- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்
92 வயதான பீகாரில் ஆரா என்னு மிடத்தில் பிறந்த ராம்சரன் சர்மா பீகாரில் பூமிகார் பிராமண குலத்தில் நிலத்தோடு சேர்ந்த பிராமணர் என்னும் வகுப்பில் பிறந்தாலும் சமூக உணர்வு, வரலாற்றில் மார்க்சீய அணுகு முறை ஆகியவற்றால் புகழ் பெற்ற வர லாற்றாசிரியர் கடந்த சனிக்கிழமை யன்று மறைந்தார் பிற்படுத்தப்பட் டோர், ஒடுக்கப்பட்டோர் மறக்க இயலாத வரலாற்றுப் பேராசிரியர் என்பதுதான் சிறப்பு.
பாபர் மசூதி இடிப்பை எச்சரித்தவர்
அயோத்தியில் வகுப்புவாதக் கும்பல் பாப்ரி மஸ்ஜித் மீது கண் வைத் திருக்கிறது என்பதை உணர்ந்து அதை இடிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள், பி.ஜே.பி. கும்பலின் அடாவடித்தனம், பாப்ரி மஸ்ஜித்தை இடிக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து அபாய அறிவிப்பு முன்னரே, செய்ததால் இவரை வரலாற்றறிஞர்கள் அபாய அறிவிப்பாளர் என்றே அழைத்தார்கள்.
1977-இல் நெருக்கடி நிலைக்குப் பின் காவிக் கட்சியினர் சேர்த்து ஜனதா கட்சி என்ற போர்வையில் ஆட்சி அமைத்த வரலாறு அறிவோம்.
அப்போது ஜனதா கட்சி ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த பிரதாப் சந்திர சுந்தர் அதாவது பி.சி. சுந்தர் என்று அழைக்கப்பட்டவர், சர்மா எழுதிய Ancient India’ (பண்டைய இந்தியா) எனும் நூலை - ஆம். பாட நூலைத் தடை செய்தார் ஏன்?
தவறான வரலாறு எழுதி விட்டாரா? இல்லை.
வரலாற்றைத் திருத்தி உண்மைக்கு மாறாக எழுதி விட்டாரா? இல்லை.
வகுப்புவாதத்தைத் தூண்டுவது போல் அவருடைய வரலாற்றுப் புத்தகம் அமைந்து விட்டதா?
அதுவும் இல்லை..
பிறகு, கடந்த ஞாயிறு அன்று கிருஷ்ண ஜெயந்தி என்று கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடி, முறுக்கு, சீடை, வெண்ணெய் எல்லாம் சாப்பிட்டார்களே அந்தக் கிருஷ்ணன் வரலாறு, வரலாறு அல்ல, கிருஷ்ணன் என்பதே கற்பனை என்று பாடப் புத்தகத்தில் ஆதாரத்தோடு புட்டுப் புட்டு வைத்ததுதான் அவர் செய்த தவறு!
மகாபாரதம், இராமாயணம் அசல் கற்பனையே!
வரலாற்றில் மகாபாரதம், இராமா யணம் ஆகியவற்றின் காலம் காப்பியக் காலம் என்று கூறிவந்த கற்பனையை உடைத்து மகாபாரதமே உண்மையல்ல, கற்பனை அது ஏதோ ஒரு இனக்குழு வாழ்க்கை என்று சுட்டிக் காட்டினார்.
மகாபாரதம், கிருஷ்ணன் என்று நம்பிக்கையோடு, பக்தியோடு கற்ப னையை வரலாற்றில் நுழைத்தபோது வரலாற்றில் ‘Myth’
என்பதற்கு அதாவது கற்பனைக்கு இடம் கிடையாது, சமுதாயமும், அறிவியல் நோக்கும் தான் வரலாற்றுக்கு அடிப்படை என்று வலியுறுத்தியவர் சர்மா. வரலாற்று அறிஞர்கள் டி.டி. கோசாம்பி, மிர்சா எலிடே ஆகியோர் வரலாற்றுத் தன்மை குறித்துக் கூறிய கருத்துதான் என்ற போதிலும் இதிகாசங்கள் எல்லாம் கி.மு. 1000 ஆண்டுக் காலத்தவை என்னும் கற்பனையை உடைத்தவர்.
1984-இல் பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிற்குப் பெரிய இடிப்பு ஏற்படப் போகிறது என அயோத்யா பிரச் சினையை ஆய்வு செய்து முதன் முதலில் வரப் போகிறது என்று எடுத்துக் காட்டினார்.
கிருஷ்ணன் மட்டுமல்ல, ராமனும் கற்பனைப் பாத்திரங்களே என்று ராமன் பற்றிய அவதாரக் கோட்பாட்டிற்கு எதிராகப் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டபோது வரலாற்றுப் பேராசிரியர் உலகம் வரவேற்றது.
