிற்கு இவ்வளவு அறை நிறைய உறுப்பினர்கள் வந்திருப்பது, வருகை தந்துள்ளவரின் சிறப்புக்கு ஒரு தனி எடுத்துக்காட்டு என்றார்.

அதனையொட்டி பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்களும் வரவேற்ற தோடு, பெரியார் நிறுவனம் நடத்தும் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிலை யங்கள் பற்றிய சிறப்புகளையும் பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் (திரு. பூபாலன் இயக்கினார்) வந்திருந் தோருக்கு விளக்கிடும் வாய்ப்பையும் ஏற்படுத்தி அறிமுகப்படுத்தினார்.

பெரியாரின் சமூக சீர்திருத்தம் பற்றி ஆங்கிலத்தில் உரை

சுயமரியாதை இயக்கம் எப்படி ஒரு தனித்தன்மை வாய்ந்த சமூகப் புரட்சி இயக்கம் என்பதையும், அதன் நிறுவனத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எப்படிப்பட்ட சுயசிந்தனை யாளர் என்பது பற்றியும், அதன் லட்சியங்கள் கொள்கைகள், அதன் நடைமுறைகள், சமூகத்தால் அதன் தாக்கங்களாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் பற்றியும் இந்தியாவின் சமூக சீர்திருத்த இயக்கங்கள் என்றழைக்கப்படும் பிரம்மசமாஜம் (வங்காளம்  கிழக்கு), ஆரிய சமாஜம் (பஞ்சாப் மேற்கு) போன்றவைகள் எல்லாம் சமய சீர்த்திருத்த இயக் கங்களே தவிர உண்மையில் சமூக சீர்திருத்த இயக்கமாக அவ்வளவு சாதித்தவை அல்ல என்றும் கூறி 30 நிமிடங்கள், இயக்கத்தினை பற்றி அறிமுகப்படுத்திய உரையை ஆங்கி லத்தில் நிகழ்த்தினார்கள்.

நகைச்சுவையாகவும் பதில்!

அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பேராசிரியர்கள் கேள்வி கள்-சந்தேகங்களைக் கேட்க விரிவாகவும், விளக்கமாகவும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சில விடயங்களில் நகைச்சுவையாகவும் பதில் அளித்தார். நிகழ்ச்சி 4.30 மணிக்கு முடிந்தது. துறைத் தலைவர் அவர்கள் விருந்தினரைப் பாராட்டி நன்றி தெரிவித்துவிட்டு, பல்கலைக் கழகத் துறையின் சார்பாக நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி பெருமைப் படுத்தினார்கள்.

நீண்ட நேரம் மகிழ்ந்து உரையாடல்

இறுதியில் நன்றி தெரிவித்த பிறகு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தில் எல்லோரும் கலந்து கொண்டதோடு, தமிழர் தலைவ ருடன், அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டே கலகலப்பாக நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்து பிறகு விடை பெற்றுச் சென்றனர்!

பேராசிரியர் ரத்தினகுமார் அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களை வீட்டிற்கு வந்து பல் கலைக் கழகத்திற்கு அழைத்துச் சென்று, பிறகு திரும்பவும் வீட்டிற்கு வந்து விட்டுவிட்டு, இந்த நிகழ்ச்சி மிகவும்  மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கும் நிகழ்ச்சி. பெரியார் கொள்கை, இயக்கம், பற்றி மாண வர்கள், பேராசிரியர்கள் மத்தியில் போய்ச் சேர்த்துள்ளது பெருத்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.

பேராசிரியர் சுப. திண்ணப்பன் அவர்களது இந்த ஏற்பாட்டுக்காக அவருக்கு பலரும் மாணவர்கள் பேராசிரியர்கள் உட்பட நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

(குறிப்பு: தமிழர் தலைவர் அவர்களின் ஆங்கில உரை மற்றும் கேள்வி பதில் தனியாக வரும்  இதழ்களில் வெளிவரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...