இந்திய பாதுகாப்புத் துறைப் பணி களுக்கு நியமனம் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பற்றி அண்மையில் வெளிவந்த புள்ளி விவரங்களுக்கு உங்களின் கவனத்தை அழைக்க விரும் புகிறேன். அந்த செய்தி அறிவிப்பில் வகைப்படுத்தப்பட்டிருந்தவை தவறாக வழிநடத்திச் செல்பவை என்பதில் அய்யம் ஏதுமில்லை. பார்ப்பனரல்லாத மக்கள் அவர்களின் ஜாதிவாரியாக வகைப்படுத்தப்பட்டிருந்தபோது, பார்ப்பனர்கள் மட்டும் ஒரே சமூகமாக வகைப்படுத்தப் பட்டிருந்தனர்.
முறை யான ராணுவப் பிரிவிற்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் பார்ப் பனரல்லாத பிரிவு மக்களே என்பதை மறந்துவிடக்கூடாது. கல்வியறிவு பெற்ற பார்ப்பனரல்லாத பிரிவு மக்களின் எண்ணிக்கை மிகப் பெரியது அல்ல. ஆனாலும், இத்தகைய அனைத்து சலுகைகளுக்குப் பிறகும், இராணுவத் தில் சேருவதற்கு பார்ப்பனரல்லாத பிரிவு மக்கள் காட்டிய தயக்கம் ஓர் ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இராணுவத்தில் சேருவதற் காக தற்போது அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய பாதுகாப்புப் பணிகளில் அதிக எண்ணிக்கையில் சேரவேண்டுமென்று பார்ப்பனரல்லாத பிரிவு மக்களை நான் கேட்டுக் கொள்கிறன்.
பதட்டமும், அழுத்தமும் நிறைந்த இந்த நேரத்தில், அரசை சங்கடப் படுத்தாமல் இருப்பதைப் பற்றி நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போர் தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளே அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசியல் போராட்டங்களில் ஈடுபடும் சில மக்கள் பயன்படுத்தும் கேள்விக் கிடமான நடைமுறைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். போர் முடிவடைந்த பிறகும் நமது நிலை பற்றி நாம் செயலற்று இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவன் நான் என்று எவரும் தவறாகக் கருதவிடக்கூடாது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சுய அரசு என்னும் நமது இலக்கை நோக்கி நம்மைச் செலுத்தும் தாராளமான சீர்திருத்தங்களின் மேலும் ஒரு தவணை அளிக்கப்படுவதற்கான நேரம் கனிந்து வந்திருக்கிறது என்று மற்ற அனை வரைப் போன்றே நானும் கருதுகிறேன்.
ஆனால், சீர்திருத்தங்களைக் கேட்கை யில், போராட்டம் நடத்துவதற்கு நாம் கடைப்பிடிக்கும் வழிமுறைகள், நடை முறைகள் நடைமுறை சாத்தியமானவை யாக இருக்க வேண்டும் என்பது பற்றி நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சீர்திருத்தம் கேட்பதற்கான ஒரு காரணம் பற்றி அனுபவம் மிகுந்த மக்களுக்கு சிறந்ததாகத் தெரியும் ஒரு வழிமுறை பக்குவப்படாத மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, இறுதியில் இனவெறுப்புக்கு வழி வகுத்துவிடும். எனவே, நாட்டிற்கும் இளைஞர்களுக்கும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமை ஒன்று தலைவர்களுக்கெல்லாம் உள்ளதால் இந்த நேரம் அவர்களுக்கு எளிதாக இருக்கும் நேரமல்ல. இனவெறுப்பு உணர்வும், நிலை நிறுத்தப்பட்ட அதிகாரத்தை மதிக்காமல் மீறுதல் என்ற உணர்வும் நம் நாட்டில் இப்போது வளர்ந்து வருகிறது.
இதனால் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்த நன்மையும் விளையாது. பொறுப்புள்ள, நடை முறை சாத்தியமானவற்றில் நம்பிக் கையுள்ள மக்களாகிய நாம், மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளையும், விழைவு களையும் நிறைவேற்றும் வகையில் ஒரு சீர்திருத்தத் திட்டத்தை தயாரித்தளிக்கும் போது, வன்முறை நிறைந்ததாகவும், அழிவைத் தருவதாகவும் அரசு கருத முடியாது. நாட்டின், பழைய பெயர் பெற்ற தலைவர்கள் இந்தப் புதிய இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று காட்டுவதற்குத் தேவையான அறிகுறிகள் நிறையவே இருக்கின்றன.
டி.ஈ.வாச்சா மற்றும் சர். வி.கே.போஸ் ஆகியோர் தங்களது பதவி விலகல் கடிதங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டாலும், தங் களது இலக்கான ஹோம் ரூல் கோரிக் கையை எட்டுவதற்கு சில தவறான, கேள்விக்குறிய நடைமுறைகளைக் கடைப்பிக்க விரும்புபவர்கள் இதில் உள்ள நீதியைப் புரிந்து கொள்ளத் தவற மாட் டார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த நாட்டில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தை வழி நடத்திச் செல்ல, நாட்டின் மிதவாத அரசியல்வாதிகள், தங்களுக்குரிய இடத்தை எடுத்துக் கொள்ள முன்வர வேண்டிய நேரமிதுவே.