பி.ஜே.பி.யை நேருக்கு நேர் எதிர்த்தவர்
இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் கோவாவில் நடைபெற்றபோது கோரக் பூரில் நடைபெற்ற போது பி.ஜே.பி.யினர் எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நின்றபோது பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் மகந்தா வைத்தியராஜ் மேடையில் எதிர்த்தபோது அரசியல் நிலைத் தன்மைக்கு பி.ஜே.பி.யின் சமயக் கொள்கை பாதிப்பை ஏற்படுத் தும் என்று துணிவுடன் கூறினார். இந்தக் கூட்டம் கோரக்பூரில் மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நடை பெற்றது.
காவிக் கொடியினருக்கு எதிர்ப்பு!
1991-இல் டி.என். ஜா, துரஜ்பாள் ஆகியோருடன் இணைந்து ‘Report to the Nation’ நாட்டுக்கு அறிவிப்பு எனும் தலைப்பில் பாபர் மசூதிக்குக் கீழே, அடியில் ராமர் கோவில் இருக்கிறது என்று காவிக் கொடி கும்பல் கூறி வந்தது டுபாக்கூர் தான் என்று தொல்லியல் அகழ்வாய்வுச் சான்றுடன் எடுத்துக் கூறியபோது ராமர் ஜென்ம பூமி என்று பொய்யாகக் கூறிவந்த வாதம் வரலாற்று அடிப்படையில் உடைத்து எறியப்பட்டது.
அயோத்யா ஆபத்து, வகுப்புவாதத் திற்கு எதிரான போர், சமயச் சார்பற்ற கல்வி, அணுகுமுறை, வரலாறு கற்றுக் கொடுக்க மார்க்சியக் கோட்பாட்டை வழியாகப் பயன்படுத்தல் ஆகியன அவருடைய கோட்பாடுகள் ‘Marzixm as a tool of analysis to keep the lias to the Minimum’’ என்பார்.
வரலாற்றில் அய்ந்து நிலைகள் உண்டு என்று கூறியவர் அவர். அவை Colonialism, imperialism, Nationalism, Manzism any liberal History.
Colunialism என்றால் குடியேற்றம் nperialismஎன்றால் பேராதிக்கம் Nationalism என்றால் தேசியம் இந்த தேசியத்தைக் கற்றுத் தரும்போது பண்பாட்டைச் சொல்லித் தர வேண் டியுள்ளது. பண்பாடு என்ற போர்வை யால்தான் இராமன், கிருஷ்ணன் என்ற நம்பிக்கையும், கற்பனையும் உட்புகுந்து விடுகிறது. எனவே மார்க்சிய வழி முறையில் வரலாறு கற்றால், கற்பித் தால், கற்பனை, நம்பிக்கை ஆகிய வற்றிற்கு இடமில்லாமல் உண்மையான வரலாறு வெளிப்படும் வரலாற்றுக்கு தொழில் நுட்பம் அதாவது Technology-யும், சமூக மாறுதல் அதாவது Social Change அடிப்படை என்று எடுத்துக் கூறியவர் சர்மா.
1950_-களில் ஸ்கூல் ஆஃப் ஓரியண் டல் அண்டு ஆப்பிரிக்கன் ஸ்டபீஸ் (கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆய்வுப் பள்ளி, என்பதில் ஏ.எல். பாஷாம் என்று அறியப் பெற்ற ஆர்தர்லிவெல்லி பாஷாம் என்னும் பேராசிரியரின் வழிகாட்டலில் பி.எச்.டி. ஆய்வுக்கு பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் என்னும் தலைப்பை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தபோது மட்டு மீறிய வேட்கை, வெறியார்வம் என்றே அந் நாளில் கருதப்பட்டது.
கல்வித் துறையில் 1980_களில் ஒடுக்கப் பட்டவர்பற்றி அக்கறை செலுத்தும் இராணாஜித் குகா முதலானவர்கள் தோன்றி அவர்கள் மட்டுமே ஒன்று மில்லாதவர்கள், ஏதுமற்றவர்களைப் பற்றி எழுதக்கூடியவர்கள் என்னும் போது, அவர்களுக்கு முன்னேயே சர்மா ஒன்றுமில்லாத மக்களைப்பற்றி ஆய்வுக் கட்டுரைகள், என்று எழுதித் தனி முத்திரை படைத்திருந்தார்.
ஒடுக்கப்பட் டவர்களைப்பற்றி எழுதுவது அவ் வளவாக வரவேற்கப்படாத காலத்தில் அவர்களைப் பற்றி எழுதியவர் சர்மா. ஆனால் சாதாரணமான நடிகர்களுக் கெல்லாம் மய்ய அரசு பத்மபூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம் விருது கொடுத்துக் கவுரவிப்பது, இன்று பீகார் அரசே அரசு மரியாதையோடு மறைந்த பேராசிரியர் சர்மாவிற்கு இறுதி மரி யாதை செலுத்தத் தவறிவிட்டது வருந்தத்தக்கது என்று குறிப்பிடுகிறார் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியரும், வரலாற்று அறிஞருமான தமிழ்நாட்டவர் கு. வெங்கடசுப்பிர மணியன். 1984--இல் சர்மாவிற்குப் பின்னர் டில்லிப் பல்கலைக் கழகத்தில் பேரா சிரியரானவர் இவர்.
பீகாரில் ஆராவில் ஜெயின் கல்லூரி யில் விரிவுரையாளராகப் பணியாற்றிய நூல்ஹாசன் கல்வி அமைச்சரான போது இவருடைய வரலாற்று அணுகுமுறையைப் பாராட்டி டில்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நியமித்தார்.
இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவில் தலைவராக அய்ந்து ஆண்டுகள் பணியாற்றிய வேளையில்தான் பி.ஜே.பி. அடங்கிய ஜனதா அரசு மீண்டும் அவரை நியமனம் செய்யவில்லை. காரணம் இவருடைய கிருஷ்ணன்பற்றிய கருத்து.
1975இல் இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவர் பதவி வகிக்கையிலே, அலிகாரில் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் மாநாட்டில் இந்திராகாந்தி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்துக் கொடுமை செய்த போது, அதற்கு எதிராகப் புரட்சி கரமான நெருக்கடி நிலை எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியவர் சர்மா. 1940-லேயே உலக வரலாறு படைத்தவர்.
சர்மாவுக்கு உழவர்கள், விவசாயப் பெருங்குடியினர் மீது அக்கறை ஏற்பட் டதற்கு பீகாரின் சீர்திருத்தவாதியும் உழவர்களின் தலைவருமான சகஜானந் தாவுடன் கொண்டிருந்த தொடர்பே காரணமாகும் மனித சமுதாய வரலாறுதான் அவருக்கு மிகுந்த ஆர்வம். டில்லிப் பல்கலைக் கழகம் சர்மாவை இன்றும் மறக்கவியலாத அளவிற்குச் சமுதாயச் சிந்தனைகளை விதைத்திருக்கிறார். இன்று வரலாற்றாசிரியர்களில் சிறப்பாகப் பேசப்படும் ஜா, சுமிட்சர்க்கார் ஆகிய இருவரையும் தம் காலத்தில் டில்லிப் பல்கலைக் கழகத்தில் சேர்த்தார்.
பாட்னாவில் ஓய்வு பெற்றுச் சென்ற அவரை யாரேனும் மாணவர்கள் சந்தித்தால் அவர் சொல்லும் இரண்டு ஆங்கில வார்த்தைகள் Keep walking அதாவது சென்று கொண்டே இரு மற்றுமொரு குறிப்பிடத்தகு செய்தி. சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்க வகுப்புவாதச் சக்திகள் ராமர் பாலம் என்றெல்லாம் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்தபோது, இராமரே கற்பனை என்கையில் ராமர் பாலமும் கற்பனைதான் என்று துணிவோடு கூறிய, அவருடைய கருத்து இந்து பத்திரிகையிலும் இடம் பெற்றது.
டில்லியில் இவருடைய மாணவி பேராசிரியை சுகிர்தா ஜெயஸ்வால், இர்பால் அபீப் முதலானவர்கள் சேது சமுத்திரத் திட்டம் குறித்துக் கூறிய செய்தியை விடுதலையில் தொகுத்து அளித்திருந்தேன். அவர்களுக்கு அதற்கு வழிகாட்டிய பெருமகன் சர்மா.
சர்மா எழுதிய ‘Light on Early Indian Society and Economy’, ‘Social Changes in Early Mediaral India’ என்றும் இரு நூல் களை 1975- லேயே அய்.சி.எச்.ஆர்.க்காக மொழிபெயர்த்தவன் என்ற பெருமை உண்டு. Social Changes in Early Medicial India’ எனும் சிறு நூலை பண்டைய இந்திய சமுதாயத்தில் மாறுதல் எனும் தலைப்பில் என்சிபிஎச். 1980- களிலேயே வெளியிட்டது.
இறுதியாக இன்றைய தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியரும், இந்திய வரலாற்றுக் காங்கிரசின் துணைத் தலைவருமான அலிகார் பேராசிரியர் இர்பான் அபீப் கூறுவதுபோல அயோத்தி ஆபத்தை முதன் முதலில் எடுத்துக்கூறி எச்சரித்தவர் பேராசிரியர் சர்மா. இவர் ஒடுக்கப்பட்ட, நசுக்கப் பட்ட மக்கள் வரலாற்றை ஆராய, அனைவருக்கும் தூண்டுகோலாய் விளங்கியவர். 1986- லேயே பாப்ரி மஸ்ஜித் எனப்படும். பாபர் மசூதியைக் காக்க வேண்டும் என்று இந்திய வரலாற்று காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றியவர் 1975-இல் அலிகாரில் எமர்ஜென்சியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியவர். இவையெல்லாம் அவருக்குச் சேர வேண்டிய விருதுகள், பட்டங்கள் கொண்டு வராமல் போயிடச் செய்திருக்கும். ஆனால் மார்க்சிய வழியில் தொழில் நுட்பம், அறிவியல் வழியில் வரலாறு ஆராயப்பட வேண்டும் என்னும் அவர் கருத்து என்றும் மறையாது மாறாது.
இவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் என்ன தெரியுமா? தந்தை பெரியார் சொல்வது போல் சூத்திரப் பட்டம். சூத்திர சர்மா என்றும் இவரை அழைப்பர்.
No comments:
Post a Comment