Thursday, October 6, 2011

பெரியாரின் தேவை : பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்


பெரியாரின் தேவை : பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்


குறள் நெறிக்கு காப்பு செய்யத் தன்னிடம் வாதாடும் குறளன்பருக்குப் பெரியார் பதிலு ரைக்கிறார்:

தவிர, நமது தோழர் அவர்கள், குறளில் ஆண்களுக்கும் வள்ளுவர் கற்பு கூறியிருப்பதாகச் சொல்லுகின்றார். இருக்கலாமானாலும், பெண் களுக்குக் கூறியது போலில்லையென்றுதான் கூறுகிறோம். அதாவது, ஆண்களின் கற்புக்கு நமது தோழர் அவர்கள் இரண்டு குறட்பாக்களை எடுத்துக்காட்டாகக் கூறியிருக்கிறார். அவை.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிலைகாக்கும் காப்பே தலை.
நிறைநஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

இவைகளை ஆண்கள் கற்பை வலியுறுத்தக் கூறியதாகக் கூறுகிறார்போல் காண்கின்றது. இவைகள் அதற்காகக் கூறப்பட்டவையல்ல என்பது நமது அபிப்ராயம்.

அதாவது, முதற் குறளுக்கு, காவலினால் பெண்கள்  கற்பாயிருப்பதால் பயனில்லை. பெண் கள் தாங்களாகவே கற்பாயிருக்க வேண்டும் என்பதுதான் கருத்தாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இரண்டாவது குறள், விலைமாதரைப் புணர் கின்றவர்களுக்குக் கூறிய பழிப்புரையேயல்லாமல், காதல் கொண்ட மற்ற பெண்களைக் கூடித் திரியும் ஆண்களைக் கூறியதல்ல வென்பது நமது அபிப்ராயம். நிறை என்கின்ற வார்த்தை மாத்திரம் காணப்படுகின்றதே தவிர, நிர்பந்தமில்லை.

ஆகவே, இருபாலருக்கும் சமநிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு மற்றும் பல குறட்பாக்க ளையும் நாம் கூறக்கூடும். திருமணம் என்கின்ற ஏற்பாட்டுக்கு எதிர் காலத்தில் தேவையில்லாமல் போகலாம் எனக் கூறும் பெரியார், ரஷியர்களை இகழும் பாரதி தாசனுக்கு மாறாக, ரஷியாவில் ஏற்பட்ட மாற்றங்களைப் புகழ்கிறார்.

நான் ரஷ்யாவில் பார்த்தேன். திருமணம் என்ற முறையின் அமைப்பும் ஏற்பாடும் இல்லாமலேயே வாழ முடியும் என்பதை, இதற்குக் காட்டுப்பாடற்ற காதல் (குசநந டுடிஎந) என்று பெயர். இந்த முறையும் அங்கு அமலில் வைத்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அந்நாட்டு மக்கள் சோற்றைப் பற்றிக் கவலையில்லாமல் வாழ் கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கை ஆண்-பெண் உறவிலும் நடத்துகிறார்கள். சொத்து, வாரிசு உரிமை இருப்பதால்தான் நம்முடைய சமுதாயத் தில் கட்டுப்பாடு உள்ள குடும்பமுறை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதைத்தான் உயர்ந்த முறை என்று கூறி மதவாதிகள் வாழ்கிறார்கள். காதல் என்பதற்கும் கலியாணம் என்ற ஏற்பாட்டிற்கும் எவ்விதத்திலும் சம்பந்தமில்லை. கலியாணம் செய்துகொண்ட பெண்ணிடம்தான் காதல் உணர்வு உண்டாக வேண்டும் என்ற இயற்கை நியதி இல்லை. தான் கலியாணம் செய்து கொள்ளாத பெண்ணிடம் கூட காதல் ஏற்பட்டுவிடலாம். பெண்களை வர்ணிப்பது பற்றி

பெண்களை பெருமை, வருணனை ஆகிய வைகளில் பெண்கள் அங்கம், அவயங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி 50 வரி இருந்தால், அவர்களது  அறிவு அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமை பற்றி ஒருவரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங் கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழ்வது ஆகியவைகள் பெண்கள் சமுதா யத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?