நமது மாகாண வரலாற்றிலேயே பார்ப்பனரல்லாதாரின் மாநாடு நடை பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைக் கப்படாத சமூகத்தின் உறுப்பினர்கள் நீண்டதொரு காலமாகவே, நமது நாட்டின் பெயரால் பேசுவதாகக் கூறிக்கொண்டும், அரசியல் செயல்திட்டத்தால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் தாங்களே பெற்றுக் கொண்டும் வந்துள்ளனர்.
நாம் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் வெகு காலமாகவே அசட்டை யாகவே இருந்து வந்திருக்கிறோம். மேற்கத்தியக் கல்வியை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ, அந்த அளவுக்குப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அதன் விளை வாக, கல்வி களத்தில் யார் முன்னதாக நுழைந்தனரோ, அவர்களே அனைத்துக் களங்களையும் முழுமையாக ஆக்கிர மித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, இதுவரை இழந்தவற்றை நாம் சரி செய்து அடைவதுடன், நம்மை விட முன்னேறி யுள்ள மற்றவர்களின் நிலையையும் எட்டி, அதனையும் கடக்கும் அளவுக்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியது இப்போது நம் கடமையாகும். இந்த நோக்கத்தைப் பொருத்தவரை, அதை எவ்வாறு அடைந்து உய்வது என்பதைப் பற்றி நாம்தான் சிந்தித்து, திட்டமிட்டு, முடிவு செய்ய வேண்டுமேயன்றி, மற்றவர்கள் நமக்கு உதவவேண்டும் என்று எவரையும் நாம் சார்ந்திருக்கக்கூடாது.
எங்கு பார்த்தாலும் நம்மிடையே ஏற்பட்டி ருக்கும் விழிப்புணர்ச்சியைப் பார்க்கும் போது, நாடு முழுமையிலும் உள்ள பார்ப் பனர் அல்லாத சமூகத்தினர் நாட்டின் பொது இயக்கங்களில் அவர்களுக்குரிய சரியான இடத்தை விரைவில் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த மாநாட்டை நடத்துவது என்று நாம் முடிவு செய்த பொழுதிலிருந்து சுயநலக்காரர்கள் அனைத்துப் பக்கங் களில் இருந்தும் நம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிற்போக்கு வாதிகள் என்று நம்மை அடையாளப் படுத்தி அலட்சியப்படுத்தினர். நாட் டிற்குத் துரோகமிழைத்தவர்கள் என்று நாம் அழைக்கப்பட்டோம். இந்த மாநாட்டிற்காக உண்மையில் உழைத் துக் கொண்டிருந்த சிலர் பற்றி உள் நோக்கங்கள் கற்பிக்கப்பட்டு கூறப் பட்டன. இத்தகைய தந்திரங்களால் எவரையும் ஏமாற்ற முடியாது என்று மட்டுமே நம் மீது தாக்குதல் நடத்து பவர்களுக்கு என்னால் நினைவூட்ட முடியும். அதே ஆவேசத்தில் நீங்கள் அவர்களுக்கு பதிலளித்தால்,
நமது பதில் அவர்களின் தாக்குதலை விட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். வெறுப்பின் அடிப்படையில் நமது இந்த மாநாடு நடத்தப்படுவதாக சில பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளது. நமது சொந்த நிலைகளை மேம்படுத்திக் கொள்ளவும், நமது சொந்த நலன்களை முன்னேற்றம் பெறச் செய்வதற்குமே நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நமது சமூகத்தின் மேல் நமக்கு உள்ள அக்கறையும் அன்பும் நமக்கு இதற் கான தூண்டுதல் அளித்ததேயன்றி, வேறு எந்த சமூகத்தினரின் மீதான உள்ள வெறுப்பினால் அல்ல. நமது இயக்கம் மீது கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு என்னவென்றால், இந்த இயக்கத்தில் நம்மைப் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே இருப்பதாகவும்,
நமது சமூகம் முழுவ துமே இந்த நமது இயக்கத்தில் இல்லை என்றும் கூறுவதுதான். இந்த மாநாடே இந்தக் குற்றச்சாட்டுக்கான சரியான பதிலாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள பார்ப்பனர் அல்லாத அனைத்து சமூகங் களின் முக்கியமான மனிதர்கள் அனை வரும், முசுலிம்கள், கிறித்த வர்கள் மற்றும் இந்துக்கள் நம்முடன் சேர்ந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நமது இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், விழைவுகளையும் ஏற்றுக் கொண் டுள்ளனர்.

தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்)
No comments:
Post a Comment