சென்னை, ஆக.20- அன்று ராஜாஜி குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்தார். தந்தை பெரியார், அண்ணா, காமராசர் போன்றோர் எதிர்த்தனர். அதன் காரணமாக ஆச்சாரியார் ஆட்சி ஒழிக்கப்பட்டது. கல்வியில் கை வைக்கும் எந்த ஆட்சியும் தமிழ்நாட்டில் நிலைக்காது என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சென்னை மயிலாப் பூரில் மாங்கொல்லையில் சமச்சீர் கல்வி வெற்றி விழா வில் பொதுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
புதுடில்லி, ஆக. 20- சுவிட்சர் லாந்து வங்கிகளில் உள்ள இந்தி யர்களின் கறுப்பு பண விவரங் களை வரும் செப்டம்பர் மாதம் முதல் பெறலாம் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
புதுடில்லி, ஆக. 20- மருத்துவம், பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவை யில் அ.தி.மு.க., எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தினார்.
வைஸ்ராய் அவர்களும் இங்கிலாந்து நாட்டின் இந்தியாவுக்கான செயலாள ரும் பரிசீலித்த பல்வேறு திட்டங்களில் 1915 பிப்ரவரியில் தான் இறப்பதற்கு முன்பு கோகலே கோடிட்டுக் காட்டியபடி உருவாக்கப்பட்ட 1916 ஆம் ஆண்டின் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் திட்டமும் ஒன்று.
சென்னை, ஆக.20-சமச்சீர் கல்வி புத்தகங் களுக்கு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் அதிருப் தியில் உள்ளனர். சிலர் கள்ளச் சந்தையில் புத்த கங்களை அதிக விலைக்கு விற்பதாகவும் அவர்கள் குறை கூறு கின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் 16ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமச்சீர் புத்த கங்களில் நீக்கம் செய்யப் பட வேண்டிய பகுதி களை நீக்கும் பணி தொடர்வதால் உரிய காலத்தில் புத்தகங்களை வழங்காமல் சில பள்ளி கள் திணறி வருகின்றன. சில்லரை விற்பனை கடைகளில் புத்தகம் விற்கவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற் பாடு செய்து இருந்தது.
நாகை மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்விக்கணை!
நாகை, ஆக. 20- ஜட்கா வண்டி குதிரையையும், ரேஸ் குதிரையையும் ஓடவிடுவதுதான் சம வாய்ப்பா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி சுப்பராவ் கேட்ட கேள்வியை எடுத்து விளக்கிக்கூறினார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
No comments:
Post a Comment