பெரியாரின் ஒட்டுமொத்தமான அடிப் படை இலட்சியங்கள் பார்ப்பான்-பஞ்சமத் தன்மை, ஏழை-பணக்காரத்தன்மை, படித்தவர்-படிக்காதவர்தன்மை, ஆண்-பெண் தன்மை ஆகியவற்றை ஒழித்தலாகும். அவர் இவற்றில் ஒன்றிரண்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ள வேண்டியிருந்த வரலாற்று வரம்புகளையும் அவரது இயக்க வரம்புகளையும் கடக்காமல் பழைய வரலாற்றைத் திரும்ப நிகழ்த்திக் கொண்டிருப்பது அவருக்குப் பெருமை சேர்க்காது. மாறாக, அது அவரை ஒரு வெறும் நாத்திகராகவோ, இடஒதுக்கீட்டுக் கோரிக்கை யாளராகவோ குறுக்கிவிடுபவர்களுக்கே பயன் படும்.

இந்தியாவில், தமிழகத்தில் பெண்ணியச் சிந்தனை, புஃலெ -பெரியார்-அம்பேத்கர் மரபின் ஜாதியொழிப்புத் தத்துவம் ஆகியன வற்றோடு, தன்னை ஆக்கபூர்வமாக ஒன்றி ணைத்துக்கொள்ள வேண்டும். 

பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் ஒழியாது. பார்ப்பனியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை மறுப்பது ஆகும். பார்ப்பனரல்லாதார் உலகம் என்பது பார்ப்பனர்களை அகற்றிவிட்டு அவர்களது இடத்தில் பார்ப்பனரல்லாத, சூத்திர ஜாதியினர் அமர்ந்துகொண்டு அவர்களுக்குக் கீழே உள்ளவர்களை நசுக்குவது அல்ல; மாறாக சாதியம், ஆணாதிக்கம், பணக்காரனாதிக்கம் ஆகிய ஒழித்த சுயமரியாதை சமதர்ம உலகமே அது.

அரசியல் துறையில் ஏற்படும் சீர்திருத்தங் களைக் காட்டிலும் குடிமைசமுதாயத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களுக்கே முதன்மை தந்து வந்த பெரியார், அரசாங்கப் பதவிகளையும் அதிகாரப் பகிர்வையும் முதன்மை யானதாகக் கருதுபவர்களை விமர்சனம் செய்து வந்தார்.

சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளரும் செயலார்வருமான மீனாட்சி சட்ட மறுப்பியக் கத்தில் பங்கேற்ற பெண்கள் உண்மையில் மறியல் செய்ய வேண்டிய இடங்கள் என்ன என்பதை வரையறுத்தார்:

(அவை)   பதுபானக் கடையல்ல, அந்நிய ஆடையக் கடையல்ல, விதேசி சாமான் கடை யல்ல... பெண்கள் உரிமைக்கு, சுதந்திரத்துக்கு, முன்னேற்றத்துக்குரிய தீர்மானங்கள் சட்ட மாக்கப்பட்டு வருகையில், அதை எதிர்க்கிற முட்டுக்கட்டை போடுகிற, ஊறு தேடி சூழ்ச்சி செய்கின்ற வைதீகர்கள் வீடுகளில்... மறுமணம் செய்து மகிழ்ச்சியுற எண்ணும் உங்கள் இளம் விதவைச் சகோதரியைத் தடுத்துவைக்கும் வைதீகக் குடுக்கைகள் வீட்டில்.. தன் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் பொட்டுக்கட்ட யத்தனித்தால் அதைத் தடுக்க உங்கள்  தேவதாசி சகோதரியைக் காப்பாற்ற... மறியல் செய்யுங்கள்...

காந்தியின் உண்ணாவிரதத்தைக் கண்டித்தும் அம்பேத்கருக்கு ஆதரவாகவும் சுயமரியாதை இயக்கம் பெரிய பொதுக்கூட்டமொன்றை 21.9.1932 அன்று ஈரோட்டில் நடத்தியது. எஸ்.வி. லிங்கம் தலைமையில் அ.பொன்னம்பலமும் நாகை என்பி.காளியப்பனும் பேசினர். (குடிஅரசு 25.9.1932). 18.9.1932 அன்று சிதம்பரத்தில் சகஜானந்தா, எம்எல்சி தலைமையில் நடைபெற்ற ஆதி திராவிடர்கள் பொதுக்கூட்டம் பற்றிய செய்தியுடன் அவர் காந்தியின் உண்ணா விரதத்தைக் கண்டித்து ஆற்றிய உரையினையும் குடிஅரசு பிரசுரித்தது. அந்த உரையின் ஒரு பகுதி கீழ் வருமாறு:

சிதம்பரத்திலுள்ள பார்ப்பன தீட்சிதர்களைப் பார்த்து நீங்கள் இன்றோடு தீண்டாமையை விட்டுவிடுகின்றீர்களா? என்று கேட்டுப் பாருங்கள். என்ன பதில் கிடைக்கும்? காந்தி இறப்பதைப் பற்றிக் கவலையில்லை, தீண்டாமை யொழிவதை நாங்கள் விரும்பமாட்டோம். எங்கள் உயிரை விட்டேனும் தீண்டாமையையும், இந்து மதத்தையும் காப்பாற்றவேதான் பாடுபடுவோம் என்றுதான் பதில் வரும்.

