Friday, October 7, 2011

தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:


தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?

சில நேரங்களில் அறிவு சுடர் விடும்படி, ஆனால், ஒரே மாதிரி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த அந்தோணியோ மியூசி என்ற பிளாரன்ஸ் நாட்டுக் கண்டுபிடிப்பாளர் 1850 இல் அய்க்கிய அமெரிக்க நாடுகளை வந்தடைந்தார். 1860 ஆம் ஆண்டில் டெலட்ரோபோனோ என்று தன்னால் அழைக்கப்பட்ட ஒரு மின் கருவியின் செயல் பாட்டினை அவர் முதன் முதலாக செய்து காட்டினார்.

கிரகாம் பெல்லின் தொலைபேசிக்கு காப்புரிமை அளிக்கப்படுவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு 1871 இல்  அந்தோணியோ மியூசி  காப்புரிமை வழங்குவது போன்ற ஓர் இடைக்கால உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்தார்.

ஸ்டேடன்ட் தீவுக்குப் படகுச் சவாரி சென்றபோது படகின் கொதிகலன் வெடித்ததால் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்ட அந்தோணியோ மியூசியின் உடல் நிலை அதே ஆண்டில் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆங்கிலம் பேசத் தெரியாதவரான அவர், மற்றவர்களின் உதவியால் வாழ்ந்து கொண்டிருந்தார்; அதனால் தனது காப்புரிமையை புதுப்பிக்கத் தேவையான 10டாலர் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டார்.

1876 இல் பெல்லின் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வழங்கப்பட்டபோது, அந்தோணியோ மியூசி வழக்கு தொடர்ந்தார். மேற்கு யூனியனில் இருந்த பரிசோதனைச்சாலைக்கு தனது மாதிரிக் கருவியையும் அதற்கான அசல் வரைபடங்களையும் அவர் அனுப்பி வைத்தார். அசாதரணமான ஒரு நிகழ்வாக அந்த நேரத்தில் பெல் அதே பரிசோதனை சாலையில் பணியாற்றி வந்தார். அந்தோணியோ மியூசி அனுப்பிய மாதிரிக் கருவியும் வரைபடங்களும் மாயாமாக மறைந்து போயின.

அந்தோணியோ மியூசி தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்,  1889 இல் அவர் இறந்துபோனார். இதன் விளைவாக நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த பெருமை அவருக்குக் கிடைக்காமல் பெல்லுக்குத்தான் கிடைத்தது.

அந்தோணியோ மியூசிக்கு ஏற்பட்ட இழப்பு 2004 ஆம் ஆண்டில் ஓரளவுக்கு சரிக்கட்டப்பட்டது. அந்தோணியோ மியூசியின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனை அங்கீகரிக்கப்பட வேண்டியவை. தொலைபேசியைக் கண்டுபிடிப்பதில் அவர் ஆற்றிய பணி நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் அவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

கிரகாம் பெல் ஒரு முழு ஏமாற்றுக்காரர் அல்ல; புதுமைகளைக் கண்டு பிடிக்கும் தேடுதலில் அவர் சோர்வின்றி, இடைவெளியின்றி பாடுபட்டார். எடிசன் போல் இவருக்கு தொட்டதனைத்தும் வெற்றி பெறவில்லை.

துப்பாக்கிக் குண்டுக்கு பலியான அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கர்பீல்டின் உடலில் குண்டு எங்கே இருக்கிறது என்பதை பெல்லின் கருவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜனாதிபதியின் கட்டிலில் இருந்த உலோக ஸ்பிரிங்குகள் பெல்லின் கருவியைக் குழப்பமடையச் செய்துவிட்டன என்று தோன்றுகிறது.

ஆடுகளை ஒன்றுக்கும் மேலாக இரண்டு, மூன்று குட்டிகளை ஈனச் செய்யவேண்டும் என்ற அவரது விருப்பம்தான்  விலங்குகளின் பாரம்பரியத்தில் அவரை மிகுந்த ஆர்வம் கொள்ளச் செய்தது. இரண்டு பால் காம்புகளுக்கு மேல் இருந்த ஆடுகள் இரண்டு குட்டிகளை ஈன்றதை அவர் கண்டார்.

ஆனால் அவரால் செய்ய முடிந்ததெல்லாம் பல பால்காம்புகள் கொண்ட ஆடுகளை உற்பத்தி செய்ததுதான். என்றாலும் 1919 இல்,  உலக சாதனையாக மணிக்கு 114 கி.மீ. (70.84 மைல்) வேகத்தில் இயங்கக்கூடிய 4 குதிரை சக்தி கொண்ட நீராவிப் படகு ஒன்றைக் கண்டு பிடிக்க அவர் உதவி செய்தார்.

அது பத்து ஆண்டு காலம்  பழுதேதுமின்றிப் பணி செய்தது. ஆனால் 82 வயதான பெல், பேரறிவுடன் அதில் பயணம் செய்ய மறுத்துவிட்டார். முதலாவதாகவும், முன்னணியாளராகவும், காதுகேளாதோரின் ஆசிரியர் என்று தன்னைப் பற்றி  எப்போதுமே பெல் கூறிக்கொள்வார். அவரது தாயாரும், மனைவியும் கூட காதுகேளாதவர்கள்.

காது கேட்க இயலாத ஹெலன் கெல்லருக்கு அவரது இளம் வயதில் பெல் கல்வி கற்பித்தார். அந்த அம்மையார் தனது சுயசரிதையை பெல்லுக்கு அர்ப்பணித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...