Friday, August 26, 2011

சுவை குன்றாத ஆப்பிள் இதோ!


சுவை குன்றாத ஆப்பிள் இதோ!


சாதனையாளர்களில் சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர். வேறு சிலரோ, வரலாற்றையே உருவாக்கி வாழும், அல்லது வாழ்ந்து வரலாறு ஆகின்றனர்!
அவ்வகையில் கணினித் துறையில் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆப்பிள்  Apple - Computer   கம்பெனி நிறுவனத்தின் தோற்றுநர் - ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) என்ற அமெரிக்கர், அத்துறையில் பல்வேறு புதிய தொழில் நுணுக்கங்களைப் புகுத்தி, புதுப்புது கணினி வழி கருவிகள் கண்டறிந்து ஒரு புதிய புரட்சியையே செய்து விட்டார்.  i-mac, i-pod, i-phone, i-pad இப்படி பலப்பல புதியவைகள் உலகத்தை இன் றைக்கு ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
இவரது ஆளுமைத் திறனால் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி பல்லாயிரம் கோடி டாலர்களை சம்பாதிப்பதோடு, அமெ ரிக்க அரசின் பட்ஜெட்டையே பெரும் பகுதி தாண்டுவதாக அமைந்துள்ளது என்பது வியப்புக்குரியது அல்லவா?
இவரது அறிவுத் திறன், ஆளுமைத் திறன், புதுநோக்கு, மக்களிடையே கலை உணர்வையும் பொறியியல் திறனையும் இணைத்துக் கொண்டு சந்தைக்குக் கொணரும் திறன் - இவை தனித் தன்மையானவை.
அமெரிக்காவிலும், வெளி உலகத் திலும் இன்று மிகப் பெரிய செய்தி - முக்கியத்துவம் வாய்ந்தது எது தெரியுமா?
இந்த ஆப்பிள் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (Chief Executive)  பதவியிலிருந்து இவர் விலகியதுதான்!
56 வயதான ஸ்டீவ் ஜாப்ஸ்  (Steve Jobs)     புத்த மார்க்கத்தில் மிகுந்த ஈடு பாடு கொண்டு, இந்தியாவுக்கு வந்ததோடு, பவுத்தராகவும் மாறிவிட்டார். அதன் அறிகுறியாக தலையை மொட்டை அடித்துக் கொண்டே திகழ்ந்தார் என்று அவரைப் பற்றிய ஒரு சுவையான தகவல்.
புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ள இவர், எப்போது நான் இந்த நிறுவனத் திலிருந்து, இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவேன் என்பதை முடிவு செய்ய வில்லை என்றாலும், அந்த வேளைக்காக காத்திருக்கிறேன் என்பவர், திடீரென நேற்று அறிவித்துவிட்டதோடு ஆப்பிள் நிறுவனம் எனது பணி இன்னமும் தேவை என்று கருதினால் என்னை இயக்கு நர்கள் குழுவின் தலைவராக்கி (Chairman, Board of Directors)  பயன் படுத்திக் கொள்ளட்டும் என்று கூறினார்.
தனது இடத்தில் செயல் இயக்கு நராக டிம் குக் (Tim Cook) என்பவரை C.E.O. வாக நியமித்தால், அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு  மேலும் பல புதுமைகளைச் செய்து இக்கம்பெனியை உயர்த்திடுவார் என்று பாராட்டு தெரிவித்து பரிந்துரைத்தார்.
தனது சக ஊழியத் தோழர்களை எப்படி உயர்த்திடுவது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு அல்லவா? அதற்கு முன் டிம் குக் - அங்கே  Chief Operating Officer என்ற பொறுப்பில் பணி யாற்றி வந்தவர். ஸ்டீவ் ஜாப்ஸ் கம்பெனி டைரக்டர்களுக்கு தலைவராகவும் இப்போது ஆக்கப்பட்டுவிட்டார்.
ஆப்பிள் வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட குழு ஒத்துழைப்பு உணர்வு (Team Spirit)   ஒரு முக்கிய காரணம் என்பது புரிகிறதா?
தகுதி, திறமை -மார்க் அடிப்படையில் என்று பேசும் மேதாவிகளும் அறிவு ஜீவிகளும் அறிந்துகொள்ள வேண்டிய இன்னொரு பாடம் இவரது விஷயத்தில் உண்டு.
இவர் ஒரு  College Drop-out  - அதாவது கல்லூரி படிப்பையே முடிக் காமல் இடையில் விட்டுச் சென்று இது போன்ற புரட்சிக்கு தன்னை ஆளாக்கிய நடைமுறை சாதனையாளர்!
என்ன ஆப்பிள் சுவைக்கிறதா இளைஞர்களே!
புதுமையை நாடுங்கள்!
இவரது வாழ்க்கை வரலாறு சைமன், ஷீஸ்டர் என்ற அமெரிக்க புத்தக வெளியீட்டாளர்களால் வரும் நவம்பரில் வெளியிடப்பட்டு வெளிவரவிருக்கிறது.
i-mac என்பதை 1998 இல் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டபோது, ஜாப்ஸ் சொன்னார், i- என்று நாங்கள் குறிப்பது internet, individual, instruct, inform, inspire  என்பவைகளை உள்ளடக்கியவை என்றார்!
இதனை நாம் குறிப்பாக கணினி பயன்பாட்டை அன்றாடம் அனுபவிப்ப வர்கள் அனைவரும் உணர்வர்!
இணையம், தனிநபர் அறிதல், அது போதனை ஆசிரியர், தகவல் களஞ்சியம், உற்சாகமூட்டல் எல்லாம் இந்த அய் என்ற எழுத்தில் உள்ளது என்கிறார்!  என்னே திறமை!
ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வளவு பெரிய சாதனையாளர் என்ற நிலையிலும் அவருடைய அறிவுரை என்ன தெரியுமா?
2005-இல் ஸ்டான்ஃபோர்டு பல் கலைக் கழகப் பட்டமளிப்பு வகுப்பில் (graduating class) பட்டதாரிகளுக்கு அறிவுரை கூறும்போது,
‘Stay hungry’
‘Stay Foolish’
எப்போதும் பசியோடு இருங்கள்!  நாம் இன்னமும் முட்டாள் தனத்தில் தான் இருக்கிறோம் என்ற நினைப்போடு இருங்கள்  (அதாவது அறிவுத் தேடலின் கதவுகள் திறந்தே இருக்கட்டும் எப்போதும்) என்பதே அவ் வாசகங்களின் மய்யக் கருத்தாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...