Sunday, November 27, 2011

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (2) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)



- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


ஜாதி ஒழியவேண்டியது நியாயந்தான் என்று தெரிந்தாலும் வெளியே வருவ தில்லை. சட்டசபைக்குப் போக இடைஞ் சல் வந்துவிடுமோ என்று பயப்படுகிறான். அதனாலேயே என்னவோ 3000 ஆண்டுகளாக இருக்கும் இழிவு இன்னும் கொஞ்ச நாள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிறான்! ஆனால் ஜாதி ஒழியவேண்டும் என்பதை எதிர்ப்பதற்கு ஆள் கிடையாது. ஏன்?  அது செல் வாக்குப் பெற்றுவிட்டது. அது ஒழியக் கூடாது என்று சொன்னாலும் சட்ட சபைக்கும் போகமுடியாத நிலை வந்துவிட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து போராட்ட அறிவிப்பைச் செய்தார். இதனை 14-10-1957 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பேசு கையில் தெளிவுபடுத்தினார். வண்ணாரப் பேட்டை சொற்பொழிவின் முடிவில் அய்யா நெடுங்காலமாக இருந்து வரும் மானக்கேடு போகவேண்டும். உன் அப்பன், பாட்டன் சூத்திரன். நீயும் சூத்திரன். ஆனால் உன் குழந்தைகள் சூத்திரர்களாக ஆகக்கூடாது. எதையும் இரகசியமாகச் செய்யமாட்டேன். கையெப்பம் வாங்குவேன். மளமளவென்று போட்டுத் தரவேண்டும். முதலில் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்து வேன். அதுவும் எப்படிக் கொளுத்துவேன் என்றால் சும்மா கொளுத்தமாட்டேன். முதலில் இராட்டினத்தை உடைத்துப் போட்டு, பெட்ரோலோ மண்ணெண் ணையோ ஊற்றிக் கொளுத்துவேன். அந்த நெருப்பில் இந்த அரசமைப்புச் சட்டத்தையும் போட்டு வேகவைப்பேன்!  ஆகவே தோழர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு உங்களுக்குச் சரியென்று பட்டால் ஆதரவு தர வேண்டும் என்று ஆதரவுக் கரம் நீட்டச் சொன்னார்.

ஆறுமாதங்களாகச் சென்னையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் 700 பேர் வரை, 1957 இல் சிறை சென்றனர். ஆயிரம் பேருக்குப் பிறகு வேறு வழிகளைக் கையாளுவோம் என்று முன்னரே கூறியிருந்தார். ஆனால் அரசு அந்த அளவிற்குப் பின்னும் கவனிக் கவோ, ஓர் அறிக்கையும் தரவோ இல்லை.
ஜாதிக்குப் பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருப்பதையும், ஜாதியை ஒழிக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதையும் மக்களுக்குத் தம்முடைய கருத்துகளைத் தெரிவிப்பதோடு, அரசின் கவனத்தையும் ஈர்க்க வேண்டியவர்களாக இருப்பதை உணர்ந்தால், ஜாதியை நிலைக்க வைக்க, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள அரசு பாதுகாப்பு அளிக்கிறது எனத் தெளிவாகப் புரிந்து கொண்டால், இன்னமும் கைகட்டிக் கொண்டு சும்மாயிருந்தால் ஜாதித் தீயை அணைக்க முடியாது என்பது தெளிவாகியது.

மக்களைப் பொறுத்தமட்டில் ஜாதியி னுடைய இழிவை உணர்வதில்லை என்பதோடு ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டனர். எப்போது சமயம், கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போ திருந்தே இந்த இழிவை உணராத நிலைக்கு வந்துவிட்டார்கள். இவ்வாறு மக்கள் பிறவித் தொழிலாளர்களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்கப் பெரியார் முயன்றபோது முயற்சி போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் முறுக்கேறி நிற்பதுதான் என்பதை 23-10-1957-இல் நெல்லை மாவட்டம் ஏரலில் பேசுகையில் அடுத்துக் கூறி யிருக்கக் காண்கிறோம்.

திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது எனும் பிரச்சினை வந்தபோது, பெரும்பான்மை யான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் மத்திய நிருவாகக் குழுவில் மேற் கொள்வதை விட, இதற்காகத் தனி ஒரு மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவு பெற்று, அதன் பின் சிறிது நாள்  தவணை கொடுத்து, பிரசாரம் செய்து நடைமுறைப் படுத்தலாம் எனக் கருத்துக் கூறினர். பெரியார் டிசம்பர் 1957இல் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாள் விழாவைத் தனிச் சிறப்பாக நடத்தக் கருதி அவருடைய எடைக்கு எடை வெள்ளி வழங்குவது என முடிவு செய்தனர். இவ்விழாவிற்கு எல்லா மாவட்டங்களி லிருந்தும் தமிழ் மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. எனவே பெரியார் தனி மாநாட்டை எடைக்கு எடை வெள்ளி வழங்கும் விழாவிலேயே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை - அதாவது செலவும், தொந்தர வும் இருக்காது; அனைவரும் தங்கள் கருத்தை அறிவிக்க ஒரு வாய்ப்பு இருக் கும் என்று கருதி விழாவை யொட்டியே தனி மாநாடு. மிகவும் நெருக்கத்தில்                        20.10.1957 இல் பத்து நாட்களில் தொடங் கப்பட்டது. எனவே தஞ்சையைத் தேர்ந் தெடுத்தனர். மாநாடு 3.11.1957 இல் எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங் கிய மாநாடு. இம்மாநாடு கண்டுபெரியார் அய்யாவே பூரித்து எழுதிய வார்த்தைக் கோவைகள் இவை.

எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதைத் தமிழ்நாடு பூராவும் பகுதி (பாதி) செய்கிறது என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும். திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்துப் பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும்  திராவிடர் கழகத்தினர் தலை சிறந்த, கட்டுப்பாடான, நாணயமான, எந்த வித சுயநலமில்லாத, வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்த விதத் தியாகத்திற்கும் முன் வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரைப் புகழைத் தஞ்சை வாங்கிக் கொடுத் துள்ளது.

எனது 40 ஆண்டுப் பொது வாழ்க் கையில் எத்தனை மாநாடுகள் நடந்திருக் கின்றன. தலைமை வகித்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கக் காலம் முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு (மிகப் பெரிய பதிவுக்குரிய மாநாடு) ஜமீன் தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை உறுப்பினர்களும் வந்தி ருந்தார்கள். நல்ல கூட்டம். இருந்தாலும் இதில் அரை பங்குக்கும் குறைவான அளவுதான் இருக்கும். அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும், இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக் கூட நடந்ததில்லை. இன்று திராவிடர் கழகத் தனி மாநாடு என்பதாகக் கூட்டியுள்ளோம். என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு. ஆதரவான மாநாடு.

நான் பெருமையாகச் சொல்ல வில்லை. எங்குக் கூட்டம்  குறைவாக இருந்தால் கூட்டம் இல்லை என்று சொல்லுவதுதான் என் வழக்கம். நானும் நண்பர்களும், தொண்டர்களும் மகிழ்ச் சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது. ஒருவர் நாலு லட்சம் என்கிறார். உள்ள படியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப் படத்தக்கது மான மாநாடாகும்.

இவ்வாறெல்லாம் சொன்ன அய்யா, இந்த மாநாட்டின் பலன் வெற்றி என்று எதைக் குறிப்பிட்டார் என்று கூறுவதுதான் சிறப்பாக இருக்கும்.

என்னைக் கேட்டால் நான் சொல்லு கிறேன். திராவிடர் கழகத் தனி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்குச் செல்ல வழியனுப்பு மாநாடு தான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச் சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது இலேசில் கிடைக்கக் கூடியதல்ல. முன்பெல்லாம் சாதாரணம். ஆனால் அது இப்போது எளிதில் கிடைப் பதாக இல்லை.

இம்மாநாடு தன்னைச் சிறையனுப்பும் மாநாடு என்று பூரிப்பும், உற்சாகமும், மகிழ்ச்சியும் கலந்து கூறிய ஒரே தலைவர் பெரியாராகத்தான் இருப்பார். அதே நேரத்தில் என்ன இலட்சியத்திற்காக இந்தப் போராட்டம் என்பதையும் வலி யுறுத்துகிறார்.
- (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...