Sunday, November 27, 2011

அட, இது தெரியாதா தினமலரே?


வழக்கம்போல தினமலர் வாலாட்டி யுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தேசிய நீரோட்டம் பற்றி வாய் கிழியப்பேசும் கட்சிகளின் விபரீதப் போக்கால், இந்தியாவுக்குள் நீர் பிரச்சினை என்பது சிக்கல் நிறைந் ததாக உள்ளது. போலி தேசியத்தால் கண்ட பலன் இதுதானோ என நினைக்கத் தோன்றுகிறது.

டவுட் தனபாலு: சரி, போலி தேசியத்தால்.. பிரயோஜனமில்லை... நீங்க எப்பவுமே கொடி பிடிக்கிற, ஒரிஜினல் தனித் தமிழ்நாடு பிரி வினை கொண்டு வந்தா, நதி நீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு வந் துடுமா...?

(தினமலர் 26.11.2011)

தமிழ்நாடு தனி நாடு அடைந்து விட்டால் நதிநீர்ப் பிரச்சினை தீருமா என்று கேட்கும் தினமலரே! சேதி தெரியுமா? உமக்கு?

இந்தியாவிலிருந்து தனிநாடாகப் பிரிந்து போன பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதி நீர்ப் பிரச்சினை எளிதில்  தீர்ந்து விட்டது. பங்களாதேசத்துக்கும், இந்தி யாவுக்கும் இடையிலான கங்கை நீர் தாவாவும் தீர்ந்து விட்டதே!

இது தெரியாதா தினமலரே?

இந்தக் கருத்தை அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே எடுத்துச் சொன்னவர்தான் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி! அரைகுறைகள் தெரிந்து கொள்ளட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...