கடவுள்தான் மக்களைப் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு கடவுள் பிறந்தார் என்று கூறி, பிறந்த நாள் விழாக் கொண்டாடும் பேர் வழிகளை என்ன வென்று சொல்லுவது!
வரும் செப்டம்பர் முதல் தேதி பிள்ளை யார் சதுர்த்தியாம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னெச்சரிகையாக அறிவிப்பு ஒன்றைக் கொடுத்துள்ளது.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிள்ளை யார் பொம்மைகளுக்கு ரசாயனப் பொருள் களைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அந்த அறிவிப்பு.
ரசாயனப் பொருள் களால் பிள்ளையார்ப் பொம்மைகளைச் செய்து அவற்றை குளத்திலோ, ஆறுகளிலோ கொண்டு போய் கரைத்தால் தண் ணீர் கெட்டுப் போய்விடு கிறது. அவற்றைப் பயன் படுத்தும் மனிதர்களும், மாடுகளும் மற்ற உயிரினங் களும் பாதிப்புக்கு ஆளா வார்கள்.
சுற்றுச்சூழல்பற்றியும், மாசுக் கட்டுப்பாடு குறித் தும் உலக அளவில் அதி கமாகப் பேசப்படுகின்றன; பிரச்சாரம் செய்யப்படு கின்றன.
ஆனால் இந்த நாட்டில் சுற்றுச் சுழல் பாதிப்புக்கும் குடிநீர் மாசுபடுவதற்கும் கடவுள்களே காரணமா கின்றன என்பது எத் தகைய வெட்கக் கேடு! இந்து மத வித்துவான்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இந்தப் பிள்ளையார் பிறப்பே மாசு கட்டுப்பாட் டுக்கு மிகக் கேடானதும், விரோதமானதுமாகும்.
பிள்ளையார் பிறந்ததே பார்வதிதேவியாரின் உடல் அழுக்கிலிருந்துதானே - அப்படித் தானே அவாளின் புராணங்கள் புட்டு வைக் கின்றன.
மாசுக் கட்டுப்பாடு பற்றிப் பேசுவோர், அரசு உட்பட முதலில் அழுக்கிலி ருந்து பிள்ளையார் பிறந் தவர் என்று கூறும் புராணங்களைத் தடை செய்ய வேண்டாமா? பிள்ளையார் பிறப்பு - மாசு கட்டுப்பாட்டுச் சட்டத் துக்கே விரோதமானதா கும். குறைந்தபட்சம் பிறப்பே மாசாகக் கொண்ட பிள்ளையார் பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டாமா?
ஊர்வலமாக எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லா மல், அந்த மக்கள் பயன் படுத்தும் தண்ணீரில் கரைப்பது என்றால் அது பச்சையான மனிதகுல விரோத செயல் அல்லவா!
இந்த மாசுபட்ட பிள்ளை யார் பிறப்பை மாசுபட்ட அறிவுடையோர் தான் ஏற்றுக் கொள்வார்களே தவிர, மாசற்ற பகுத்தறிவு வாதிகள் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே மாட் டார்கள்.
இந்த நேரத்தில் அர சுக்கு ஒரு முக்கிய வேண்டு கோள்: பிள்ளையார் பொம் மைகள் செய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் ஆய்வா ளர்களை அனுப்பி, ரசா யனப் பொருள்களைப் பயன்படுத்தாமல் அவை செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தி யாக வேண்டும்.
மதப் பண்டிகை என்ற பெயரால், மக்களின் உயிரோடு விளையாடுவ தற்கு இடம் அளிக்கக் கூடாது-கூடவே கூடாது.
அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பக்தி கரை புரண்டு ஓடுமானால் அதனை வீட்டுக்குள் பத்திர மாகப் பூட்டி வைத்துக் கொள்ளட்டும்! வெளி யில் புரையோடாமல் கரை உடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது! இருக்கிறது!! இருக் கிறது!!!
No comments:
Post a Comment