ஒரு கிழவர் தன் பேரனான சிறுவனுடன் கோவில் ஒன்றுக்குச் சென்றார். அந்தப் பையனிடம் கற்சிலையைக் காட்டி, அதைக் கும்பிடும்படி கேட்டுக் கொண்டார். சுட்டிப்பயல் உடனே, கல்லை எதற்குத் தாத்தா கும்பிடச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான். உடனே கிழவர், இது கல் இல்லை. கடவுளின் சிலை. இதைக் கும்பிடு என்று கூறினார். பையனும் கைகூப்பிக் கும்பிட்டான் - அந்தக் கற்சிலையை. சாமி தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த ஓட்டலுக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றார்கள். சோற்றில் சிறு கல் ஒன்றைப் பார்த்துவிட்ட அந்தப் பையன் உற்சாக மிகுதியால், தாத்தா! தாத்தா!! குட்டி சாமி இதோ என்று கும்பிட ஆரம்பித்து விட்டான். உடனே கிழவர் செய்வதறியாது, உடனிருந்தவர் களுடன் கூடி தானும் சிரித்து விட்டார்.
நன்றி: மலையாள மனோரமா, (1979 - மே 3-ஆம் வாரம்) தமிழாக்கம்: ச.ராமசாமி.
No comments:
Post a Comment