Tuesday, October 4, 2011

அரசியல் இ(எ)ப்படி இருக்கு!

அரசியல் இ(எ)ப்படி இருக்கு!

கோயில் முன்பு வைத்து கேட்கிறேன். அனைவரும் தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டார் தேமுதிக தலைவர் விஜய்காந்த். அங்கு கூடியிருந்தவர்கள் வாக்களிப்போம் என்றனர்.

அதற்கு அவர் யாராவது பொய் சொன் னால் சாமி கண்ணைக் குத்தி விடும் என்றார்.
 
எப்படி இருக்கு?

ஏன் இதோடு நின்று விட்டார்? இவற்றை யும் சேர்த்துச் சொல்லலாமே!

கோழி முட்டும்; கொசு உதைக்கும், மூணு கண்ணன் வந்து ராத்திரியில் முழியைப் பிடுங்குவான், காட்டேரி வந்து வீட்டு வாசலில் கத்தும் அர்த்தராத்திரியில் பேய் வந்து அடிக்கும் என்றும் சொல்லியிருக்கலாமே!

தேமுதிகவுக்கே ஓட்டுப் போடுவேன் என்று துணியைப் போட்டுத் தாண்டிச் சொல்ல வேண்டும்; தீபத்தை அணைத்துச் சத்தியம் செய்ய வேண்டும் என்றுகூட சொல்லியி ருக்கலாமே - அடுத்தடுத்து சொல்லுவாரோ, என்னவோ!
கடைசிச் செய்தி: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 13ஆவது வார்டுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த தேமுதிகவைச் சேர்ந்த கண்ணன் என்பவர், நேற்று தன் மனுவை வாபஸ் வாங்கச் சென்றாராம். ஏன்? இன் னொரு கட்சிக்காரருக்காக! சேதி அறிந்த தேமுதிகவினர் ஆசாமியை வளைத்துப் பிடித்துள்ளனர்.

அவர்களுக்கெல்லாம் டிமிக்கிக் கொடுத்து சுவர் ஏறிக் குதித்துக் கொல்லைப்புறம் வழியாகச் சென்று வாபஸ் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்துள்ளார். தேர்தல் அதிகாரியோ காலம் கடந்துவிட்டது - இனி மனுவை வாங்க முடியாது என்று கை விரித்துவிட்டாராம்.

ஹி.... ஹி....

எப்படி இருக்கு அரசியல்!

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...