Tuesday, October 11, 2011

எ(இ)ப்படி இருக்கு அரசியல்?




கடலூர் மாவட்டம் அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளரும் திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலைய  ஆய்வாளருமான கோவிந்தன் என்பவர் அதிமுக வேட்பாளருக்காக துண்டறிக்கைகளை வழங்கி தேர்தல் பிரச்சாரம் செய்தாராம். அரசு ஊழியர் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்று கூறி, தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட உள்ளதாம்.ராஜாவை விஞ்சிய விசுவாசிகள் என்று சொல்லுவதுண்டு. இந்தப் பட்டியலில் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆளுங் கட்சிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தால் ஒன்றும் ஆகாது என்கிற ஆணவமோ! ஆனாலும் எதிர்க்கட்சிகள் இருப்பதை மறக்கலாமோ! அரசு ஊழியர்கள் தேர்தலுக்குப் பாடுபட்டார்கள் என்று கூறி வெற்றி பெற்றவர் தேர்தல் செல்லாது என்று தீர்ப்புகள் எல்லாம் இதற்குமுன் வந்துள்ளது என்பதை அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டுவது - பார்ப்பனர் அல்லாதவர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்று காலமெல்லாம் குரல் கொடுத்துவரும் திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துவது நமது கடமை!காரைக்குடியில் 36ஆவது வார்டு நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 213 பேர்கள் போட்டியிடு கிறார்களாம். (அரசுக்கு வருமானம்தான் - வாழ்க ஜனநாயகம்!)33ஆம் வார்டில் ஒரு வேட்பாளர் துண்டறிக்கை யோடு 200 ரூபாய் பணமும் தருகிறாராம். ஆள் இல்லாத வீட்டில் துண்டறிக்கையோடு இரு நூறு ரூபாய் நோட்டுகளையும் குண்டூசி மூலம் இணைத்து வீட்டுக்குள் போட்டு விட்டுப் போய் விடுகிறார்களாம்!ஜனநாயகமா - பணநாயகமா என்று சொல்லுவதற்கு அழகாகத்தான் இருக்கிறது. பணம் வாங்கிக் கொண்டு வாக்குரிமையை விற்கலாம் என்கிற மனப்பான்மை மக்களிடத்தில் குடி கொண்டு இருக்கும்வரை - இந்த நாட்டில் எதுதான் நடக்காது?தேர்தலுக்குப்பின் வெற்றி பெற்றவர்கள்மீது குறை காண வாக்காளர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஏதாவது கேட்டால் வெற்றி பெற்றவர் சொல்ல மாட்டாரா? நீ ஒன்றும் எனக்கு சும்மா ஓட்டுப் போடவில்லை. நான் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போட்டாய்! என்று திருப்பிக் கேட்டால் வாக்காளர் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வாராம்?திருவள்ளூர் மாவட்டத்தில் சில ஊராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் - வாக்காளர்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்களாம். தெரு விளக்குப் போடுவது, கழிவு நீர் தேங்கி இருப்பதை அகற்றுவது போன்ற காரியங்களனைத்தையும் சொந்த செலவில் தீர்த்து வைக்கிறார்களாம்.தேர்தல் முடியும் வரை தானே இந்தக் கூத்துகள் எல்லாம்! அதற்கப்புறம் அம்போதான். தெருவிளக்கு களையும், சாலைகளையும் போட்டதாக பதிவேட்டில் இருக்கும். குளம் வெட்டியதாகவும் ஏடுகளில் இருக்கும். ஆனால் செயலில் மட்டும் இருக்காது (என் கிணறு காணவில்லை என்று நடிகர் வடிவேலு காவல்துறையிடம் புகார் கொடுத்தது போன்ற திரைப்படக் காட்சி நினைவிற்கு வருகிறதோ!)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...