புதுடில்லி, செப்.4-பிரத மர் மன்மோகன்சிங்குக்கு ரூ.5 கோடி மதிப்பிலான சொத் துகள் இருப்பதாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. இதுபோல, மத்திய அமைச் சர்களின் சொத்து விவரங் களும் வெளியாகி உள்ளன.
அமைச்சர் மற்றும் பிரத மரின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் நேற்று இணையதளத்தில் வெளி யிட்டது.
அதன்படி, பிரதமர் மன் மோகன்சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், அந் தோணி உள்ளிட்ட 32 கேபினட் அமைச்சர்கள், 44 இணை அமைச்சர்கள் ஆகி யோருடைய சொத்து விவரங் கள் அடங்கிய பட்டியல் வெளியாகி இருக்கிறது.
மன்மோகன்சிங்
அந்த பட்டியலில் உள்ள தகவலின்படி, பிரதமர் மன் மோகன்சிங்குக்கு ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
அவருக்கு சண்டிகார் நகரில் ரூ.90 லட்சம் மதிப்பி லான இரண்டு மாடி வீடு உள்ளது. மேலும், டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப் பில் ரூ.89 லட்சம் மதிப் பிலான வீடு (பிளாட்) ஒன் றும் இருக்கிறது. இதுதவிர, பாரத ஸ்டேட் வங்கியின் பல்வேறு கிளைகளில் சேமிப்புக் கணக்கு, வைப்புத் தொகை மற்றும் தபால் அலுவலக சேமிப்பு என மொத்தம் ரூ.2 கோடியே 30 லட்சம் இருக்கிறது.
மேலும், ரூ.3 லட்சம் மதிப்பிலான 151 கிராம் தங்க நகைகள் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங்கிடம் 1996-ம் வருடத்திய மாருதி 800 கார் ஒன்று இருக்கிறது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.25 ஆயிரம் என தெரி வித்துள்ளார். பிரதமர் மனைவி பெயரில் எந்த சொத்துகளும் இல்லை. சண்டிகாரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.11 லட்சம் பணம் இருக்கிறது.
பிரணாப் முகர்ஜி
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அவருடைய மனைவி சுவ்ரா முகர்ஜி இருவருக்கும் மொத் தம் ரூ.3 கோடி சொத்துகள் உள்ளன. அதில் பிரணாப் மனைவிக்கு மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. பிர ணாப் பெயரில், டெல்லியில் ஒரு வீடும், கொல்கத்தாவில் இரண்டு வீடுகள் மற்றும் பூர்வீக விவசாய நிலமும் உள் ளன. 2000-ஆம் வருடத்திய `போர்டு ஐகான்' கார் வைத்துள்ளார்.
சுவ்ரா பெயரில், டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதி யில் ஒரு அடுக்குமாடி வீடும், மேற்கு வங்காளத்தில் இரண்டு வீடுகள், இரண்டு மனைகள் மற்றும் ஒரு விவ சாய நிலம் ஆகியவை உள் ளன. அவருக்கு அம்பாசிடர் கார் ஒன்று இருக்கிறது.
ஏ.கே. அந்தோணி
மத்திய அமைச்சரவை யில் மிகவும் ஏழையாக இருப் பவர், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி. கேரள முன்னாள் முதல் அமைச் சருமான அவருக்கு இரண்டு வங்கிகளில் சேமிப்பு கணக் கில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் மட்டுமே உள்ளது. அவரு டைய மகன் அஜித் அந் தோணி பெயரில் ரூ.20 ஆயி ரம் வங்கி டெபாசிட் இருக் கிறது.
அந்தோணியின் மனைவி எலிசபெத் பெயரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு வீடும், ரூ.15 லட்சம் மதிப் பிலான 5 சென்ட் நிலமும் உள்ளன. இதுதவிர 25 பவுன் நகை, வேகன்-ஆர் கார், வங்கியில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய், ஆகியவை எலிசபெத்துக்கு உள்ளன. அதேநேரத்தில், வங்கியில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது.