பெரியார் காந்தியத்தை டால்ஸ்டாயிசத்துடன் ஒப்பிட்டு அதனை விமர்சனம் செய்ததற்கான காரணங்களை நாம் காணவேண்டும். உடலு ழைப்பின் முக்கியத்துவத்தை, உழைப்பின் பெருமையை உயர்த்துப் பிடித்த காந்தியைப் பெரியார் ஏன் விமர்சித்தார் என்பதை காண வேண்டும். ரஸ்கின், டால்ஸ்டாய் ஆகிய சிந்தனையாளர்கள் உழைப்பின் பெருமையை உயர்த்திப் பேசிக்கூறியிருந்த கருத்துகளைக் காந்தி பயன்படுத்திக்கொண்டார். தீண்டாமை என்ற பிரச்சினையை ஒரு உண்மையான இந்துவின் அறவியல் நிலைப்பாட்டிலிருந்து அணுகியதைப் போலவே, ரஸ்கினும் டால்ஸ்டாயும் உடலு ழைப்பை அறவியல் கண்ணோட்டத்திலிருந்து பார்த்ததை காந்தி ஏற்றுக்கொண்டார்.

ஆனால் ஒரு விநோதமான தர்க்கமொன்றைக் கையாண்டு தான் கூறிவந்த இலட்சியவடிவிலான வருணதரும முறை என்பது டால்ஸ்டாயின் தத்துவத்துக்கு ஒப்பானது என்று வாதிட்டார். ஒவ்வொருவரும் தனது உடலுழைப்பின் மூலம் வாழ வேண்டும் என்று டால்ஸ்டாய் கூறியதை, ஒவ்வொரு வருணமும் அதனதற்குரிய தொழிலைச் செய்ய வேண்டும் என்கிற வருணதருமத்துடன் ஒன்றாகச் சேர்த்தார். பார்ப்பனர், சத்தியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் தமக்குரிய தொழிலை, சமூகக் கடமையாக, சமுதாயத்தில் தமக்குள்ள பொறுப்பாக ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும் என்றார். அவர்கள் செய்யும் தொழில்கள் அனைத்துமே உடலுழைப்புக்கு இணையானவைதான், ஏனெனில் உடலுழைப்பு என்பதும் ஒரு கடமைதான் என்றார் காந்தியார்.

கீதையிலுள்ள ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டும் காந்தியார், கிருஷ்ண பரமாத்மா, மனித உடலை ஒரு யாகப்பொருளாக, யக்ஞப் பொரு ளாகப் பாவித்து யக்ஞம் என்பதையே உடலு ழைப்பு என்று விளக்கமளித்தார். அதாவது கீதையும்கூட உடலுழைப்பின் சிறப்பைக் கூறுவ தாக காந்தி விளக்கம் தந்தார்.

உடலுழைப்பு செய்வெதன்பது ஒவ்வொரு வரின் கருமம் என்ற காந்தியார், கருமம் என்பது பிரதிபலனை எதிர்பாராமல் செய்யப்பட வேண்டிய கடமை என்றார்.

சங்கராச்சாரி என்பவர் நமது மாநாட்டுக்குத் தலைமை வகிக்க ஒப்புக்கொண்டாலும் ஏற்றுக் கொள்வதில் நமக்கு ஆட்சபணை இல்லை. ஏனெனில் அவர் நமது கூட்டத்திற்கு வருவதற்கு முன் நம் லட்சியங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும் உணர்ந்துகொண்டுதான் வருவார். அப்படி இல்லாவிட்டாலும்கூட அவரது உபதேசத்தாலோ பிரசாரத்தாலோ நமது இயக்கக் கொள்கைகள் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும் அல்லது நமது கொள்கைக்காரர்கள் மனம் திரும்பிவிடுவார்கள் என்று நாம் பயப்படவேண்டியதில்லை. இந்த அடிப்படையில்தான் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிற்குத் தலைமை வகிக்க இந்து மகாசபைத் தலைவர் ஜெயகரையும் அழைத்தார்.  -

(17.9.2011 சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழச்சி தங்க பாண்டியன்  ஆற்றிய உரை).

1 comment:

SURYAJEEVA said...

தேவையான பதிவு

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...