Sunday, September 18, 2011

பெரியார் பிறந்த நாள் நாடெங்கும் தேசிய திருவிழாவாக கோலாகலத்துடன் கொண்டாட்டம் திருச்சியில் பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை


பெரியார் பிறந்த நாள் நாடெங்கும் தேசிய திருவிழாவாக கோலாகலத்துடன் கொண்டாட்டம் திருச்சியில் பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு இன்று (செப்.17) காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்தார்.

திருச்சி, செப்.17-  அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பட்டி, தொட்டி, கிராமம், நாடு, நகரம் என   எங்கும் கொள்கைத் திருவிழாவாக தேசிய திருவிழாவாகக் கொண் டாடப்படுகிறது.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 133 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திராவிடர் கழத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத் திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும், திருவரங்கத்தி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கும், முன்னதாக பெரியார் மாளிகையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும் காலை 9.30 மணியளவில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மண் டலத் தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட தி.க. செயலாளர் மா.செந்தமிழினி யன், பெரியார் கல்வி நிறுவ னங்களின் ஒருங்கிணைப்ப ளர் பேரா.ப.சுப்பிரமணியன்,  லால்குடி மாவட்டத் தலை வர் தே.வால்டர், மாவட்டச் செயலாளர் ஆல்பர்ட், திருச்சி மாநகரத் தலைவர் கணேசன், செயலாளர் ஜெய ராஜ் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவரங்கத்தில் தாரை தப்பட்டையுடன்

திருவரங்கத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு  தாரை தப்பட்டையுடன், கழகத் தோழர்களின் எழுச்சி முழக்கத்தோடு, தமிழர் தலைவர் அவர்கள் காலை 10  மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட தி.க. தலை வர் மு.சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட தி.க. செயலாளர் மா.செந்தமிழினியன், நகரத் தலைவர் குமார், நகர செயலாளர் மோகன்தாஸ், துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி, துணை செய லாளர் அண்ணாதுரை உள் ளிட்ட திராவிடர் கழக நிரு வாகிகள், தோழர்கள் திராளாக கலந்து கொண்டனர்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவரங்கம் நகர திராவிடர் கழக மகளிரணித் தோழியர்கள், தமிழர் தலைவருக்கும், மற்றவர் களுக்கு இனிப்பு வழங்கி கொண் டாடினர். முன்னதாக தமிழர் தலைவர் வருகையையொட்டி கழக இளை ஞரணித் தோழர்கள் ஏராளமான இருசக்கர வாகனத் தில் தமிழர் தலைவருக்கு வர வேற்பு அளித்து, தமிழர் தலை வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

தேசியத் திருவிழா

இதேபோல சென்னை மற்றும் தமிழ் நாடெங்கும் தந்தை பெரி யார் பிறந்த நாள் விழா கோலாகலமாக தேசியத் திருவிழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். கிராமம், நகரம் முழுக்க தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே கழகக் கொடிகளை ஏற்றியும், வண்ணச் சுவரொட்டி ஒட்டி, வண்ணப் பதா கைகள் வைத்து மற்றும் தந்தை பெரி யார் கொள்கைகளை அய்யிரண்டு திசைகளிலும் பரப்பும் வண்ணம் சொற்பொழிவுகள் மூலமாக சி.டி. மூலமாக உற்சாகமாக பிரச்சாரம் நடைபெற்று வருகின்றன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...