Saturday, September 3, 2011

ஹசாரே பிள்ளையாராம்!


நானும் ஹசாரே பக்கம் தான் என்று பிள்ளை யார் சொல்லுவதாக இப்படி ஒரு படத்தினை தினமலர் (30.8.2011) வெளியிட்டுள்ளது.

கடவுள்கள் எப்படி எப்படி எல்லாம் கற்பனையாக உண்டாக்கப்பட்டுள்ளன என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

கார்கில் யுத்தம் நடந்த நேரத்தில் பிள்ளையார் கையில் துப்பாக்கியைக் கொடுத்து ஓர் உருவத்தை உண்டாக்கினார்கள்.

கிரிக்கெட் மட்டையைக் கையில் கொடுத்து கிரிக்கெட் பிள்ளையாரை ஏற்படுத்தினர்.

வேப்பமரத்தின் கீழ் ஒரு பிள்ளையாரை வைத்தால் வேம்படி வினாயகர் என்பார்கள்.

இப்படித்தான் கடவுள்கள் மனிதர்களால் கற்பிக்கப்பட்டன என்பது. இப்பொழுதாவது புரிகிறதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...