சில முக்கிய நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர் (1939_1945) 1945 ஆகஸ்டில் முடிந்தது -_ போர் முடிந்ததும் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 1945 ஆகஸ்டில் தொழிற் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
1947 ஜூலை 18ஆம் நாள் இந்திய நாட்டிற்கு விடுதலை வழங்கும் இந்திய விடுதலைச் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி இந்தியத் துணைக் கண்டம் இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.
நாட்டுப் பிரிவினைக்கு முன்னால் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு 1946 ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் இயக்கம் 292 தொகுதி களிலும் முஸ்லீம் லீக் 74 தொகுதி களிலும் வெற்றி பெற்றன. பாகிஸ்தான் அமைவதே இந்திய முஸ்லீம்களுக்கு ஒரே வழி, இனி காங்கிரஸ் கட்சியுடன் எவ்வித பேச்சு வார்த்தைக்கும் இடமில்லை என்று மகமதலி ஜின்னா கூறினார்.
1946 ஆகஸ்ட் மாதம் வைசிராய் வேவல் இடைக்கால அரசை அமைக் கும்படி நேருவைக் கேட்டுக் கொண் டார். இடைக்கால அரசில் சேர நேரு ஜின்னாவிற்கு அழைப்பு விடுத்தார். ஜின்னா நேருவின் அழைப்பை நிராகரித்ததோடு 1946 ஆகஸ்டு 16ஆம் நாளை பாகிஸ்தான் அடைய நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தார்.
1946 செப்டம்பர் 2-ஆம் நாள் இடைக்கால அரசு நேருவின் தலைமை யில் பதவி ஏற்றது. லியாகத் அலிகான் செப்டம்பர் 2ஆம் நாளைக் கருப்பு நாளாக அனுசரிக்கும்படி முஸ்லீம் களைக் கேட்டுக் கொண்டார். கொல் கத்தா, டாக்கா, மும்பை முதலிய நகரங்களில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன.
ஜின்னா, இடைக்கால அரசில் முஸ்லீம் லீக் சேராததால் ஒரு வாய்ப்பை இழந்துவிட்டதாக எண்ணினார். இடைக்கால அரசில் சேர அக்டோபர் 13இல் வைசிராய் வேவலிடம் ஜின்னா இசைவு தெரிவித்தார். அக்டோபர் 26-இல் லீகைச் சேர்ந்த லியாகத் அலிகான் உள்பட அய்ந்து தலைவர்கள் இடைக் கால அரசில் சேர்ந்தனர்! அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9ஆம் நாள் கூடும் என்று அறிவிக்கப் பட்டது. இராசேந்திர பிரசாத் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முஸ்லீம் லீகின் 74 உறுப்பினர்களும் சபை கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அரசியல் நிர்ணய சபை தன் பணியில் ஈடுபட்டது. தற்போது நேருவும் படேலும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டனர். இந்து -_ முஸ்லீம் இரத்தக் களரியை நிறுத்த பாகிஸ்தான் பிரிவினையே தீர்வு என்று எண்ணினர். 1947 ஆகஸ்ட் 14ஆம் நாள் பாகிஸ்தான் பிரிந்து தனி நாடானது. 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக ஆனது.
இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழு அண்ணல் அம்பேத்கர் தலை மையில் அமைக்கப்பட்டது. வரைவுக் குழுவின் பிரிவுகள் அரசியல் நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டு 1949 நவம்பர் 26ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 1950 சனவரி 26ஆம் நாள் அமலுக்கு வந்தது.
இந்திய அரசியல் சட்டத்தில் நடுவண் அரசின் அதிகாரங்கள் என்ன, மாநில அரசின் அதிகாரம் என்ன என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நடுவண் அரசின் அதிகாரத் துறைகள் மொத்தம் 97. அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு: பாதுகாப்பு, முப்படைகள், வெளி நாடுகள் உறவு, வெளிநாட்டு வாணிபம், போரும், அமைதியும், அஞ்சல் தந்தித் துறை ரயில்வே, நாணயம், நோட் டுகள் அச்சிடல், பெரிய தொழில்கள், உள்நாட்டு வாணிபம் முதலியவை. மாநில அரசின் அதிகாரங்கள் - 66 துறைகள், அவை பின்வருமாறு: சட்டம், ஒழுங்கு, உச்சநீதிமன்றம், தவிர்த்து நீதி நிருவாகம், காவல்துறை, சிறைச்சாலை, உள்ளாட்சி மன்றங்கள், நூலகங்கள், பொது சுகாதாரம், கல்வி, போக் குவரத்து, நிலத் தீர்வை, வேளாண்மை, வனத்துறை, மாநிலத்திற்குள் வாணிபம், சிறு தொழில்கள், மாற்றுத் திறனாளி கள் முதலியன.
நடுவண் அரசும் மாநில அரசும் இணைந்து செலுத்தும் அதிகாரங்கள் - 47 துறைகள். அவை பின்வருமாறு: கிரி மினல் சட்டம், சிவில் சட்டம், செய் தித்தாள்கள், திருமணமும், மண விலக்கும், சிறுதொழில்கள், தொழி லாளர் நலன், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் பிரச்சினைகள் முதலியன.
- இரா. செங்கல்வராயன், செய்யாறு
No comments:
Post a Comment