Sunday, October 9, 2011

விட்டலாச்சார்யா கதையைக் கேளுங்க!


விட்டலாச்சார்யா கதையைக் கேளுங்க!

ஆந்திராவில் திருப்பதி போகும் வழியில் காளஹஸ்தியில் சிவன் கோயில் ஒன்று இருக் கிறது. கிருஷ்ணதேவ ராயன் என்ற அரசனால் 500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட அந்தக் கோயிலின் கோபுரம் 2011 மே 26ஆம் தேதியன்று நெடுங்குப்புற விழுந்தது!

இம்மாத முதல் தேதி யன்று கோயில் கலசமும் இடிந்து தலை குப்புற விழுந்தது. தன்னையே காப்பாற் றிக் கொள்ள முடியாத கடவுளின் கோயில் இது.

நேற்று மாலை ஏட்டில் ஒரு செய்தி வெளிவந்துள் ளது. தமிழ்நாட்டில் கன் னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையிலிருந்து 3 கிலோ மீட்டர் துரத்தில் இலந்தையடி தட்டு என்ற ஊரில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென் காள ஹஸ்தி ஆலயம் ஒன்று 200 கோடி ரூபாய் செல வில் முற்றிலும் ஆகம விதிப்படி கட்டப்பட உள்ள தாம். (மற்ற கோயில்கள் எல்லாம் ஆகமவிதிப்படி கட்டப்படவில்லையோ!)

ஆந்திர மாநிலத்தில் உள்ள அந்த காளஹஸ்தி சிவன் கோயிலின் கதை தெரியுமா?

திரைப்பட இயக்குநர் விட்டலாச்சாரியா என்ற ஒருவர் இருந்தார். மந்திரம் - பேய் மாயா ஜாலங்களை மய்யப்படுத்தி படம் எடுக் கக் கூடிய கில்லாடி அவர்!
ஆனந்தவிகடன் இத ழில் (14.12.1986) ஒரு தக வலைத் தெரிவித்திருந் தார்.

ஜெகன் மோகினியில் நடித்த ஆடு, பாம்பு இரண் டுக்கும் காளஹஸ்தியில் உள்ள புனித நதியில் குளித்தால் சாப விமோ சனம் ஏற்படும்; நீங்கள் பழைய உருவை அடை வீர்கள் என்று பரிகாரம் சொல்வதாக எழுதியி ருந்தேன். சென்னையிலி ருந்து திருப்பதி செல்லும் வழியில் காளஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணியத்தலம்; நதிக் கரையில் பழைமை மிகுந்த சிவன் கோயில் இருக் கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. ஜெகன் மோகினி படம் வெளிவந்த பின் ஆந்திரா முழுவதிலி ருந்தும் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் வரத் துவங்கினார் கள். 

இன்றைக்கு அதற்கும் நட்சத்திர மதிப்பு வந்து விட்டது. சமீபத்தில் அங்கு ஒரு படப்பிடிப்புக்காகச் சென்றபோது அங்குள்ள புரோகிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்து, இந்த விவரங் களையெல்லாம் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந் தது என்று ஆனந்த விகட னில் எழுதினார் விட்டா லாச்சாரியார்.

பாழடைந்து கிடந்த அந்தக் கோயில் பகவான் மகத்துவத்தால் தலையெ டுக்கவில்லை. ஒரு சினிமா படத்தினால் பக்தர்களை ஈர்த்திருக்கிறது. விட்டலாச் சார்யா எழுத்தில் சொல்ல வேண்டுமானால் சினிமா வில் அந்தக் கோயில்பற்றி வந்தபோது அதற்கு நட்சத் திர மதிப்பு வந்து விட்டது.

கடவுளின் சக்தி அம் புட்டுதான். கடவுளுக்குச் சினிமாத்தனம் தேவைப்படு கிறது. குட்டிச் சுவராகிப் போன ஒரு கோயில் நிமிர்ந்து நிற்க சினிமா தான் உதவுகிறது.

(சர்வ சக்தி வாய்ந்த தாகக் கூறப்படும் கடவு ளுக்கே சினிமாதான் முட் டுக் கொடுக்க வேண்டி யுள்ள நிலையில், அரசிய லுக்குச் சினிமா தேவைப் படாதா?)

பிரச்சாரத்தால் கடவுள் சரக்கு எடுபடுகிறதே தவிர சொந்த சக்தியால் அல்ல என்பது வெளிப்படை. இந்த நிலையில் குமரி மாவட்டத் தில் அந்தக் கோயிலுக்கு ஒரு கிளைக் கோயிலாம்.

திருப்பதிக்கு சென்னை யில் ஒரு கிளைக் கோயில் கட்டியாயிற்று. சபரி மலை அய்யப்பனுக்கு ஒரு கிளைக் கடை சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் கட்டப்பட்டு விட்டது. தெற்கே தென் காசி வந்து விட்டது.

வியாபாரத்தில் நல்ல வியாபாரம் இந்தப் பக்தி வியாபாரம்தான். ஆரம்பத் தில் வசூல் செய்து ஒரு குழவிக் கல்லை நட்டு வைத்து கோயில் கட்டி விட்டால், பிறகு பிசினஸ் படுஜோர்தான்!

திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் வசூல் மட்டும் 14 கோடி ரூபாயாம்.

இந்தக் கொள்ளை வேறு எங்கு நடக்கும்? இந்தக் கடைகளை அரசே எடுத்து நடத்தினால் டாஸ்மாக்கைக்கூட இழுத்து மூடி விடலாம் அல்லவா?

ஒரு இறுதிப் பகுதி (Tail Piece)

காளஹஸ்தி சென்று புண்ணிய நதியில் மூழ்கி னால் தோஷம் நீங்கும் - புண்ணியம் கிடைக்கும் என்று கூறி ஜெகன் மோகினி படம்

எடுத்த அந்த விட்டலாச்சாரியார் அமெரிக்கா சென்று By Pass Surgery செய்து கொண்டார். இந்தத் தகவ லும் அதே ஆனந்தவிக டன் இதழில்தான் (14.12. 1986) வெளிவந்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...