பெரியாரும் வடபுலமும்! தந்தை பெரியார் அவர்கள் எதையும் கண்டு, கேட்டு, படித்து, ஆராய்ந்து, சிந்தித்துத் தெளிவான கருத்துகளை வெளியிட்டவர். வட நாட்டுப் பயணமாக காஷ்மீர் வரை சென்றவர். எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் என்ற இந்துத்-துவாகோட்டையிலேயே தனது கருத்துகளைப் பலத்த எதிர்ப்புக்களைச் சமாளித்து எடுத்துச் சொல்லி எதிரி-யாக நினைத்தவர்களையும் சிந்திக்கத் தூண்டி-யவர். பேரறிஞர் அண்ணா தந்தை பெரி-யாரின் பேச்சை அப்படியே மொழி பெயர்த்துச் சொல்-லச் சொல்லி அங்குள்ள இந்து மதவாதிகளின் மனதிலே ஒரு கேள்-விக்குறியை உண்டாக்கினார். பல முறை பம்பாய், கொல்கத்தா என்றும் சென்று பங்கேற்-றுள்ளார். வடபுலத் தலைவர்கள் பலர் பெரி-யாரின் கொள்-கைகளில் பலவற்றை ஏற்றுக் கொண்-டாலும், கடவுள் மறுப்பு என்பதே பெரிய எதிர்ப்புக்-குள்ளாகி-யிருந்தது. எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று தனது ஏக்கத்தை முதுபெரும் அரசியல்வாதி பாபு ஜகஜீவன் ராம் வெளியிட்டார். தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை, கல்வி_வேலை வாய்ப்பு உரிமைகள், மடமை ஒழிப்பு,- மூடப்பழக்கங்கள் ஒழிப்பு என்பன இருட்ட-டிக்கப்பட்டு ராமர் படம் எரிப்பு, பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு என்பன மட்டுமே வட நாட்டில் திட்டமிட்டுப் பரப்பட்டன. ராமரும்,பிள்ளையாரும் வட நாட்டில் இந்து மதத்தின் அடி வேர்கள் ஆகும். இந்து மத வெறியர்கள் பார்ப்பனரல்லாதாரை மயக்கி வைத்துள்ள பெரும் போதைப் பொருள்களாகவே ராமரும், பிள்ளையாரும் வடக்கே பயன் படுத்தப்படுகின்றனர்.இஸ்லாமிய எதிர்ப்பின் மூல காரணமாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன.. என்னதான் படித்தவர் என்றாலும் வடக்கே இந்த இரண்டிற்கும் அடிமையாக இல்லாதவர்கள் மிகக் குறைவே! இதையெல்லாம் எதிர்த்து பல்லாண்டுகளாகப் போராடி, கடும் முயற்சிகள் பல செய்து கடவுள் மறுப்பாளர்கள் இல்லையென்றாலும் சில வடநாட்டுத் தலைவர்கள் பெரியாரின் அவசியத்தை வடக்கு உணரவேண்டும் என்பதில் முக்கியப் பணி ஆற்றச் செய்த ஆளுமை நமது தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சாரும் மறைந்த சமூகப் பேராளி சந்திரஜித் யாதவ் பல எதிர்ப்புகளைச் சமாளித்துச் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்துப் பெரி-யாரை நன்கு அறிமுகம் செய்து வைத்தார்.-சமூகநீதிக்காகத் தனது அரசையே இழக்கத் துணிந்த மாமேதை மாண்புமிகு வி.பி.