சென்னை, செப். 13- நாகப்பட்டி னத்தில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் வளப் பல்கலைக்கழகம் அமைக்கப் படும் என்று சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித் தார்.
சட்டமன்றத்தில் இன்று (செப். 13) முதலமைச்சர் ஜெயலலிதா சட்ட பேரவை விதி எண் 110இன் கீழ் வாசித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீன்வளத்துறையினை நவீனப்படுத் துவதற்கும் கடல் பொருள் ஏற்றுமதி யில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக ஆக்கிடவும் அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இதனடிப்படையில் மீன்வளத்திற் கென மீன்வளப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு முடிவு செய் துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் 188 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை கொண் டுள்ளது மீன் பிடித்தல், உலர் மீன் உற்பத்தி, மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவை இம்மாவட்டத்தில் முக்கிய மான பொருளாதார நடவடிக்கை ஆகும். இம்மாவட்டத்தில் 9 ஆயிரம் மீன் பிடி கலன்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.
நாகப்பட்டினம் மீன் பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மீன் வளப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால் இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் நிறுவப்படும்.
நாகப்பட்டினம் தாலூகா பனங் குடி மற்றும் நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலபரப்பில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
தொழிற்நுட்ப பரிமாற்றம் விரிவாக்க கல்வி மனித வளப்பயிற்சி மற்றும் மீன்வள பயன்பாடு ஆகியவற்றினை மேம்படுத்துவதில் இந்தப் பல்கலைக் கழகம் பெரும் பங்கு வகிக்கும்.
மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெறும் நபர்கள் உள்நாடு மற்றும் உலக அளவில் வேலை வாய்ப்பு பெறவும் இது வழிவகுக்கும் என்பதை தெரி வித்துக் கொள்கிறேன் என்று முதல மைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.

No comments:
Post a Comment