பேராசிரியர் முனைவர் நம். சீனிவாசன்
இப்பட்டியலில் தலைவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கு நான் எடுத்துக் கொண்ட அளவு கோல் மற்றும் கடைப்பிடித்த நடைமுறை என்னவென்றால், அவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்க வேண்டும் என்பதும் அவர்களது படைப்புகள் இலக்கிய, நுண்ணறிவுத் தரம் வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கிய மானதாக அவர்களது கட்டுரைகளும் கொள்கைகளும், பல தலைமுறையின ருக்கும் பொருந்துபவைகளாக இருக்க வேண்டும் என்பதுதான் என்று நூலாசிரியர் ராமச்சந்திரகுகா கல்வெட்டு எழுத்துக்கள் போல் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருப்பதை பெரியார் பிறந்த நாள் மலர் சிக்கெனப் பிடித்து சிந்தைக்கு விருந்தாய்ப் பந்தி வைத்திருக்கிறது.
படிக்கலாம்; பாதுகாக்கலாம்; எழுத் தாளர்கள் கட்டுரையில் மேற்கோளால் இணைத்தால் கட்டுரை பலம் பெறும்; பேச்சாளர்கள் சொற்பொழிவில் எடுத் துரைத்தால் பயன் வரும். அய்ந்து நட்சத்திர விடுதியில் அரங்கேறிய விழா மலரில் இடம் பெற்றதன் மூலம் மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாய் பதிந்துவிட்டது.
எஸ்.முத்தையா முதலியார் பார்வையில்...
வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் அவர்கள் அண்ணல் காந்தியடிகளையும், தந்தை பெரி யாரையும் ஒப்பிட்டு கருத்துரை வரைந்திருக்கிறார். பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் எழுதிய நூலிலிருந்து இக்கட்டுரை எடுக்கப் பட்டு மலரில் இடம் பெற்றிருக்கிறது. மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிடும் முத்தையா, மாறுபாடு களை அடுக்குகின்றபோது உண்மை கள் வெளிச்சம் போட்டு உலா வரு கின்றன. தந்தை பெரியாரின் எளிமை யும், தொண்டும் வாசகர்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாய் கொலு ஏறுகிறது.
திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை எழுதிய பெரியார் (கொள்கை) சரணம் கச்சாமி எனும் கட்டுரை வரலாற்றுப் பேழையாய் மலரை அணி செய்கிறது. பார்ப்பனர்கள் தங்கள் தந்திரத்தால் இராவணன், இரணியன், மாவலிச் சக்கரவர்த்தி போன்றோரை அழித் தொழித்ததை கட்டுரை படம் பிடிக்கிறது. நமக்கு அறிவு கொடுத்து சிந்திக்க வைத்த பெரியாரே சரணம் என்று சொல்லுவோம். அவர் சொன் னதை எழுதியதை படித்துத் தெளி வோம் என்று நிறைவாய் மொழிகிறார் தமிழ்நாடு அரசின் பெரியார் விருது பெற்ற சாமிதுரை அவர்கள்.
காந்தியாரை விஞ்சியவர்
காந்தியடிகள் பிறந்தது 1869. தந்தை பெரியார் பிறந்தது 1879. இரு வருக்கும் பத்தாண்டுகள் இடைவெளி. காந்தியடிகள் 23ஆம் வயதில் தென்னாப்பிரிக்கா சென்று 20 ஆண்டுகள் அங்கேயே தங்கி இருந் தார். 1915 இல் இந்தியா திரும்புகிறார். 1916 இல் முதன் முதலாகப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். 1919ஆம் ஆண்டு வாக்கில் 50ஆவது வயதில்தான் அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டின் மூலம் உண்மையான அரசியல் பிரவேசம் கொள்கிறார். தந்தை பெரியார் அவர்களும் காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்த ஆண்டு 1919 ஆகும். 1922 மற்றும் 1924 இல் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். காந்தியடிகள் 1925 ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை ஓர் ஆண்டு மட்டும் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 16-10-1924 அன்று காந்தியா ருக்கு எழுதிய கடிதத்தில் பெரியாரை தீவிரம் நிறைந்த தலைவர் (Head and active master) என்று குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் காந்தி என்னும் நூலை அ.இராமசாமி என்பவர் எழுதி இருக் கிறார். நூலாசிரியரிடம் தந்தை பெரியார் தெரிவித்த கருத்துகள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவையாகும். தந்தை பெரியாருக்கு அண்ணல் காந்தி அடிகள் இரண்டு கடிதங்களை எழுதி இருக்கின் றார். அக்கடித விவரத்தை பெரியார் பிறந்த நாள் மலர் சிறப்பாய் பதிவு செய்திருக்கிறது.
