புதுடில்லி, அக் 9- சினிமா நடிகரின் மனைவி கருவுறுவது குழந்தை பெற்றதுதான் முக்கியமான செய்தியா என்று வினாவை எழுப் பியுள்ளார். இந்தியப் பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவரும், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி யுமான மார்க்கண்டேய கட்ஜு.
தேவையற்ற, அவசிய மற்ற வீண் பிரச்சினை களையே ஊடகங்கள் பரபரப்பாக்கிக் காட்டு கின்றன என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி பதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான நீதியரசர் மார்க்கண் டேய கட்ஜு கூறினார். நான் அலுவலகக் கோப் புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அபராதங்கள், உரி மத்தை ரத்து செய்தல் போன்ற தண்டனைகள் விதிக்க விதிகளில் இடம் இருக்க வேண்டும் என்று சிலர் ஆலோ சனை கூறியிருக்கிறார் கள். ஆனால் இவ்வாறு அச்சுறுத்தி பணிய வைப்பதை விட, பேசி மனநிறைவடையச் செய்வதே தனது அணுகு முறையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
வறுமையும், வேலை யின்மையும்தான் நாடு எதிர் கொண்டுள்ள மாபெரும் பிரச்சினை களாகும். நாட்டுக்கு முக் கியமானதும் தேவை யானதும் சினிமா நடிக ரின் மனைவி கருவுற் றிருக்கும் செய்தி அல்ல என்று தனது புதிய பொறுப்பில் சேரும் போது கட்ஜு கூறினார்.
ஒரு சினிமா நடி கரின் மனைவி ஒரு குழந்தை பெற்றாரா அல்லது இரட்டைக் குழந்தைகளைப் பெற் றாரா என்ற செய்தியை வெளியிடுவதன் மூலம் நாட்டின் எந்தப் பிரச் சினை தீரப்போகிறது? ஆனால் இது போன்ற செய்திகள்தான் பத்திரி கையின் முதல் பக்கத்தில் முக்கியமான இடத்தில் வெளியிடப்படுகின்றன என்று கூறிய அவர், பொதுமக்களுக்கு சேவை செய்பவர் என்று உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டி ருந்தால், பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளைத் தீர்க்க முயலவேண்டும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment