அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால் எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.
இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.
இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?
பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?
தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்.
No comments:
Post a Comment