தமிழ்ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)
- கல்பாக்கம் வேம்பையன்
தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மண், மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை. ஆகவே அந்தப் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது காண்க. அரசு ஆணை எண்: 70 நாள் 9.4.2008.
1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31; தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.
இந்த முடிவை 1935 சனவரி 18ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31அய் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 1935+31 =1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935). திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ், புதன் - அறிவன்; சனி - காரி.
தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் (சாற்றுரை) சட்டம் 2008 (சட்டம் எண்2 /2008) இல் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று ஆணை யிட்டுள்ளது.
ஆங்கில ஆண்டுடன் 31அய் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. 2011 + 31 = 2042. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை நாம் பின்பற்றவும் பரப்பவும் வேண்டும்.
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற உயிர்ப்பாற்றல் நான்கு, தமிழ்மொழி, தமிழ் மறை, தமிழ் ஆண்டு, தமிழர் திருநாள். தமிழர் இவற்றைப் போற்றிப் புரந்து பின்பற்றிப் பரப்பினால் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ்வாழ்வு பெற முடியும்.
தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபதுஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபதுஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
No comments:
Post a Comment