1940இல் திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (ஜஸ்டிஸ் கட்சி) மாநாட்டிலேயே திராவிட மக்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
காரணம் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதே - மக்களுக்குள் இருக்கும் ஜாதி பேதங்களை ஒழித்து ஒரே ஜாதியாக (மானிடமாக) ஆக்க வேண்டும் என்பதற்காகவே!
ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைகளில் ஒன்றாக அது ஆதி முதலே இருந்து வருகிறது. அது காரணமாகத்தான் பார்ப்பனர் நீங்கிய மக்கள் எல்லோரும் ஓர் ஜாதி, ஓர் இனம், ஓர் நிறை என்று சொல்லி சர்க்காரையும் அதை ஏற்றுக் கொள்ளச் செய்து வந்துள்ளோம் என்று 1944 லேயே தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு ஏட்டில் எழுதினார்.
அதோடு தந்தை பெரியார் அவர்கள் கூறும் அருமையான விளக்கம் (1944 குடிஅரசு):
அதோடு மத விஷயத்திலும் நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டால், ஜாதிக்குக் கட்டுப்பட வேண்டி வரும் என்றும், வருணாசிரம முறையையும் தவிர்க்க முடியாது என்று கருதியும், சட்டங்கள் முதலி யவை ஜாதிகள் அடிப்படையாயும், அந்த ஜாதித்துவம் இந்து மதத்தை அடிப்படையாயும் கொண்டு இருப்ப தால்,
அந்த இந்து மதத்துவம் ஆரிய தர்மத்தை (பார்ப் பனீயத்தை) அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும் நாம் இந்துக்கள் என்ற சொல்லிக் கொள்ளக் கூடாது என்று 1938 சென்னை மாநாட்டிலும் 1940 திருவாரூர் மாநாட்டிலும் பேசி தீர்மானம் செய்திருக்கிறோம்.
திராவிடனுக்கு இந்து மதமும், ஜாதி மதமும் இல்லை என்று இதற்கு முன் இருந்த எல்லாத் தலைவர்களும் கட்சி (ஜஸ்டிஸ்) பிரமுகர்களும் அறிவாளிகளும் பேசியும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி பிரசுரமாக, கபிலர் அகவலை லட்சக் கணக்கில் அச்சுப்போட்டுப் பரிமாறி வந்திருக்கிறது என்கிறார் 1944 குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியார்!
மேலும் இந்து என்ற சொல் வெளியில் இருந்து படையெடுத்தவர்கள், இங்கிருந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் வெறுப்புடன் கூறிய சொல் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்து என்ற சொல் எந்த நாட்டிலிருந்து வந்தது? எந்த மொழிச் சொல் என்பது இன்னமும் கண்டு பிடிக்கப்பட வேண்டிய ஒன்று. சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.வி. ராஜமன்னார், வெங்கடேசுவரன் vs மைக்கேல் என்ற வழக்கில் இந்திய மொழி எதிலும் இந்து என்ற சொல் இல்லை என்று தீர்ப்பில் எழுதியுள்ளார். எனவேதான் இந்து என்று சொல்லி இழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள் என்றார் பெரியார்!

No comments:
Post a Comment