Tuesday, October 4, 2011

நவராத்திரி பக்தர்களின் சிந்தனைக்கு!

நவராத்திரி பக்தர்களின் சிந்தனைக்கு!

இந்த விஜயதசமியை வைத்து இந்தப் பத்திரி கையாளர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே சகிக்கவில்லை!

அப்படியே உருகி உருகி எழுதுகிறார்கள். இந்தப் பத்திரிகை உரிமையாளர்களும், ஆசிரியர் குழுவினரும் இந்தக் கடவுள்களை, கடவுளச்சிகளை அப் படியே நூற்றுக்கு நூறு நம்புபவர்கள் போல நடிக்கிறார்கள்.

ஒரு சிறு தலைவலி வந்தால்கூட ஆஸ்ப்ரோ மாத்திரையை நாடும் இவர்கள், மக்கள் மட் டும் பக்தியில் புத்தியைப் பறி கொடுத்து நாச மாகப் போக வேண்டும் என்கிற அவ்வளவு நல்ல எண்ணம்!

இதே கூட்டம் ஆன்மிகம் என்ற ஒரு பகுதியை வெளியிடும். அதில் பார்த்தால் பகவான் ஒருவனே அவனுக்கு உருவ மும், நாமமும் கிடையாது - நம் நெஞ்சுக்குள்ளேயே கடவுள் - அது கோயில் களில் இல்லை; சிலைகளில் இல்லை என்று மூக்கைச் சிந்தி எழுதுவார்கள்.

இவ்வளவையும் 3-ஆம் பக்கத்தில் எழுதிவிட்டு 13-ஆம் பக்கத்தில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி என்று கதை கட்டுவார்கள். தலபுராணங்கள் அள்ளிக் கொட்டுவார்கள்.

இந்தப் படித்த பாமரர் களும் இந்த முரண்பாட் டைப்பற்றி ஒரு கணமும் 

சிந்திக்க மாட்டார்கள். பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுமே!

நவராத்திரியின் நாயகியைப் பற்றி ஒரு பாடல் ஒரு எட்டில்:

பால்கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்

படித்துறையில் பால் கொடுத்தாய்!

பச்சைவெற்றிலைதுப்பி கவிகாளமேகத்தைப் பாட்டரசன் ஆக்கி வைத்தாய்! 

வேல் கேட்ட

பிள்ளைக்கும் செந்தூரில் சமர் செய்ய

விருப்பமுடன் வேல் கொடுத்தாய்!

விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்

விலகிடும் வழி அமைத்தாய்!

நூல் கேட்ட ஞானத்தில் நூறு கவி பாடுமனை

நோக்கி நீ எது கொடுத்தாய்?

நொடிப் பொழுதில் என் வாழ்வில் படிப்படியாய்

துயரங்கள் நுழைவதற்கு ஏன் விடுத்தாய்?

வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள் வரும் காலம் ஆக்க வருவாய்!

வளமான வாழ்வு தரும் நவராத்திரி நாயகியே

வளம் காண வைக்கும் உமையே!

ஆடு மேய்த்துக் கொண் டிருந்த சிறுவன் ஒருவன் ஓரிரவு அகிலாண்டே சுவரியின் ஆலய நடையில் தன்னை அறியாது கண் ணயர்ந்து தூங்கினான். அகிலாண்டேசுவரி சூலமேந்தி எழுந்து வந்தார். உறங்கிய சிறுவனை உசுப்பி, வெற்றிலையை அவன் நாக்கில் உமிழ்ந்து என்னைப் பற்றிப் பாடு என் றாள். எழுந்த சிறுவனோ காளமேகம் ஆனான். அகர முதல எழுத்தெல் லாம் அறிய வைத்தாய் தேவி,   ஆதிபராசக்தி என்று உணரவைத்தாய் தேவி என்று பாடத் தொடங்கினானாம். கவி காளமேகம் ஆனான். ஓரி ரவில், ஆடு மேய்த்த வனைப் பாடு என்று சொன் னவுடன் அவன் கவிஞன் ஆனது அம்பிகையின் அருள்தானாம்.
 
அப்படி என்ன ஒரு கடவுளுக்குத் தற்புகழ்ச்சி?

தன்னைப் பற்றிப் பாட வேண்டும் என்கிற தலைக்கனம் உள்ளவளும் ஒரு கடவுளா?

தற்புகழ்ச்சி, தலைக் கனம், செருக்கு என்ப தெல்லாம் கீழ்க்குணம் என்பது உலகம் ஒப்புக் கொண்டவையல்லவா?

கீழ்க்குணம் கொண் டவள் கடவுளா? அந்தக் குணங்கொண்டவளைக் கும்பிடுவதால் பக்தர்களுக் குக் கிடைக்கக்கூடியதும் கீழ்மைகள்தானே?

பத்திரிகை நடத்தும் உத்தமர்கள் ஒரு கணம் இது குறித்து சிந்தித் தார்களா?

பாமரர்களின் பக்தியும் பணமும்தான் முக்கியமா?

ஒரு கணம் கடவுளுக் கும் கடவுளச்சிகளுக்கும் உள்ள அக்கறை எல்லாம் பார்ப்பனர்கள் மீது தானோ! ஞானசம்பந்தனுக்கு ஞானப்பால் ஊட்டினாள் - ஒரு காளமேகத்துக்கு எச்சிலைத் துப்பி கவிஞனாக்கினாள்.

கடவுள்களின் கழுத்தில் எல்லாம் பூணூலைத் தொங்கவிட்டுள்ள நாட்டில் இப்படித்தானே எழுதி வைப்பார்கள்.

ஆதி பராசக்தி எச்சில் துப்பி கவிஞனாக்கினாளே காளமேகப் புலவனை - அந்தப் புலவனின் யோக் கியதை என்ன?

திருவானைக்கா தாசி வீட்டில் மயங்கிக் கிடந்த வன்தானே - மறுக்க முடியுமா? அந்தத் தாசி சைவத்தைச் சேர்ந்தவளாம்.

காளமேகப் புலவனோ வைணவன்; ஒரு நாள் அந்த வைணவனைப் பார்த்து உன்னைத் தீண் டேன் என்று மறுத்தாளாம்!

வைணவனான அந்தக் காளமேகம் அந்தத் தாசி மீது கொண்ட மோகத் தால் அடுத்த கணமே தன்னைச் சைவனாக் கிக் கொண்டானாம்.

பணத்தைக் கொடுத்து, பொருளைக் கொடுத்து மதம் மாறச் செய்கிறார்கள் என்று கூச்சல் போடும் ஒரு கூட்டம் நாட்டில் இருக் கிறது. கேவலம் ஒரு தாசியின் உடல் சுகத் துக்காக மதம் மாறி யவன்தான் அவாள் கூட்டத்தைச் சேர்ந்த காளமேகம். நாக்கைப் பிடுங்கிக் கொள் வார்களா?

தேவியின் தெய்வ எச்சில் சாப்பிட்டு கவி காளமேகம் ஆனவன் ஒழுக்கவானாக இல் லையே - இதுதான் கடவுள் சக்தியா - தெய்வ பக்தியா? நவராத்திரியைக் கொண் டாடுவோரே சிந்திப்பீர்!

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...