Tuesday, August 9, 2011

பகுத்தறிவுச் சிந்தனைத் துளிக்கதைகள்

விரதம்

அமாவாசை விரதத்திற்காக அதிகாலை 5 மணிக்கே எழுந்து குளித்து பரிசுத்த பக்தியுடன் மரக்காய்கறிகளை சமையல் செய்ய ஆரமபித்தாள் அம்மா.

விரதம்னா என்னம்மா?

சுட்டிவாண்டு வினோத் வினோதக் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான். விரதம்னா சுத்த சைவம்.

அசைவம் சாப்பிடக்கூடாது. மரம், செடி, கொடியில விளையக்கூடிய பொருட்களை வெச்சு சுத்தமா எச்சயீல்படாம விரதம் விடணும் என்றாள் செல்லமாக.

முட்டை சாப்பிடலாமா? என்றான் குறும்பாக.

அசடு... முட்டை கோழில இருந்து வர்றது அது அசைவம் சாப்பிடக்கூடாது. என்றாள் அம்மா.

சமையல் முடிந்தது அம்மா பயபக்தியுடன் சாம்பிராணி மணம். அறுசுவை உணவுடன் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

தயிர் ஊற்றவா? என்றாள் அம்மா.

தயிர் எதில் இருந்து வந்ததும்மா? பால்ல இருந்து பால்....!!?

அதிர்ந்து போன இருவரும் உறைந்து போனார்கள்.


தீர்ப்பு

அரசமரத்து திண்ணையில் பஞ்சாயத்து என கிராமமே கூடியிருந்தது. தலை கவிழ்ந்து கைகட்டி குற்றவாளியாக நின்றான் சாமுவேல். நம்ம ஊரு தேங்காய் கல்லு மாரியாத்தா கோவில்ல நேத்திக்கடனுக்கு விடற சேவல்களைப் பிடித்து வித்துடுறாங்க இவன். நீங்கதான் தீர்ப்புச் சொல்லணும் என்றான் ஒருவன் நாட்டாமையைப் பார்த்து பல சர்ச்சைகளுக்குப் பின் நாட்டாமை தீர்ப்புச் சொன்னார். 300 ரூபாய் அபராதம் அல்லது, 300 சவுக்கடி என்றார். வேண்டாம் சாம 300 ரூபாயையே கட்டிடறேன் எனக் கும்பிட்டு விழுந்து அபராதத் தொகையை உடனே கட்டினான் சாமுவேல். கூட்டம் கலைந்தது.

நாட்டாமை சாரட் வண்டியில் தன் வீட்டின் உள்ளே நுழைந்தார். என்னடி மங்களம் கோழிக்குழம்பு வாசனை கூப்பிடுதே என்றார். நம்ம சாமுவேலு ஒரு சேவல் கொண்டுவந்து கொடுத்தாங்க. ஒரு வாரத்துக்கு சேவல் கொடுக்கிறதா 300 ரூபாய் வாங்கிட்டுபோனங்க என்றாள் மங்களம்.

விழா

அந்த அரசமரத் திண்ணையைச் சுற்றி கிராமமே கூடி முடிவடுத்து சித்திரை 18இல் தெப்பத்திருவிழா...

தண்டோரா போடவேண்டும். மாயனைக் கூப்பிடு!... தண்டோரா போட்டான் மாயன், வீடு வீடாய், வரி வசூலித்தான் மாயன்,

விறகுகளை வெட்டி வந்தான் மாயன்,

தோரணம் கட்டினான் மாயன். தெப்பத்தேர் அமைத்தான் மாயன்.

பூ வாங்கி வந்தான் மாயன், பூஜைப் பொருட்களை சேகரித்தான்மாயன்.

மாயனால் களைகட்டியது விழா. மாயன் மட்டும் உள்ளே வரக்கூடாது?


கடன்

ஆத்தாக்கிட்ட கடன் இருக்க, அதான் பிள்ள நமக்கு கஷ்டமும் நஷ்டமும் கடன்தொல்லை பயம் கண்ணைப்பிடுங்குது.

இன்னையில் இருந்து அம்மனுக்க வேண்டி 21 நாள் விரதம் இருந்து கிடாவெட்டி பொங்கவச்சு அம்மன் கடனை அடச்சுப்புடனும் என தன் மனைவியிடம் சொல்லினான் மாரியப்பன். அதுசரி செல்விக்கு என்ன செய்வீங்க என்றாள் மனைவி மாரியம்மாள்.

பத்து வட்டி வாத்தியார் பாக்கியநாதன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பதினைந்து வட்டிக்கு கொடுக்கிறாம் வாங்கிட்டா போச்சு. படையல், பொங்கல்,ஆடு, சந்தனம், பத்தி சாம்பிரானி என காசு கரைந்து ஆத்தாகடன் முடித்தது.

பத்து வட்டி வாத்தியார் பாக்கிநாதன் பத்து வருடமாக மாரியப்பன் வீட்டிற்கு படை எடுக்கிறார். வட்டி கடன் அடைபடவில்லை.


