தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, திருத்தணி நகர தே.மு.தி..க. சார்பில் முருகன் கோவி லில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருத்தணி எம்.எல்.ஏ., அருண்சுப்பிரமணி யன், நகர செயலாளர் உள்ளிட்ட நிரு வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அபிஷேகம் முடிந்தவுடன், எம்.எல்.ஏ., மலையில் இருந்துபடி வழியாக இறங்கி வந்து பிச்சைக்காரர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். பின் மீண்டும் மலைக்கோவிலுக்கு செல்ல படி ஏறினார்.
தன்னுடன் வந்த தொண்டர்களை, முட்டி போட்ட படி ஏறி வருமாறு உத்தர விட்டார்.
தொண்டர்களும், 100 படிகள் வரை முட்டி போட்டு ஏறினர். மலைக் கோவில் அருகில் வந்ததும், எம்.எல்.ஏ., புத்திசாலித்தனமாக அவர் போட்டோ வுக்கு போஸ் கொடுக்க, மூன்று படிகளில் மட்டும் முட்டி போட்டு ஏறினார்.
முட்டி போட்டு படி ஏறிய, வலியால் அவதிப்பட்ட தொண்டர்கள், நம்மள வசமா மாட்டி விட்டு, இவரு மட்டும் தப்பிச்சுட்டாரே... என புலம்பினர்.
தினமலர் 30.8.2011 (பக்கம் 8)
பக்தி முட்டுவதால் புத்தி வேலை நிறுத்தம் செய்கிறது... அதனால்
முட்டி போட வேண்டியதுதான்; கொக் குப் பிடிக்க வேண்டியதுதான் பெஞ்சு மேல ஏறி நிற்க வேண்டியதுதான்!
கட்சிக் கொடியையே திருப்பதி நாமக் கடவுளின் பாதார விந்தத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கி வந்த கட்சியில் இதுவும் நடக்கும்; இன்னமும் ஏடா கூடாத்தனமாக நடக்கத்தான் செய்யும் (பண்ருட்டியாருக்கு நமது அனுதா பங்கள்!)
சிலர் நீரிழிவு நோயாளிகளாக இருப் பார்கள் இந்தக் கூத்தில் அவர்கள் விரதம் இருப்பார்கள் அதாவது நாள் முழுவதும் பட்டினி.
விளைவு - ஜீரணத்துக்குக் காரண மான அமிலக் குணம் கொண்ட சுரப்பிகள் சுரந்து குடலை பொத்து ஜீரண உறுப்புகளையும் ரணப்படுத்தி விடும். இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது?
மூளையில் மாட்டப்பட்ட பக்தி விலங்கு உடைக்கப்பட்டாலொழிய வேறு மார்க்கம் இல்லை.
No comments:
Post a Comment