Sunday, September 18, 2011

முற்போக்கு பேசுகிற மாநிலத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு பிற்போக்கு

பெரியார் பிறந்த மண்ணிலோ ஆல் போல் தழைத்தோங்கி நிற்கிறது

திருவெறும்பூரில் தமிழர் தலைவர் அறைகூவலுடன் முழக்கம்

திருவெறும்பூர் தந்தை பெரியார் வெண்கலச் சிலையை அ. இராமசாமி திறந்து வைத்தார்.
திருச்சி, செப்.18- முற்போக்கு கொள்கை பேசுகிறவர்கள் மாநிலத்தில் சமூகநீதி இட ஒதுக்கீடு தத்துவம் முழுமையாக இடம் பெறவில்லை. ஆனால் தந்தை பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலோ சமூகநீதி இடஒதுக்கீடு தத்துவம் ஆல் போல் தழைத்தோங்கி அருகுபோல் வேரோடி நிற்கிறது என்று திருவெறும் பூரில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
அறிவுலக பேராசான், உலகத் தலைவர் தந்தை பெரியார் 133 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நேற்று (17.9.2011)  திருவெறும்பூரில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துடன் மிக எழுச்சியோடு நடைபெற்றது.
பெரியார் சிலை திறப்பு
தந்தை பெரியார் சிலையினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் பேரா.அ.இராமசாமி அவர்கள் அனைவரின் பலத்த கரவொலிக்கிடையே திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தர் வீகேயென் கண்ணப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பின ரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான கே.என். சேகரன், பெரியார் பன்னாட்டு மய்யம் (அமெரிக்கா) பொறுப்பாளர் டாக்டர் சரோஜா இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிக்கல் நாட்டு விழா
மருத்துவமனை கல்வெட்டினை தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். (திருவெறும்பூர் - 17.9.2011)
அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் மருத் துவ மய்யம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் தலைமையில் சிறீநிதி குழுமம் உரிமை யாளர் தொழிலதிபர் ரவீந்திரன் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.  அதனைத் தொடர்ந்து பெரியார் தகவல் பலகையை திறந்து வைத்து தமிழர் தலைவர் அவர்கள் கடவுளை மற மனிதனை நினை என்ற வாசகத்தை  எழுதினார்.   தமிழர் தலைவர் பேச்சு முன்னதாக மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் வரவேற்புரையாற்றினார். இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
அவர்தம் உரையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவான  இன்று திருவெறும்பூரில் தந்தை பெரி யார் சிலை சிறப்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை நாடு முழுவதும் திறந்து வைப்பதற்கு காரணம் என்னவென்றால் பெரியார் ஒரு தத்துவம் வழிகாட்டி. இன்றைக்கு சமூக நீதி பிரச்சினையாக இருந்தாலும், தேவைப்பட்டார், தேவைப்படுகிறார்.  தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என இருந்தது, இன்றைக்கு அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மீண்டும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டு வர திராவிடர் கழகம் போராடும். 69 சதவீத இடஒதுக்கீடு இன்றைக்கு இருக்கிறது என்றால் அது இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். முற்போக்கு பேசு கிறவர்கள், 25 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய வர்கள் கூட இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியவில்லை.  தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு தந்தை பெரியார் கொள் கையே காரணம். பெரி யாருடைய பெருமை, எப்போது தெரியும் என் றால், அவருடைய மூச் சுக்காற்று திசையெங்கும் பரவும்போதுதான். பெரியார் தொண்டினை யாரும் குறைத்து மதிப் பீடாதீர்கள். அவர்களது தொண்டு சாதாரண மானதல்ல.  இன்றைக்கு இந்த இயக்கம் ஓங்கி வளர்ந்திருக்கிறது என்றால் எத்தனையோ போராட்ட களங்களை உதாரணமாகச் சொல்ல லாம்.
