Saturday, November 19, 2011

பூமியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?


பூமியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?

பூமியின் மேற்பரப்பில் பத்தில் ஏழு பங்கு தண்ணீரால்  மூடப்பட்டுள்ளது. ஆனால் பூமியின் பருப் பொருள் அளவில் ஒரு சதவிகிதத்தில் பதினைந்தில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவில்தான் தண்ணீர் உள்ளது.

பூமி மிகப் பெரியது. அதன் எடை 6 மில்லியன், பில்லியன், பில்லியன் கி.கி. ஆகும். இதில் பாதி அளவு பூமியின் கீழ்ப் பகுதியில் உள்ளது. இப்பகுதி பூமிக்கு அடியில் 660 கி.மீ. (410 மைல்) இல் இருந்து துவங்குகிறது. தண்ணீர் நிறைந்துள்ளதாக தோன்றும் பகுதிகளிலும் கூட, கடல்களை விட அவைகளுக்கு அடியில் உள்ள நிலப்பகுதிகளின் பருப்பொருள் அளவு நாற்பது மடங்கு அதிகமானவை.

2002 இல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு ஜப்பானிய சோதனையின் முடிவு, பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரைப் போன்று அய்ந்து மடங்குக்கு மேலான தண்ணீர் பூமியின் கீழ்ப் பகுதியில் மறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.

செ.மீ.க்கு 2,00,000 கி.கி. என்னும் அழுத்தத்திலும், 1,600டிஊ  வெப்பநிலையிலும், ஆராய்ச்சியாளர்கள்  பூமியின் கீழ்ப் பகுதியில் காணப்படுவது போன்ற மூன்று கனிமக் கலவைகளை உருவாக்கினர். பின்னர் அத்துடன் தண்ணீரைச் சேர்த்து எவ்வளவு தண்ணீரை அது உள் வாங்கிக் கொள்கிறது என்பதைக் கணக்கிட்டனர்.

ஜப்பானியர்களின் சோதனை சரியானதாக இருந்தால்,  பூமியில் இருக்கும் தண்ணீரின் அளவு ஒரு சதவிகிதத்தில்  பத்தில் ஒரு பங்குக்கு உயர்த்தி காணப்பட வேண்டும்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் 
‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள்

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...