காந்தியாரின் இரு கடிதங்கள்
தந்தை பெரியாரின் தொண்டைப் பாராட்டி காந்தியடிகள் முதல் கடிதத்தை எழுதினார். பெரியாருக்குக் கை வலி ஏற்பட்ட போது, நீங்கள் இராட்டையை அதிக நேரம் சுழற்றியதால் இந்த வலி ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகையால் வலி குறையும் வரை சிறிது காலத்திற்கு இராட்டையை சுழற்றுவதை நிறுத்தி வையுங்கள் என்று. இரண் டாவது கடிதத்தை எழுதினார்.
1921 ஆம் ஆண்டு ஈரோட்டில் பெரியார் வீட்டிற்கு காந்தியடிகள் வருகை புரிந்தது,1922 ஜனவரி மாதம் பம்பாய் மாநாட்டில் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் (கண்ணம்மாள், நாகம்மையார்) இருக்கிறது என்று காந்தியடிகள் கூறியது, இந்தி கற்றுக் கொடுக்க ஈரோட்டில் பெரியார் பள்ளி நடத்தியது, மதுவிலக்கு வெற்றிக்காக தென்னந்தோப்பில் 500 தென்னையை வெட்டி சாய்த்தது, தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடக்கூடாது என்று பெரியார் போராடியது, காஞ்சிபுரம் மாநாட்டைவிட்டு வெளியேறியது, பெங்களூரில் காந்தியைச் சந்தித்து உரையாடியது என்று அடுக் கடுக்கான செய்திகள் மலரில் - இரண்டு பக்கங்களில் தொகுக்கப்பட்டிருப்பதைப் பயன் நிறைந்த கருவூலமாகப் போற்றலாம்.
அடுத்த நூற்றாண்டில் பெரியார்
பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக் குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பெரியார் பற்றாளர்; சிறந்த மருத்துவர்; நல்ல எழுத்தாளர்; விடுதலை வாசகர்; அன்புடன் பழகும் பண்பாளர். அவர் எழுதிய, அடுத்த நூற்றாண்டில் பெரியார்! என்னும் கட்டுரையை இரண்டு புறமும் கூர்மையான ஆயுதம் எனலாம். கூர்மையான ஒரு புறத் தால் அழுக்கு மடமையை கிழித்தெறிகிறார். அஃது அழித்தல் தொழில். மற்றொரு புறத்தால் புத்துலகைச் சமைக்கிறார். இஃது ஆக்கல் தொழில். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை சோம.இயங்கோவன் அவர்களின் பகுத்தறிவுத் தூரிகை நார் நாராய் உரித்துக் காட்டுகிறது.
மதத் தலைவர்களின் திருவிளையாடல் களை சொல் என்னும் வாளெடுத்து விளாசு கிறார். கோயில் கருவறைக் காட்சிகளையும் படம் பிடிக்கத் தவறவில்லை. கருப்பின மக்களை விடுவிக்க அமெரிக்காவில் நடைபெற்ற புரட்சியினை எடுத்துக் காட்டி, மடிந்த மக்கள் தொகையினையும் கணக்குக் காட்டி தமிழகத்தில் தந்தை பெரியார் நிகழ்த்திய அமைதிப் புரட்சியின் மகத் துவத்தை வெளிப்படுத்துகிறார். அடுத்த நூற்றாண்டில் சாதி ஒழிந்த அனைவரும் சமம் என்ற மனிதநேயம் வாழ்க்கை முறையாகிவிடும் என்று இளங்கோவன் சொல்லும்போது மயில் கைகளைப் பரப்பி மல்லிகைப் பூ தெளித்த சாலையில் நடப்பது போன்ற சுகம் கிடைக்கிறது. சோம. இளங் கோவன் கட்டுரை வேரில் பழுத்த பலா.
கவிக்கொண்டலின் கவிதை
பெரியர் பிறந்த நாள் மலரை கலைமா மணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் எழுதிய புதிய புத்தர்! புத்துலகச் சிற்பி! என்னும் கவிதை மெருகூட்டுகிறது. நிறங் களை ஆளத் தெரிந்தவன் ஓவியனாகி விட்டான்; சப்தங்களைச் செதுக்கத் தெரிந் தவன் இசைக் கலைஞனாகிவிட்டான்; ஒரு கல்லின் வேண்டாத பாகத்தை விலக் கியவன் சிற்பியாகிவிட்டான்; மொழியை மோகித்தவன் படைப்பாளியாகிவிட்டான். இவர்கள் அனைவரும் ஒரே தொழிலைத் தான் செய்கிறார்கள்; ஊடகங்கள் மட்டும் வேறு வேறு. படைப்பின் முதிர்வு மனிதன். மனிதனின் முதிர்வு மொழி. மொழியின் முதிர்வு கவிதை.
கவிதையை அழகுபடுத்துவது மூன்று. 1. உருவம் 2.உள்ளடக்கம். 3.உணர்த்தும் முறை. மா.செங்குட்டுவன் அவர்களின் கவிதை மரபுக் கவிதையாகும். இலக்கணம் கிழித்த எல்லைக் கோடுகளைக் கடக்காமல் கருத்துக்களைக் கச்சிதமாய் தன்னகத்தே கொண்டிருக்கும் நற்கவிதை.