சிங் ஆவார். இவர்களது அன்பான ஆதரவுடன் பெரியார் பெருந்தொண்டர்கள் பலரின் ஆதரவுடன் கட்டப்பட்டதுதான் பாம்நோலி பெரியார் மய்யம். அங்கே அருகேயுள்ள கிராமத்தவர்களுக்குக் கல்வி,கணினி, உடல்நலம் என்று பல ஆக்கப் பணி-களைச் செய்து வந்தது அந்த மய்யம். பல தலைவர்கள் வந்து நேரிலே பார்த்துப் பாராட்-டினர். தமிழகத்துத் தலைவர்கள் கருப்பையா மூப்-பனார் போன்றவர்களும் நேரிலே பார்த்துப் பாராட்-டினர். அந்த மய்யத்தின் தொண்டு மற்றவர்களிடம் பரவ ஆரம்பித்தது அங்குள்ள இந்து மத வெறியர்களின் கண்ணையுறுத்தி மனதில் பெரும் புகைச்சலை உண்டாக்கியது. திட்டமிட்டு சில மணி நேரத்திலே அந்த அழகுரு மய்யத்தைத் தரை மட்டமாக்கினர். பலர் கொந்தளித்தனர். எந்த சந்தர்ப்பத்திலும் நமது முன்னேற்றமே முக்கியம் என்ற தந்தை பெரியாரின் மூளையைக் கணினியாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள் பல நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பேயியிடம் வாங்கிய இடந்தான் இப்-போது புதுடில்லியின் முக்கிய இடத்திலே அமைக்-கப்பட்டுள்ள புதுடில்லி பெரியார் மய்யம். எப்-போதும் போல பல பெரியார் தொண்டர்களின் அன்பளிப்பே இந்தமய்யத்தின் அடித்தளம்.பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆசிரியப் பெருமக்கள், துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் இவர்களது அறிவாற்றல் அங்கே புதிய கட்டுமானத் திட்டங்கள், கட்டடப் புதுமைகள்,புது நூற்றாண்டின் புது வழி முறைகள். இந்த மய்யம் ஏற்றமிக உருவாக உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் உல-கெங்கும் உள்ள பெரியார் தொண்டர்களின் இதயத்-தின் நன்றிகள். திறப்பு விழாவைச் சிறப்பு செய்ய வரும் அத்துணைப் பெருந்தலைவர்கள்,-தொண்டர்கள்,-நல்லுள்ளங்கள் பெரியாரின் தாக்கத்தால் தங்கள் வாழ்-வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் என்பது உலகத்திற்கு இந்த மய்யத்தின் பெருமையைப் பறை சாற்றும். இந்த மய்யத்தின் முதல் நிகழ்வே "சமூக நீதிக் கருத்தரங்கு ".இந்தியாவின் ஆற்றல் மிகு செயல் வீரர்கள் இதிலே பங்கு பெறுகிறார்கள்.-அவர்-களின் கூடல் சமூக நீதியின் செயல் பாடுகளாகப் புதுடில்லியில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக சமூக நீதிக் குடையின் கீழே மழைக்காலத்தில் மட்-டும் ஒதுங்கும் அரசியல்வாதிகளையும், எப்போதும் இயங்கும் ஆக்கமிகு தொண்டர்களையும்,-உணர்வாளர்களையும் இணைக்க இந்த மய்யம் பயன்படும். சமூக நீதியின் மூளை ஆற்றலாக இந்த மய்யம் பயன்பட சமூகநீதியின் உயிர்த் துடிப்பாக இயங்கும் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் திட்டங்கள் தீட்டப்படட்டும்! செயல்கள் தொடரட்டும்! பெரியார் வட புலத்தில் வாழ்கின்றார். எதிர்கால இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்-பட்டோரும் உண்மையான விடுதலை பெற்று ஆட்சியில் உண்மையான பங்கையும் பெற்று வாழ, பெரியார் வடக்கே சென்றுள்ளார் என்பதே இந்த மய்யத்தின் செயல் பாடாகட்டும்! வாழ்க பெரியார்! டாக்டர் சோம.இளங்கோவன் இயக்குநர், பெரியார் பன்னாட்டு மய்யம், சிகாகோ | |
Wednesday, May 19, 2010
பெரியாரும் வடபுலமும்!
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment