இதற்கும் உதாரணம் பெரியார்தான்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறங்காவலர் குழுவில் இருக்கக்கூடாது, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. விடுத்துள்ள வேண்டுகோளை ஜெயலலிதா ஏற்று இருக்கிறாரே?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறங்காவலர் குழுவில் இருக்கக்கூடாது, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. விடுத்துள்ள வேண்டுகோளை ஜெயலலிதா ஏற்று இருக்கிறாரே?
இந்து அறநிலையத்துறை என்கிற அமைப்பே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தவர் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார்தான். கோயில் சொத்துக்களை ஒரு சாரார் அனுபவித்துக்கொண்டு இருந்ததைத் தடுத்து, அதை மக்கள் சொத்தாக மாற்றியது நீதிக் கட்சியின் சாதனை. அதேபோல் யார் கோயில்களுக்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார்களோ, அதே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை முதல் அறநிலையத் துறை அமைச்சராக ஆக்கியது இன்னொரு சாதனை. அறங்காவலர் குழுவிலோ, அறநிலையத் துறையிலோ பணிபுரிவதற்கு ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கோயில் சொத்துக்களை யாரும் கொள்ளை அடிக்காமல் கண்காணித்தாலே போதும். இதற்கும் உதாரணம் பெரியார்தான். பெரியாரின் அப்பா ஒரு பிள்ளையார் கோயிலை நிறுவி, அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் தன் மகன் பெயரில் எழுதி வைத்து இருந்தார். கடவுள் மறுப்பைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவந்தாலும், அந்தக் கோயில் பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கான செயல்பாடுகளைச் செய்து வந்தவர் பெரியார். திராவிட இயக்கத்தவரின் தியாகத்தாலும் போராட்டங் களாலும் ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா வுக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லும் துணிச்சல் வாய்ந்தவர்கள் யாரும் அவர் அருகில் இல்லை என்பதுதான் அவலமானது! தேன்மொழி, கம்பம்
நன்றி: ஆனந்தவிகடன், 24.8.2011
No comments:
Post a Comment