Thursday, October 6, 2011

உள்ளாட்சித் தேர்தல்


வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு

அரக்கோணம், அக். 6- உள்ளாட்சி தேர்தலை யொட்டி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  தமிழகத்தில் அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடம் வாக்குசேகரிக்க அணுகும்போது வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

1.வாக்குசேகரிப்பதில் வாக்காளர்களை நிர்ப்பந் தித்தல், அச்சுறுத்துதல், மிரட்டுதல், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் செல்லவிடாமல் தடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 2.வாக்குச் சாவடியில் இருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் அலுவலகம் அமைக்கக்கூடாது. வாக்குச் சாவடி அருகே எந்த அறிவிப்பும் செய்யக்கூடாது.

சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. சின்னங்கள் எதுவும் வைக்கக்கூடாது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக் குள்ளும், வாக்குச்சாவடி பகுதியில் இருந்து நூறு மீட்டர்கள் தொலைவிற்குள்ளும் வாக்குசேகரிக்க கூடாது. 3.ஒலி பெருக்கி மூலமாக மேற்படி பகுதியில் ஓசை எழுப்புதல், கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு உணவு, மது மற்றும் போதை பொருட்களை வழங்கக் கூடாது. 4.வாக்குச்சாவடிக்கு செல்ல வாக்காளர் களுக்கு வாகன வசதி எதுவும் ஏற்படுத்தி தரக்கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக-மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி

திருப்பூர், அக். 6- உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன. இந்நிலையில் திருப்பூரில் மாநகராட்சி வார்டு தேர்தலில் இவை இரண்டும் தனித்து போட்டியிடு கின்றன. திருப்பூரில் மேயர் பதவி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. 60 வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சில நாள்களாக நடந்து வந்தது. திரும்பப் பெறுவதற்கான கால அவகாசத்துக்குள் உடன்பாடு ஏற்படும்.

அதன் பின்னர் ஒதுக்கப்படாத வார்டுகளில் அந்தந்த கட்சியினர் திரும்பப் பெறு வார்கள் என்று தேமுதிகவும், மார்க்சிஸ்டும் தெரி வித்தன. 60 வார்டுகளுக்கும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 31 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.

கூட்டணியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கள் 35 வார்டுகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தே.மு.தி.க, மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே கடந்த சில நாள்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், யாரும் நேற்று முன்தினம் மாலை வரை திரும்பப் பெறவில்லை. வார்டுகளில் தேமுதிகவும், மார்க்சிஸ்டும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், மேயர் பதவிக்கு கூட்டணி இருந்தாலும், கவுன்சிலர் பதவிக்கு கூட்டணி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

31 வார்டுகளில் தனித்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மேயர் பதவிக்கு தே.மு.தி.க. வேட்பா ளரை ஆதரிப்பார்கள் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

31 வார்டுகளில் 2 இயந்திரம்
சென்னை, அக். 6- சென்னை மேயர் வேட்பாளருக்கு 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துவது போன்று 31 வார்டுகளில் கவுன்சிலர் தேர்தலுக்கும் 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார். சென்னை, கோயம் பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலு வலகத்தில், உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்த கூட்டம் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான கார்த்தி கேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் 200 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 4,876 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு மின்னணு இயந் திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர் களை பதிவு செய்ய முடியும். மேயர் தேர்தலில் 32 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதனால் மேயர் வேட்பாளர் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் பயன்படுத்தப்படும். அதேபோன்று கவுன்சிலர் பதவிகளுக்கு 31 வார்டுகளில் மட்டும் 16 பேருக்கும் அதிகமானோர் போட்டியிடுகிறார்கள். அந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கவுன்சிலர் தேர்தலுக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப் படும். மாநகராட்சி தேர்தலுக்காக 17,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. தற்போது 15,500 மின்னணு இயந்திரங்கள் உள்ளது.

2,000 இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள் ளோம். வெளியூர்களில் இருந்து 2 நாளில் இயந்திரம் வந்து விடும். மேயர் தேர்தலில் 2 மின்னணு இயந் திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து 2 நாளில் விளக்கம் அளிக்கப்படும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து காவல்துறை யினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அந்த வாக்குச் சாவடிகளில் வீடியோ கண்காணிப்புடன் வாக்குப் பதிவு நடத்தப்படும். இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...