ப. சிதம்பரம்
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. குடகு மலையில் ரூ.28 லட்சம் மதிப் பிலான காபி எஸ்டேட், சென்னையில் ரூ.80 லட்சம் மதிப்பிலான வீடு ஆகியவை சிதம்பரம் பெயரில் உள்ளன. இது தவிர சைக்கிள், மோட் டார் சைக்கிள், டி.வி., பிரிட்ஜ், உடற்பயிற்சி கருவி, செல்போன், ஏ.சி. மெஷின் ஆகியவற்றையும் கணக்கு காட்டியுள்ளார். சிதம்பரம் பெயரில் ரூ.38 லட்சம் மதிப்பில் 2 கார்கள் உள்ளன.
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு ரு.13 கோடி மதிப்பிலான சொத் துகள் இருக்கின்றன. சிவ கங்கை மற்றும் காரைக் குடியில் வீடு, மானகிரி, முட்டுக்காடு மற்றும் கானாத்துரில் நிலம், குடகு காபி எஸ்டேட் ஆகியவை நளினி சிதம்பரம் பெயரில் இருக்கிறது. மேலும், ரூ.24 லட்சம் மதிப்பிலான கார் உள்ளது. இவருடைய சொத்து விவரங்களிலும் சிதம்பரத்தை போலவே கம்ப்யூட்டர், பிரிட்ஜ், ஜெராக்ஸ் மெஷின், செல் போன் போன்றவை கணக்கு காட்டப்பட்டுள்ளன.
சரத்பவார்
மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலை வருமான சரத்பவார் மற்றும் அவருடைய மனைவி பிர தீபா பவார் இருவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.13 கோடி மதிப்பிலான சொத் துகள் உள்ளன. சரத் பவார் பெயரில் புனே நகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப் பிலான கட்டடமும், டெல்லியில் ரூ.96 லட்சம் மதிப்பிலான அடுக்கு மாடி குடியிருப்பும் உள் ளன. இதுதவிர வங்கி கணக்கு, டெபாசிட், பல் வேறு நிறுவனங்களில் பங்குகள் போன்றவை யும் சரத்பவாரிடம் இருக்கின்றன.
அவருடைய மனைவி பிரதீபாவுக்கு மராட்டிய மாநிலத்தில் இரண்டு வீடுகள், வீட்டு மனை, குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் ஆகியவை உள் ளன. இது தவிர வங்கி கணக்கு, டெபாசிட், பல்வேறு நிறுவனங் களில் பங்குகள் போன்ற வையும் பிரதீபா பெயரில் இருக்கின்றன. பிரதீபா வின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.4 கோடி ஆகும்.
பணக்கார அமைச்சர்
மத்திய அமைச்சர்களி லேயே மிகவும் பணக் காரர், நகர்ப்புற மேம் பாட்டு துறை அமைச்சர் கமல்நாத் ஆவார். அவ ருக்கு ரூ.263 கோடி மதிப் புடைய சொத்துகள் உள் ளன. கமல்நாத், அவ ருடைய மகன்கள், மனைவி மற்றும் கம்பெனிகளின் மொத்த சொத்து மதிப்பு இதுவாகும். இதுபோல, மத்திய மனித வள மேம்பாடு மந்திரி கபில் சிபல், மத்திய உரம் மற் றும் ரசாயன மந்திரி மு.க. அழகிரி ஆகியோருக்கு தலா ரூ.30 கோடிக்கு மேல் சொத்துகள் உள் ளன. கபில்சிபலிடம் உள்ள அசையா சொத்து களின் மதிப்பு மட்டும் ரூ.16 கோடி ஆகும்.
மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு ரூ.ஒரு கோடியே 76 லட்சம் மதிப்பிலான சொத்து களும் அவரது மனைவி பெயரில் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் இருக் கின்றன. மின்சார மந்திரி சுஷில் குமார் ஷிண்டே வுக்கு ரூ.8 கோடி சொத் துகள் உள்ளன. அவரு டைய மனைவிக்கு நான் கரை கோடி ரூபாய் சொத் துகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment