தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்களுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் - முதல் அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று (3.8.2011) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
இந்தப் பிரச்சினை 1992இல் வந்தபோது, சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகம் கூட்டிய ஈழ அகதிகள் கல்வி உரிமை பாதுகாப்பு மாநாட்டில் (13.7.1992) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:
இலங்கை ராணுவத்தின் தாக்குதலால் தங்கள் உடைமைகளை இழந்தும், உற்றார், உறவினர்களை இழந்தும் - தமிழகத்தின் அகதிகளாக அடைக்கலம் புகுந்தவர்கள் ஈழத் தமிழர்கள். தமிழ்நாட்டில் ராஜீவ் படுகொலை சம்பவத்துக்குப் பிறகு, ஈழத் தமிழர்கள் அனைவருமே, தமிழ்நாட்டுக்கு எதிரிகள் என்று திட்டமிட்ட முறையில் ஏடுகள் பிரச்சாரம் செய்து, ஈழ அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மனிதாபிமானத்துக்கு எதிராக இடைவிடாது மத்திய - மாநில அரசுகளை வற்புறுத்தி வந்ததோடு அதில் வெற்றியும் பெற்றன.
இதன் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து, சுமார் பதினைந்தாயிரம் தமிழ் அகதிகள் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையில் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் - விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் - இங்கிருந்து கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இந்த நிலையில் ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் - அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல ஆணையாளரிடம், இது பற்றி புகார் செய்ததைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை அய்.நா.வின் அகதிகள் நலக் கமிஷனர் மூலமாக இந்திய மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது; அதன் பின் மேற்கொண்டு அகதிகளைத் திருப்பி அனுப்பும் முயற்சிகள் கைவிடப்பட்டன.
இன்றைய தினம் தமிழகத்தில் சுமார் 90,000 ஈழத் தமிழ் அகதிகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களின் உணவு, இருப்பிடம் மற்றும் கல்விக்கு உத்தரவாதம் செய்யக்கூடிய உரிமையும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.
உணவு, உறைவிடங்களுக்கு உத்திரவாதம் தருவது போல், அவர்களின் கல்விக்கும் உத்திரவாதம் செய்யப்படவேண்டியது அவசியமாகும்; உலகம் முழுவதும் பல நாடுகளில் வாழும், அகதிகளுக்கு, அந்நாட்டு அரசாங்கங்கள் இந்த அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்து வருகின்றன; ஆனால் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் - ஈழத் தமிழர்களுக்கு முழுவதுமாக அனுமதி மறுத்து, தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது, மனிதாபிமானத்துக்கும், சர்வதேச நெறிமுறைகளுக்கும் எதிரானது என்பதை இம்மாநாடு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் - முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது, தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழ் மக்கள் ஏராளமாக அகதிகளாக வந்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு, ஈழத்தில் மருத்துவக் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த 100-க்கும் அதிகமான மாணவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உடனடியாகக் கல்வியைத் தொடர, முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். அப்போது உத்தரவிட்டார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஈழ அகதிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் 20 இடங்களும், விவசாயக் கல்லூரியில் 10 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 40 இடங்களும், பாலிடெக்னிக்கில் 40 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர அரசு கலைக் கல்லூரிகளிலும் ஏராளமாக ஈழத்தமிழ் அகதிகள் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதற்குப்பிறகு கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சி காலத்திலும் இது நீடித்தது. தி.மு.க. ஆட்சி கலைப்பட்டு பிறகு நடைபெற்ற குடியரசுத் தலைவர் ஆட்சியிலும் (ஆளுநர் ஆட்சியிலும்) இச்சலுகைகள் ரத்துச் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தை மட்டுமே நம்பி அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் கல்வி உரிமையை மறுப்பது, ஈழத் தமிழர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்பதோடு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வழி நடைபெறும் ஆட்சி என்பதற்கும் மாறானதாகும்.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசாங்கங்கள், இந்த வசதிகளை உருவாக்கித் தந்துள்ளன. இந்தியாவில் வாழும் ஏனைய அகதிகளுக்கும், இந்த உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன; ஆனால், ஈழத் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதானது, மிகப் பெரும் அநீதி என்பதை, மிகுந்த கவலை உணர்வோடு இந்த மாநாடு தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டுகிறது; இந்தக் கல்வி உரிமைப் பறிப்பு ஆணையை தமிழக அரசு ரத்து செய்து, மீண்டும் ஈழத் தமிழர்களுக்கு கல்வி உரிமை வழங்கவேண்டுமென தமிழக அரசை, முதலமைச்சர் (ஜெயலலிதா) அவர்களை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
குறிப்பு: 19 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்றைக்கும் பொருந்துகிறது.

No comments:
Post a Comment