பேய்

கிராமத்து அம்மன் கோவில் பின்புறம் போகாதே அங்க பாழடைந்த பங்களாவில் பேய் இருக்காம். அம்மா தம் 5 வயது ஆறுமுகத்தை பயமுறுத்தினாள். யாரும்மா சொன்னா? அம்மன் கோவில் பூசாரிதான். ஆமாப்பா போயிடாதே அங்க பேய் இருக்காம் கட்டிலில் படுத்திருந்த தாத்தாவின் குரல். யாரு தாத்தா சொன்னா? பார்விதி மகன் மோகன் பார்த்ததா சொல்றான். நம்ம பக்கத்து வீட்டு பருவதம் மகள் ரேவதிகூட கொலுசுச் சப்தமெல்லாம் கேட்டதா சொல்லுச்சு! போகாதே. போகமாட்டேன் தாத்தா. ஊரெங்கும் பேயின் பரபரப்பு பயத்துடன் ஊர்மக்கள்.

இரவு 11 மணி அம்மமன் கோவில் பாழடைந்த பங்களா, காட்டு மரங்களைவெட்டி லாரியில் ஏற்றி பணக்கட்டுகளுடன் பூசாரி. கண்களை மூடிய பார்வதி மகன் மோகனும், பருவதம் மகள் ரேவதியும் காதலுடன் காதலாய்.

காசு

அதிகாலை காகங்கள் கரைந்ததில் அரசமரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த சாமியாரின் நித்திரை கலைந்து எழுந்திரித்தார். குளித்து திருநீற்றுப்பட்டைகளை யிட்டுக்கொண்டு அந்தப் புதிய சிற்றூரில் காசு வேட்டையை ஆரம்பித்தார்.

அம்மா தாயே தர்மம் பண்ணுங்க தெர வரிசையில் வீடு வீடாக தொழிலைத் தொடங்கினார். 5 ஆயிரம் வீடுகள்.

சிந்தித்தான் வீட்டுக்கு ஒரு ரூபாய்...

சேச்சே ரொம்ப ஆசை. 50 பைசா வீதம்... ம்..

இதுல எத்தனை கஞ்சன்களோ...

அம்மா தாயே தர்மம் பண்ணுங்க.

பொழுது மறைய ஆரம்பித்தது காகங்கள் அரசமரத்தில் அதனதன் கிளைகளில், மரத்தின் கீழ் சாமயாரும் தஞ்சமடைந்தார்.

அன்னதான மதியச்சாப்பாடு முடிந்து கையில் இரவுச் சாப்பாட்டுடன் உட்காந்து சில்லறைகளைக் கொட்டி எண்ணினார் - ரூ.1816.50.


நகை

அந்த பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கிராமத்திலிருந்து சந்தைக்கு வந்த குஞ்சரம் பேருந்தைப் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுடன் மூச்சுத்திணற படிக்கட்டு தாண்டி இருக்கையில் அமர இடம் தேடிய கண்கள் கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை காணாமல் பதறித்துடித்து, கதறியழுததைப் பார்த்த பேருந்து நடத்துன்ர் பேருந்தின் இருபக்கமும் நின்று சோதனையில் ஈடுபட்டதில் சின்னாள் சின்னத்தாயி. அறுந்தநிலையில் அதே சங்கிலி சின்னத்தாயின் சேலைநுயினில் முடிந்திருந்தது. அது தன் சங்கிலி எனவும் அறுந்ததை பற்றவைக்க வந்ததாகவும் வாதாடினாள்.

பஞ்சாயத்து தீராமல் இருவரையிம் இறக்கிவிட்டு பேருந்து சென்றது. நல்லவர் பக்கம் 4 பேர், கெட்டவர் பக்கம் 5 பேர் என பேருந்து நிலையத்தில் பஞ்சாயத்து களைகட்டியது காவல் நிலையம் செல்லப் பலர் அறிவுறுத்தியும் காதில் போட்டுக் கொள்ளாத குங்சரம் நீ வா காளியம்மன் கோவிலுக்கு.

அங்கு வந்து சத்தியம் செய். பூ கட்டிப் போடுவோம் எனக் காளி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று பல போராட்டங்களுக்குபின் பூ கட்டிப் போட்டு, வெள்ளை பூ குஞ்சரத்திற்கு சிவப்பு பூ சின்னத்தாயிக்கம் என பூ எடுத்துக்கொடுத்தான் பூசாரி. வந்தது சிவப்புப் பூ சிரித்த முகத்துடன் காரியம்மன்!


ஆடி

சம்பந்தி பிரசத்துக்கு இன்னும் 2 நாள் இருக்க நீங்க பேசறது நல்லா இல்லை. என்ன நல்ல இல்லை 7 நாள்ள ஆடி. அத யோசிச்சுப் பாத்திங்களா? எப்படியும் ஆபரேஷன்தான் அப்புறம் என்ன, சம்பந்திகளின் சண்டை காரசாரமாகி நல்ல நேரம் நல்ல நாள் என்ற சொல் இருமுள்களையும் ஒன்று சேர்த்தது.

வலி இல்லாமல்.....! மருமகள் பிரசவ வார்டில்.

வலி இல்லாமல்......! மயக்க மருந்து!

வலி இல்லாமல்.....! ஆபரேஷன்....

வலி இல்லாமல்......! குவா... குவா.... ஆணா பெண்ணா?

ஆர்வத்துடன் பார்க்கத்துடிக்கும் அஃரிணைக் கும்பல்கள்.


-அணுகலைமகள்

1 comment:

vidivelli said...

தயிர் எதில் இருந்து வந்ததும்மா? பால்ல இருந்து பால்....!!?

அதிர்ந்து போன இருவரும் உறைந்து போனார்கள்.

haaaa....
anaiththum supper pathivu,...
vaalththukkal sakO/

http://sempakam.blogspot.com/

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...