பெரியாரின் தோற்றம், முழக்கம், எண்ணம், தொண்டு, இலக்கு முதலிய வற்றை எதுகை, மோனையோடு கவிதை யாக்கி இருக்கிறார் செங்குட்டுவன்.
பெரியார் வைக்கத்தில் பெற்ற வெற் றியை, வகுப்புரிமைக்காக எழுப்பிய குரலை புராணப் புரட்டுகளைப் புட்டு வைத்த திறத்தை நிகழ்த்திய பகுத்தறிவுப் பிரசங் கத்தை உள்ளடக்கமாய் கொண்டு கவிதை ராஜ பாட்டையில் மிடுக்காய் நடை போடுகிறது. செங்குட்டுவன் கவிதை பெரியாரை மனதிற்குள் சிறை வைக்கிறது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு அய்யாவின் கருத்துக்களை அழகு தமிழில் ஓங்கு குரலில் சரளமாய் அருவிபோல் கொட்டும் ஆற்றலாளர்; பழகுதற்கு இனியவர். அவர் எழுதிய தந்தை பெரியாரின் பெண் கல்விச் சிந் தனைகள் என்னும் கட்டுரை மலரில் இடம் பெற்றிருக்கின்றது.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை, 1857 இல சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கி 70 ஆண்டுகளுக்குப் பின் னாலும் தமிழ்நாட்டில் கல்லூரி சென்ற மாணவியர்களின் எண்ணிக்கை சங்கப்பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் பெண்கள் பாடிய பாக்களின் எண்ணிக்கை. 1951 இல் உயர்கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை முதலியவற்றை அறிவுக்கரசு அவர்கள் புள்ளி விவரமாகக் கொடுத்து, தந்தை பெரியார் அவர்களின் பெண்கல்விப் பிரச்சாரத்தை எடுத்துரைத்து, இப்போது நாட்டில் 54 சதவீதம் பெண்கள் படித்திருப்பதை எடுத்துக் கூறி பெரியாரின் தொண்டை வாசகர்களின் நெஞ்சில் பதித்துள்ளார்.
பெண்கள் விடுதலை பெற வேண்டு மானால், மனித சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமானால், தங்கள் வாழ்வுக்கேற்ற வருவாயுள்ள தொழி லைப் படிக்க வேண்டும். இவை இல்லாத காரணத்தால்தான் பெண்கள் ஆண் களுக்கு அடிமைப்பட்டுக் கிடக் கிறார்கள் என்ற பெரியாரின் சிந் தனையை எடுத்துரைக்கும் அறிவுக் கரசு அவர்கள்1928 இல் முதலமைச்சர் சுப்பராயன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தை பெரியார் நிகழ்த்திய உரையினை அற்புதமாக இணைத்திருக்கின்றார்.
துரதிர்ஷ்டவசமாக நான் எப்போ தாவது ஒரு சமயம் மந்திரியாக நேருமானால், குறைந்தது ஒரு பத்து வருஷத்திற்காவது ஆண் பிள்ளைகள் படிப்பிற்குச் செலவு செய்வதை அடி யோடு விட்டு, பெண்களின் கல்விக் காகவே எல்லாப் பணங்களையும் செலவு செய்வேன் என்று தைரியமாய்ச் சொல்கிறேன் என்ற பெரியாரின் உள்ளத்தை, பெண்கல்வியில் பெரியார் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்ப தனை வெளிப்படுத்தும் வாசகமாகும். தொல்காப்பியர், மாணிக்க வாசகர், பாரதிதாசன் கருத்துக்களெல்லாம் இக் கட்டுரையை அணி செய்கின்றன.
பேராசிரியர் பெருமக்களின் கட்டுரைகள்
புன்னைமுத்து தந்தை பெரியாரின் தோழர்; வழிகாட்டி இதழை நடத்தி யவர். பெரு வணிகராய் வலம் வந்தவர். அவரது புதல்வர்தான் டாக்டர். பு.ராஜதுரை. நீதிக்கட்சி குறித்து ஏராள மான தகவல்களை வெளிக் கொணர்ந்த ஆய்வாளர் இராசதுரை அவர்கள் ஆவணக் காப்பகத்தில் தம் வாழ்நாளின் பாதியைத் தொலைத்தவர். ஏராளமான செய்திகளைத் தொகுத்தவர். அவற்றில் கடுகளவே வெளியிட்டவர். இராசதுரை யின் புதையல்களில் இன்னும் ஏராள மான நவமணிகள் வெளி வராமலே புதைந்து கிடக்கின்றன. அவரது கட் டுரை ஆவணமாய் இருக்கும் என்பதை சொல்லவேண்டிய அவசியமில்லை.

(வளரும்)
No comments:
Post a Comment