தமிழ்நாட்டின் வரலாற் றில் இந்நாள் (1944) மிகவும் குறிப்பிடத்தக்க - வரலாற்றுத் திருப்பம் என்ற செழுமை மிக்க நாள்!
இந்நாளில்தான் சேலத் தில் கூடி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என் னும் நீதிக் கட்சி திராவிடர் கழகம் என்ற பெயர் மாற் றத்துடன் கம்பீரமாக வெளி வந்த தன்மானத் திருநாள்.
நீதிக்கட்சி என்றால் சீமான்களின் உறைவிடம் ஜமீன்தார்களின் புகலிடம், சில்க் ஜிப்பாக்காரர்கள் சேர்ந்திருக்கும் கூடாரம் ஜரிகைத் தொப்பிக்காரர்கள் மிகுந்திருக்கும் ஓரிடம் என்று வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று விமர்சிக்கப்பட்ட நாளில் - அந்தக் குற்றங் குறை என்னும் தூசு கூடப் படாத - கொள்கைக் கோட் பாடுகளை வகுத்து - பட்டம் பதவிகளைத் தூ எனத் தூக்கி எறிந்து லட்சியப் புரவி ஏறிப் புறப்பட்ட புது புறநானூற்றின் புறப்பாடு இந்நாள்.
மிட்டா மிராசுகள் மிரண் டன; பதவிப் பித்தர்கள் பறந்தனர்.
நம் கட்சியிலிருக்கும் அங்கத்தினர்களும், இனி யும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்கா ரால் மக்களுக்கு அளிக்கப் பட்ட எந்தவிதமான கவுர வப் பட்டங்களையும் உடனே சர்க்காருக்கு திரும் பக் கொடுத்துவிட வேண் டும்; இனி ஏற்றுக் கொள் ளவும் கூடாது என்று திட்ட வட்டமாகத் தீர்மானத்தை நிறைவேற்றிய திருநாள்.
இன்றுவரை - ஏன் நாளையும்கூட, பதவிப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல், தமிழர்களை கல்வியிலும் உயர் பதவி யிலும் தூக்கியேற்றும் தொண்டினைத் தலையில் தாங்கி தொடர்ந்து கொண் டிருக்கும் கழகம் திராவிடர் கழகமே.
திராவிடர் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்பட்டது? ஆரியர்களுக்கு இங்கே இடம் இல்லை என்கிற விளம்பரப் பலகை பளிச் சென்று இந்தப் பெயரில் பட்டுத் தெறித்தாற்போல தெரியவில்லையா?
பார்ப்பனரை உறுப்பின ராக ஏற்றுக் கொள்ளாத ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்.
திராவிடர் கழகம் பத விக்குப் போகாததால்தான் தமிழர்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் பதவிகளுக்குப் போக முடிந்தது என்பது திராவிடர் கழகத்திற்கு மட் டுமே உள்ள தனி வரலாறு.
இனநலம் - பகுத்தறிவு இதன் இரு விழிகள்! தமிழர்களின் தன்மானத் தைக் காக்க - இனமா னத்தை எடுத்துக்கட்ட தன்மானம் பாராது உழைக் கும் தொண்டறம்தான் இதன் தோள்கள்.
உலகில் நாத்திகத்தைப் பரப்பும் ஒரே இயக்கம்! இந்த நாத்திக ஒளியை நாடெல்லாம் ஏற்றும் ஒரே ஏடான விடுதலை இந்த இயக்கத்தின் ஈடில்லாப் போராயுதம்!
பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும்.
என்றார் தந்தை பெரியார்.
(குடிஅரசு 11.11.1944)
- மயிலாடன்
No comments:
Post a Comment