ஊழல் எங்கிருந்து ஆரம்பம்?
ஊழல் ஊழல் என்று பேசுகிறார்கள். ஆனால் அந்த ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. உங்கள் வீட்டு பூஜை அறையிலி ருந்து ஆரம்பிக்கவில் லையா? எல்லாம் அவன் கொடுத்தான் கடவுள் செயல் என்று கூறிவிட்டு, கடவுளுக்கு இவ்வளவு ரூபாய் செலவு செய் வேன் என்று கணக்கு காட்டுகிறார்கள். அடுத்து திருவரங்கம் ரங்கநாதர் படுத்தே இருக்கிறார். படுத்தே இருப்பவர் இதை சாப் பிட்டார், அதைச் சாப் பிட்டார் என கணக்கு காட்டுகிறார்கள். இவை கள் எல்லாம் வேடிக் கையாக இருக்கிறது. கடவுள் - மத -
பித்தலாட்டங்கள்
திருப்பதி உண்டிய லில் பல லட்சம் ரூபாய் பக்தர் காணிக்கை செலுத்துகிறார்கள். நாளை முதலே ஒரு அறி விப்பு வெளியிடட்டும். உண்டியலில் பணம் போடுகிறவர்கள், காசோலையாக போட வேண்டுமென அறிவித் தால், அந்த உண்டியல் நிரம்புமா? இப்படி யெல்லாம் கடவுளின் பெயரால் ஊழலை வளர்த்துக் கொண்டு , ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்து கிறார்கள். கடவுள், மதம் மனிதனை இணைக்க வில்லை. பகுத்தறிவுதான் மனிதர்களுக்கிடையே மனிதநேயத்தை இணைக்கிறது. மதத்தைக் காட்டி, கட வுளை காட்டி ஏமாற் றும் பித்தலாட்டங்கள் ஒழிய வேண்டும். இவ் வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப் பிட்டு மேலும் விளக்கமாகப் பேசினார்.
அ.இராமசாமி பேச்சு
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத் துணைத் தலை வர் அ. இராமசாமி தமது உரையில் குறிப் பிட்டதாவது:
இந்த பெரியார் சிலை திறப்பதற்கு, என்னை அழைத்த போது உண் மையிலே ஒரு அய்ந்து நிமிடம் மெய்மறந்து போனேன். இந்த சிலையை திறந்து வைக்க யாரை வேண்டுமானாலும் அழைத்திருக்கலாம். பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் இவர் களை அழைத்திருந்தால் கூட வந்திருப்பார்கள். ஆனால் அவர்களை எல்லாம் அழைக்காமல், என்னை அழைத்ததற்கு ஆசிரியர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். எனது குடும்பம் படிப்பறிவில் லாத குடும்பம், தற்குறி, ஆனால் நான் மட்டும் படித்தேன். பட்டம் பெற் றேன். உயர்ந்த நிலைக்கு வந்தேன். இதற்கெல் லாம் காரணம் தந்தை பெரியார். அந்த காலத் தில் பெரும் தலைவர் களின் பேச்சை எல்லாம் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு மனிதன் வாழ்விற்கு மாற்று சிந் தனையை முற்போக்கு சிந்தனையை சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரி யார். அவர் பேச்சை கேட்டதால்தான், நான் இந்த நிலைக்கு வந் திருக்கிறேன். படிக்கக் கூடாது என்று, கல்வி மறுக்கப்பட்ட காலத் தில் தந்தை பெரியாரின் பேச்சுதான் என்னை மாற்றியது. இவ்வாறு அவர் பேசினார்.
உரையாற்றியோர்
மேலும் இம்மாபெ ரும் பொதுக்கூட்டத் தில்   ம.தி.மு.க.வைச் சேர்ந்த புலவர் முரு கேசன்,  பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக இணைவேந்தர் வீ.கே. யென். கண்ணப்பன், பெரியார் பன்னாட்டு மய்ய பொறுப்பாளர் டாக்டர் சரோஜா இளங் கோவன் ஆகியோர் உரையாற்றினர்.  தி.க. துணைப் பொதுச் செய லாளர் இரா.குணசேக ரன், மண்டலத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மா.செந்தமிழினியன், தி.தொ.க. பேரவை பொதுச் செயலாளர் ம.ஆறுமுகம், லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர், செயலா ளர் ஆல்பர்ட், திரு வெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பன், மாநில இளைஞரணிச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், தலை மைக் கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன்,  திருச்சி மண்டலச் செய லாளர் காமராஜ், திரு வெறும்பூர் நகரத் தலை வர் ஜெயராமன், பெரி யார் சிலை அமைப்புக் குழு செயலாளர் வி.சி. வில்வம், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேரா.ப.சுப் பிரமணியன், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் இரா.பெரியார் செல்வம், பூவை புலிகேசி,  இராம. அன்பழகன், மாநில மகளிரணி பிரச்சார செயலாளர் வீ.கலை வாணி, உள்ளிட்ட கழ கத் தோழர்களும், விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழாதன், ரமேஷ், ரவி வர்மா, திருவெறும்பூர் தி.மு.க.பேரூராட்சித் தலைவர் பன்னீர்செல் வம், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் மாசில்லாமணி, சி.பி. அய். ஒன்றிய செயலாளர் கே.சி.பாண்டியன்,  உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.  நிறைவாக திரு வெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் இரா. தமிழ்ச்சுடர் நன்றி கூறி னார்.
குறுந்தகடு வெளியீடு
முன்னதாக தந்தை பெரியார் பகுத்தறிவு கருத்துகள்  அடங்கிய, இளைஞர்களை ஈர்க்கும் மெல்லிசையாக முதல் முறையாக ராப் இசை யில் யார்? யார்? பெரி யார் பாடல் குறுந்த கட்டை தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட் டார். மாபெரும் மூடநம்பிக்கை
ஒழிப்பு ஊர்வலம்
முன்னதாக மாலை 4 மணிக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் திரு வெறும்பூர் காவேரி சிறப்பு அங்காடி அரு கிலிருந்து தொடங்கி யது. ஊர்வலத்திற்கு தி. தொ.க. பேரவை பொதுச் செயலாளர் பெல் ஆறு முகம் தலைமை வகித் தார். மாநகர ப.க. தலை வர் பா.லெ.மதிவாணன், கரூர் மாவட்டத் தலை வர் வழக்கறிஞர் மு.க. இராஜசேகரன் ஆகி யோர் தொடங்கி வைத் தார்.  திருச்சி மண்டல இளைஞரணிச் செயலா ளர் மு.இராசா, மாவட்ட இளைஞரணித் தலைவர் மா.தமிழ்மணி, செயலா ளர் நேதாஜி, லால்குடி மாவட்ட இளைஞர ணித் தலைவர் வீ.அன்பு ராஜா, செயலாளர் ஆசைத் தம்பி, துணைச் செயலா ளர் வீரமணி,  துணைத் தலைவர் எம்.இராஜா, மாணவரணித் தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொது மக்கள் வியப்பு
ஊர்வலத்தில் ஜெயங் கொண்டம் கே.சி.கலிய மூர்த்தி, பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகி யோர் அலகு குத்தியும்,  தஞ்சை தோழர்கள் தேவா, இராசா ஆகியோர் காவ டியும் எடுத்து வந்தனர். பாச்சூர் அசோகன், திரு வரங்கம் மோகன்தாஸ், கவுதமன் ஆகியோர் கார் இழுத்து வந்தனர். உரத்த நாடு நகரச் செயலாளர்  வழக்கறிஞர் அருணகிரி,  அரிவாள் மீது ஏறினார். இம்மாபெரும் ஊர்வலத் தில் சடையார் கோவில் நாராயணசாமி குழுவின ரின் பேண்டு இசை முழங்க, கோலாட்டத்து டன் கழக மகளிர் அணி யினர் தீச்சட்டி ஏந்தியும், மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப் பினர்.  இந்நிகழ்ச்சி பார்ப் பவர் வியக்கும் வண்ணம் இருந்தது.

விஜய் யோகானந்த் - கவுரி ஆகியோரது பெண் குழந்தைக்கு யாழ் கண்மணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தமிழர் தலைவர் (திருவெறும்பூர், 17.9.2011)
கழகப் பாடகர்கள் திருத்தனி பன்னீர் செல்வம், எஸ்.பி.பாஸ்கர் இயக்க கொள்கைப் பாடல்களை பலத்த கரவொலிக்கிடையே பாடினர் (திருவெறும்பூர், 17.9.2011)
கடவுள் இல்லை எனக் கூறி அரிவாள் மேல் ஏறி நிற்கும் கழகத் தோழர்
தந்தை பெரியார் பெயர் பலகை திறப்பு


தந்தை பெரியார் படிப்பக தகவல் பலகையினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்  திறந்து வைத்து, அப்பலகையில் அவர் கைப்பட எழுதினார். உடன் வீகெயென் கண்ணப்பன், அ.இராமசாமி ஆகியோர் உள்ளனர். (திருவெறும்பூர், 17.9.2011)

தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்த பெருங்கூட்டம்  (திருவெறும்பூர், 17.9.2011)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...